For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெயில் கால நீர் சுருக்கு.... எரிச்சலா? என்ன பரிகாரம் செய்யலாம்?

வெயில் காலம் வந்துவிட்டாலே பலருக்கு நீர்கடுப்பு எனும் நீர்சுருக்கு நோய் பாதிப்பு அதிகரிக்கும் அதை தடுக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வெயில் காலம் வந்துவிட்டாலே பலருக்கு இந்த அவஸ்தையான வியாதி வந்துவிடும். சொல்லவும் முடியாது. மெல்லவும் முடியாது. அப்படி ஒரு அவஸ்தை. அதுதாங்க. நீர்கடுப்பு எனும் நீர்சுருக்கு நோய்.

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

Urinary tract infections how to Cure Through Astrology?

கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது.

நோய்க்கான அறிகுறிகள்:

நீர் கடுப்ப எனும் நீர்சுருக்கு உள்ளவர்களுக்கு சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாகப் போக வேண்டும் என்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

நீர் சுருக்கு நோயிற்க்கான ஜோதிட காரணங்கள்:

நீர்சுருக்கு நோயிற்கு காரண பாவங்களாக கால புருஷனுக்கு ஏழு மற்றும் எட்டாம் வீடுகளையும் அதன் அதிபதிகளையுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த விதத்தில் இதற்கு முக்கிய காரண கர்தா நம்ம சுக்கிரன் தாங்க.

கால புருஷனுக்கு ஏழாம்வீடு எனும் துலா ராசி சிறுநீரகத்தனையும் அதனால் ஏற்படும் நோய்களையும் குறிக்கிறது. எனவே சிறுநீரக கோளாருகளுக்கு காரக கிரகம் சுக்கிரனாவார்.

கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்களை குறிக்கிறது. அதன் அதிபதி செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றார். அரிப்பு எரிச்சல் கடுப்பு போன்றவற்றை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்

உடம்பின் நீர் தேவையினை தெரிவிக்கும் கிரகம் சந்திரனாகும். நீர் சத்து குறைவினால் நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் நீர் சுருக்கு நோயாக ஆரம்பித்து அதனை கவனியாமல் விடும்போது உள்ளாடைகளில் ஏற்படும் ஈரத்தின் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு யூரினரி இன்பக்ஷன் எனும் மூத்திர தாரை நோயாக மாறுகிறது. அந்த நிலையில் சனி மற்றும் கேதுவின் தொடர்பு பெற்றுவிடுகிறது.

நீர்சுருக்கினை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்:

1. எந்த ராசி/லக்ன காரர்களாக இருந்தாலும் கால புருஷ ஏழு எட்டு அதிபதிகளளான சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்தனை பெற்று நின்று அந்த கிரகங்களை கோசார சூரியன், செவ்வாய் கடக்கும்போது நீர்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

2. கால புருஷனுக்கு எட்டாவது ராசியில் சந்திரன் நீசமடைந்து கேதுவோடு இணைந்து நின்றாலும் நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது.

3. செவ்வாய் சுக்கிரனின் நக்ஷத்திரங்களில் நின்று அவருக்கு சனியின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் சிறுநீரக அழற்ச்சி மற்றும் நீர்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

4. சந்திரன் கேது சாரம் பெற்று அவரை உஷண கிரகங்கள் கடக்கும்போதெல்லாம் நீர்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

5. சூரியனின் நக்ஷத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தில் லக்னமோ அல்லது ராசியோ அமைந்து அந்த அந்த நக்ஷத்திரங்களை சுக்கிரன் அல்லது செவ்வாய் கடக்கும்போது நீருசுருக்கு நோய் ஏற்படுகிறது.

6. நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு 6/8/12. வீடுகளாக அமையப்பெற்றவர்களுக்கு அந்த வீடுகளை கோசாரத்தில் சுக்கிரன் கடக்கும்போது நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது.

7. சந்திரன் 6/8/12 அதிபதிகளாகி அவர் கோச்சாரத்தில் நெருப்பு கிரக சேர்க்கை பெருவது மற்றும் நெருப்பு ராசிகளை கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

8. பொதுவாகவே எந்த ராசியாக இருந்தாலும் ஜெனன சந்திரனை கோசாரக சூரியன் கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.

ஜோதிட பரிகாரங்கள்:

1. நீர சுருக்கு நோயிற்க்கு சந்திரனின் காரகமான நீரை நிறைய குடிப்பது மற்றும் நீர்மோர் நிறைய குடிப்பது சிறந்த பரிகாரமாகும்.

2. சுக்கிரனின் காரகம் பெற்ற இளநீர் மற்றும் பழரசம் அருந்துவது சிறந்த பரிகாரமாகும்.

3. பெண்கள் வெள்ளி கிழமையிலும் ஆண்கள் சனிக்கிழமையிலும் எண்ணை தேய்த்து குளிப்பது.

4. சுக்கிரனின் காரகம் பெற்ற குங்கிலய பற்பம், நன்னாரி சர்பத், வெட்டிவேர் கலந்த நீர் பருகுவது.

5. நெருஞ்சில் கஷாயம், நீர்முள்ளி கஷாயம் சந்திரபிரபா வடி போன்ற மருந்துகளை உட்கொள்வது.

6. பாணகம், நீரமோர் போன்றவற்றை சுக்கிரனுக்கு நிவேதனம் செய்து வினியோகம் செய்வது.

7. சந்திரனின் காரகம் பெற்ற குளியல் தொட்டியில் சிறிதுநேரம் நீரில் அமிழ்திருப்பது.

8. சந்திரனின் காரகம் பெற்ற பி-2 எனப்படும் ரிபோஃப்ளோவின் எனும் மாத்திரை எடுத்துக்கொள்வது.

9. சுக்கிரனுக்கு குங்கிலிய தூபம் ஏற்றுவது.

English summary
Summers are here and now we should be ready to cope up with various summer diseases. Here are some ways to prevent summer dehydration and urinary tract infections, and urinary tract infection treatments: Drink plenty of water daily. Cut down on caffeine. Avoid excessive alcohol consumption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X