For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி மாத உற்பத்தி ஏகாதசி - விரதமிருந்தால் பகையை வெல்லலாம்

மார்கழி தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படும். பகையை வெல்ல உதவும். ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று

Google Oneindia Tamil News

மதுரை: ஏகாதசி விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார் பகவான் கிருஷ்ணர். இன்று உற்பத்தி ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது. இந்த ஏகாதசி விரதம் இருந்தால் பகையை வெல்லலாம்.

கிருத யுகத்தில் முரன் என்னும் ஒர் அசுரன் மிக்க வலிமையுடையவனாக இருந்தான் தேவர்கள், முனிவர்கள் எல்லோ ரையும் கொடுமை படுத்தி வந்தான். இதனால் துன்ப மடைந்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனோ அவர்களை மகாவிஷ்ணுவை சரணடையும்படி கூறினார். அனைவரும் மகாவிஷ்ணுவை சரணடைந்து அசுரன் முரனின் கொடுமைகளை எடுத்துச் சொல்லி தங்களை காத்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவரும் காத்தருள் வதாக கூறினார்.

Utpanna Ekadashi or Uttpatti Ekadashi viratham benefits

முரனுடன் மகாவிஷ்ணு போர்புரிய தொடங்கினார். சாதாரணமாக போர் ஒரு முடிவுக்கு வரவில்லை. சுமார் 1000 ஆண்டுகள் போர் நடந்தது. சற்று களைப்பாறுவதற்கு பத்ரியிலுள்ள ஒரு குகையில் மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அயர்ந்து ஓய்வெடுக்கும் போது அசுரன் முரன் அவரை கொல்ல முற்பட்டான்.

அச்சமயத்தில் மகா விஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு பெண் தோன்றினாள். அவள் அந்த அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். உறக்கத்திலிருந்து விழித்த மகாவிஷ்ணு நடந்த நிகழ்ச்சிகளை அறிந்தார். அந்த பெண்ணைப் பாராட்டி ஏகாதசி என்ற பெயரை சூட்டி 11 வது திதியான ஏகாதசி திதியானாள்.

ஏகாதசியே ! நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார். இந்த ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது.

English summary
Utpanna Ekadashi or 'Uttpatti Ekadashi' as it also known, is observed on the 'ekadashi' 11th day of the Krishna Paksha during the Margazhi month of the Hindu calendar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X