For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைப்பூச நாளில் கிழக்கில் சூரிய உதயம் மேற்கில் முழு நிலவு நடுவில் ஜோதி தரிசனம் - வடலூரில் அற்புதம்

தைப்பூச நாளன்று காலையில் சூரியன் உதயமாகும் சமயத்தில், ஏழு திரைகளும் விலகி ஜோதி தரிசனம் நிகழும்போது, கிழக்கு திசையில் சூரியன் உதயமும், சத்திய ஞானசபையின் மேற்கு திசையில் முழு நிலவும் நடுவில் சத்திய ஞான

Google Oneindia Tamil News

மதுரை: வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும் தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் வரும் பூச நட்சத்திர தினத்தன்று, சத்திய ஞானசபையில் ஏழு திரைகளும் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டாலும், தைப்பூச நாளன்று ஜோதி தரிசனம் நிகழ்வது வெகு சிறப்பாகும். இந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளன்று காலையில் சூரியன் உதயமாகும் சமயத்தில், ஏழு திரைகளும் விலகி ஜோதி தரிசனம் நிகழும்போது, கிழக்கு திசையில் சூரியன் உதயமும், சத்திய ஞானசபையின் மேற்கு திசையில் முழு நிலவும் நடுவில் சத்திய ஞானசபையில் ஜோதியும் தரிசனமாகும் அற்புதம் நிகழும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்னவர் வள்ளலார். இறைவன் ஒருவனே, அவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் சத்திய ஞான சபையை நிறுவியர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தற்கு அருகில் மருதூர் என்னும் கிராமத்தில் கி.பி. 1823ஆம் ஆண்டு பிறந்தார்.

Vadalur Vallalar United with Lord in the form of Jyothi on Thai Pusam Day

வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று, சத்திய ஞான சபை என்னும் தரும சாலையை நிறுவினார் வள்ளலார் என்னும் ராமலிங்க அடிகளார். அன்று முதல் இன்று வரையிலும் தருமசாலையை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு நாள்தோறும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த தர்மசாலைக்கு, தமிழக அரசு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், சத்திய ஞானசபையில் ஏழு திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி, உள்ளே வள்ளலார் ஏற்றி வைத்த ஜோதி தரிசனம் செய்யும் மரபு உள்ளது. சத்திய ஞான சபையில், ஆறு திரைகளும் ஒவ்வொரு நிறத்திலும், ஏழாவது திரை எல்லா நிறங்களும் கலந்த வண்ணத் திரையாக இருக்கும்.

Vadalur Vallalar United with Lord in the form of Jyothi on Thai Pusam Day

கறுப்புத் திரையானது மாயாசக்தியை குறிக்கும், நீலத்திரை என்பது கிரியா சக்தி, பச்சை நிறத்திலான திரை அன்னை பராசக்தியைக் குறிக்கும், சிவப்பு வண்ணம் இச்சா சக்தியையும், மஞ்சள் நிறத்தோடு கூடிய பொண்வண்ண திரையானது ஆதிசக்தியையும், கலப்பு வண்ணம் சிற்சக்தியை குறிக்கும் என்றும் சன்மார்க்க சங்கத்தினர் விளக்கமளிக்கின்றனர்.

ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் செய்ய தைப்பூச நாளை தேர்வு செய்ததற்கு காரணம், இறைவன் ஜோதி வடிவானவன். அவனை நாம் எளிதில் காண முடியாத படி, நம்முடைய மனத்தை ஆசை, மாயை போன்ற குணங்கள் திரைகளாக மாறி மறைத்து நிற்கின்றன. ஒரு உண்மையான பக்தன் இவற்றை எல்லாம் விலக்கி இறைவனை ஜோதி வடிவில் தரிசிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, வள்ளலார் பல வண்ணத் திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் செய்யும் முறையை கொண்டுவந்தார்.

Vadalur Vallalar United with Lord in the form of Jyothi on Thai Pusam Day

அதோடு, பூச நட்சத்திரம் ஞானத்துடன் தொடர்புடையது. இதனாலேயே, ஜோதி தரிசனத்திற்காக, சத்திய ஞானசபையில் ஞானத்தோடு தொடர்புடைய தைப்பூச நாளை தேர்வு செய்தார் ராமலிங்க அடிகளார். மேலும் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயன காலமே, மோட்சத்திற்கு சிறந்த காலம் என்பதாலும், உத்தராயண கால தொடக்க மாதமான தை மாத பூச நட்சத்திர தினத்தை ஜோதி தரிசனத்திற்கு தேர்வு செய்தார்.

மேலும், தைப்பூச நன்னாளில், தான் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் ஒளிவடிவம் பெற்று, இறைவனோடு ஜோதி வடிவில் கலந்துவிட்டார். இறைவன் ஜோதி வடிவில் இருப்பதாலேயே அவரும் ஜோதி வடிவில் இறைவனோடு ஐக்கியமாகிவிட்டார். ஒவ்வொரு மாதமும் வரும் பூச நட்சத்திர தினத்தன்று, சத்திய ஞானசபையில் ஏழு திரைகளும் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டாலும், தைப்பூச நாளன்று ஜோதி தரிசனம் நிகழ்வது வெகு சிறப்பாகும்.

Vadalur Vallalar United with Lord in the form of Jyothi on Thai Pusam Day

இதற்கு காரணம், தைப்பூச நாளன்று காலையில் சூரியன் உதயமாகும் சமயத்தில், ஏழு திரைகளும் விலகி ஜோதி தரிசனம் நிகழும்போது, கிழக்கு திசையில் சூரியன் உதயமும், சத்திய ஞானசபையின் மேற்கு திசையில் முழு நிலவும் நடுவில் சத்திய ஞானசபையில் ஜோதியும் தரிசனமாகும் அற்புதம் நிகழும். அதாவது, மனிதனின் மூன்று தேகங்களும் ஒளி பெறுவதை சூரிய, சந்திர ஜோதி தரிசனம் சுட்டிக்காட்டுவதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
It is customary to celebrate the Jyothi Darshan on Thai Pusam day annually in Vadalur Sathya Gnana Sabai, founded by Vallalar. The Thai Pusam Festival is celebrated on 8th February this year. Each month, on the Pusam Star Day, all the seven curtains in the Vadalur Sathya Gnana Sabai are excluded, but on Thai Pusam day, the torch is very special.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X