For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2020 : ஏகாதசியில் அல்வா கிண்டி ரதசப்தமியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது அன்றைய தினம் ரத சப்தமி சூரியனுக்கு உகந்த நாளாகும். ஜனவரி 20 ஆம் தேதி ஏகாதசி, இது பெருமாளுக்கு உகந்த நாளாகும். ஏகாதசி நாளில் அல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன் - வீடியோ

    மதுரை: எந்த செயலும் செய்வதற்கு முன்பு ஸ்வீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பட்ஜெட் தயாரிக்க அல்வா கிண்டி ஆரம்பித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இனிப்பு காரகர் சுக்கிரன். குரு தன காரகர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பாக எல்லோருக்கும் சுக்கிரனுக்கு பிடித்தமான இனிப்பான அல்வாவை கொடுத்திருக்கிறார். நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பை ஆரம்பித்த நாள் ஏகாதசி அவர் பட்ஜெட் தாக்கல் செய்யப்போகும் பிப்ரவரி 1 தேதி சூரியனுக்கு உகந்த ரத சப்தமி நாளாகும். இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகள், வேலைக்கு போய் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் ஆக இருக்குமா பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க நிர்மலா சீதாராமன் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் 350 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றியமைப்போம் என்று கூறினார் பிரதமர் மோடி.

    நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவான 5 சதவீதமாக வீழச்சியடைந்து உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மோசமாகச் செயல்பட்டதாலும், வேலையின்மை அதிகரிப்பாலும் வளர்ச்சி குறைந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்த நிலையில், 2வது காலாண்டில் 4.5 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை, வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை, கட்டமைப்பு திட்டங்களுக்குச் செலவிடவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன.

    உலக வங்கி அறிக்கை

    உலக வங்கி அறிக்கை

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019- 2020 நிதியாண்டில் 5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது குறைந்து வருவதும் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2020 - 2024ம் ஆண்டில் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த 2013 - 2017ம் ஆண்டின் சராசரியான 7.4 சதவிகிதத்தினை விட குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

    வருமான வரி அடுக்குகள்

    வருமான வரி அடுக்குகள்

    பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கார்பரேட் நிறுவன வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் 30 சதவிகிதம் வரை வரி செலுத்துகின்றனர். வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவர்களுடைய வரி வரம்பு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள அவரது இரண்டாவது மத்திய பட்ஜெட்டில், இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானால் வருமான வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்படும்.

    5 லட்சம் வருமான வரி விலக்கு

    5 லட்சம் வருமான வரி விலக்கு

    ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. எனவே எதிர்வரும் 2020-21 பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிப்புகள் இடம்பெறும் சாத்தியம் குறைவு. 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டில் ஆண்டு வருவாய் அடுக்கில் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குறைந்தபட்ச வருமான வரி வரம்பு மாற்றப்படுவதால் அதிக பயன்பெறுபவர்கள் இவர்களாகவே இருப்பார்கள்.

    பட்ஜெட்டில் சலுகை கிடையாது

    பட்ஜெட்டில் சலுகை கிடையாது


    தற்போது வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமானால், இதுபோன்ற வரி விலக்கு சலுகைகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இந்தியாவின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக முதலீடுகள் குறைந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி பலவீனமாகியுள்ளது. நிறுவனங்களின் வரியைக் குறைத்தபோதே, பல நிறுவனங்கள் இத்துடன் வருமான வரி வரம்பையும் தளர்த்தி வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

    கிரகங்கள் சொல்வதென்ன

    கிரகங்கள் சொல்வதென்ன

    பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளன்று நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் சந்திரன், மிதுனம் ராசியில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் கேது குரு, மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் புதன் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரக நிலைகள் குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்குமா? பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் பட்ஜெட்டாக இருக்குமா என்று பார்க்கலாம்.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman will present her second Union Budget on February 1 as announced by the Modi government. The Budget 2020 speech will begin at 11 AM.The Year 2020 has a lot of speculations regarding budget and financial changes.As per the 2020 finance astrology, being in a good financial position reflects the state of your health and wealth which, in turn, also affects your lifestyle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X