For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீர்சுருக்கு நோய் அடிக்கடி வருகிறதா? உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை பாருங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அக்னி நக்ஷத்திரம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் இன்னும் வெயிலின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. சில இடங்களில் அவ்வபோது மழை பெய்தாலும் சென்னை உட்பட பல இடங்களில் வெப்பமான சீதோஷனமே நிலவுகிறது. வெயில் காலம் வந்துவிட்டாலே பலரும் சிறுநீர்ப்பாதை தொற்று யூரினரி டிராக்ட் இன்பெக்க்ஷன்(யூடிஇ) எனும் நோயினால் அவதி படுவதை காண முடிகிறது.

இந்த அவஸ்தையான வியாதி வந்துவிட்டால் சொல்லவும் முடியாது. மெல்லவும் முடியாது. அப்படி ஒரு அவஸ்தை. அதுதாங்க. நீர்கடுப்பு எனும் நீர்சுருக்கு நோய். கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளை சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். 50 சதவீத பெண்கள் இந்நோயினால் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 20 முதல் 30 சதவீத பெண்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக அரிதாக காணப்படு கிறது. காரணம் ஆண்கள் மற்றும் பெண் உறுப்புகளின் மாற்றமே. பெண்களுக்கு ஆசன வாய்க்கும், யூரித்திராவிற்கும் இடைவெளி குறைவு. எனவே பெண்களை நோய் பலவிதத்தில் பாதிக்கிறது. கருவுற்ற காலத்தில் இந்நோய் பாதிப்பு தொற்றினால் சிறுநீரக பாதிப்புகூட ஏற்படும்.

கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது.

நோய்க்கான அறிகுறிகள்:

நோய்க்கான அறிகுறிகள்:

நீர் கடுப்ப எனும் நீர்சுருக்கு உள்ளவர்களுக்கு சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாகப் போக வேண்டும் என்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

நீர் சுருக்கு நோயிற்க்கான ஜோதிட காரணங்கள்:

நீர் சுருக்கு நோயிற்க்கான ஜோதிட காரணங்கள்:

நீர்சுருக்கு நோயிற்க்கு காரண பாவங்களாக கால புருஷனுக்கு ஏழு மற்றும் எட்டாம் வீடுகளையும் அதன் அதிபதிகளையுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த விதத்தில் இதற்க்கு முக்கிய காரண கர்தா நம்ம சுக்கிரன் தாங்க. கால புருஷனுக்கு ஏழாம்வீடு எனும் துலா ராசி சிறுநீரகத்தனையும் அதனால் ஏற்படும் நோய்களையும் குறிக்கிறது. எனவே சிறுநீரக கோளாருகளுக்கு காரக கிரகம் சுக்கிரனாவார்.

கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்களை குறிக்கிறது. அதன் அதிபதி செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றார். அரிப்பு எரிச்சல் கடுப்பு போன்றவற்றை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். உடம்பின் நீர் தேவையினை தெரிவிக்கும் கிரகம் சந்திரனாகும். நீர் சத்து குறைவினால் நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நீர் சுருக்கு நோயாக ஆரம்பித்து அதனை கவனியாமல் விடும்போது உள்ளாடைகளில் ஏற்படும் ஈரத்தின் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு யூரினரி இன்பக்ஷன் எனும் மூத்திர தாரை நோயாக மாறுகிறது. அந்த நிலையில் சனி மற்றும் கேதுவின் தொடர்பு பெற்றுவிடுகிறது.

நீர்சுருக்கினை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்:

நீர்சுருக்கினை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்:

1.மேஷம், சிம்மம், தனுசு ஆகிய உஷ்ன ராசிகளை ராசியாகவோ லக்னமாகவோ கொண்டவர்களுக்கு நீர்கடுப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிலும் லக்னமோ லக்னாதிபதியோ நெரும்பு கிரஹங்களான சூரியன், செவ்வாய் கேது ஆகிய கிரஹங்களின் சாரத்தில் நின்றுவிட்டால் அவர்கள் படும் அவஸ்தையை சொல்லி மாளாது.

2.எந்த ராசி/லக்ன காரர்களாக இருந்தாலும் கால புருஷ ஏழு எட்டு அதிபதிகளளான சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்தனை பெற்று நின்று அந்த கிரகங்களை கோசார சூரியன், செவ்வாய் கடக்கும்போது நீர்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

3. நீர்கிரஹமான சந்திரன் எட்டாமிட தொடர்பு பெற்றுவிட்டால் நீர்சுருக்கு அதிகம் ஏற்படுகிறது. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் எட்டாமதிபதியாக நிற்பது, எட்டாமதிபதியோடு சேர்ந்து நிற்பது, கால புருஷனுக்கு எட்டாவது ராசியில் சந்திரன் நீசமடைந்து கேதுவோடு இணைந்து நின்றாலும் நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது.

4. நீர் கிரஹங்களில் முக்கியமாக சுக்கிரன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற

அசுப கிரஹ தொடர்பு பெற்றுவிட்டால் நீர்சுருக்கு நிச்சயம். நமது உடம்பில் சிறுநீரகத்தின் காரகர் சுக்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது.

5. செவ்வாய் சுக்கிரனின் நக்ஷத்திரங்களில் நின்று அவருக்கு சனியின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் சிறுநீரக அழற்ச்சி மற்றும் நீர்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

6.சந்திரன் கேது சாரம் பெற்று அவரை உஷண கிரகங்கள் கடக்கும்போதெல்லாம் நீர்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

7.சூரியனின் நக்ஷத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தில் லக்னமோ அல்லது ராசியோ அமைந்து அந்த அந்த நக்ஷத்திரங்களை சுக்கிரன் அல்லது செவ்வாய் கடக்கும்போது நீருசுருக்கு நோய் ஏற்படுகிறது.

8.நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு 6/8/12. வீடுகளாக அமையப்பெற்றவர்களுக்கு அந்த வீடுகளை கோசாரத்தில் சுக்கிரன் கடக்கும்போது நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது.

9. சந்திரன் 6/8/12 அதிபதிகளாகி அவர் கோச்சாரத்தில் நெருப்பு கிரக சேர்க்கை பெருவது மற்றும் நெருப்பு ராசிகளை கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

10. பொதுவாகவே எந்த ராசியாக இருந்தாலும் ஜெனன சந்திரனை கோசாரக சூரியன் மற்றும் செவ்வாய் கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

ஜோதிட பரிகாரங்கள்:

ஜோதிட பரிகாரங்கள்:

1.நீர சுருக்கு நோயிற்க்கு சந்திரனின் காரகமான நீரை நிறைய குடிப்பது மற்றும் நீர்மோர் நிறைய குடிப்பது சிறந்த பரிகாரமாகும்.

2. சுக்கிரனின் காரகம் பெற்ற இளநீர் மற்றும் பழரசம் அருந்துவது சிறந்த பரிகாரமாகும்.

3. பெண்கள் வெள்ளி கிழமையிலும் ஆண்கள் சனிக்கிழமையிலும் எண்ணை தேய்த்து குளிப்பது.

4. சுக்கிரனின் காரகம் பெற்ற குங்கிலய பற்பம், நன்னாரி சர்பத், வெட்டிவேர் கலந்த நீர் பருகுவது.

5. நெருஞ்சில் கஷாயம், நீர்முள்ளி கஷாயம் சந்திரபிரபா வடி போன்ற மருந்துகளை உட்கொள்வது.

6. பாணகம், நீரமோர் போன்றவற்றை சுக்கிரனுக்கு நிவேதனம் செய்து வினியோகம் செய்வது.

7. சந்திரனின் காரகம் பெற்ற குளியல் தொட்டியில் சிறிதுநேரம் நீரில் அமிழ்திருப்பது.

8. சந்திரனின் காரகம் பெற்ற பி-2 எனப்படும் ரிபோஃப்ளோவின் எனும் மாத்திரை எடுத்துக்கொள்வது.

9. சுக்கிரனுக்கு குங்கிலிய தூபம் ஏற்றுவது.

10.சனியின் காரகம் பெற்ற சுண்ணாம்பை கால் கட்டை விரலில் தடவிக்கொள்வது மற்றும் விளக்கெண்ணையை உள்ளங்காலில் தடவிக்கொள்வது போன்றவை நீர்சுருக்கு நோயை உடனடியாக குறைக்கும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786

English summary
A urinary tract infection (UTI) is an infection from microbes. These are organisms that are too small to be seen without a microscope. Most UTIs are caused by bacteria, but some are caused by fungi and in rare cases by viruses. UTIs are among the most common infections in humans. A UTI can happen anywhere in your urinary tract. Your urinary tract is made up of your kidneys, ureters, bladder, and urethra. Most UTIs only involve the urethra and bladder, in the lower tract. However, UTIs can involve the ureters and kidneys, in the upper tract. Although upper tract UTIs are more rare than lower tract UTIs, they’re also usually more severe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X