• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகாசி பிறந்தாச்சு... ராசி பலன் பாருங்க

By Kr Subramanian
Google Oneindia Tamil News

வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி எனவும், பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் "மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் நீராடல் பூரணத்வமானது என விஷ்ணு ஸ்மிருதி சிறப்பாகக் கூறுகிறது.

மாதவம் ஸகலம் மாஸம் துலஸ்யாயோ அர்ச்சாயேன்னா' என்றபடி துளசி பத்ரங்களால் அர்ச்சித்து, அதிக நற்பலன்கள் பெற்று புண்ணியம் அடைகின்ற பெரும் தவம் நிறைந்த மாதம் வைகாசி.

Vaikasi Month Rasi Palan

வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில். எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமாள் அவதரித்தார். முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம். அதன் காரணமாகவே முருகன் விசாகன் என்று அழைக்கப்படுகிறான்.

வைணவப் பெரியவர் நம்மாழ்வார், ஆழ்வார்திருநகரி என்ற தலத்தில் விசாக நாளில் அவதரித்தார்.

ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் மறைந்திருக்கும் அகோபிலம் நரசிங்கமூர்த்தி, வைகாசி விசாகத்தில்தான் சந்தனக் காப்பைக் களைந்து விக்கிரக உருவத்தில் காட்சி தருவார். அதன்பின் அடுத்த வைகாசி விசாகத்தில்தான் நரசிங் மூர்த்தியை முழுமையாக மீண்டும் தரிசிக்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகாசி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - வைகாசி 32ம் தேதி மிதுனம் ராசிக்கு மாறுகிறார்.
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - வைகாசி 16ம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

ராசி நாதன் செவ்வாய் தனஸ்தானத்தில் இருப்பது பண வரவை அதிகரிக்கச் செய்யும் அதே சமயம் பேச்சில் கோபம் அதிகரிக்கும் இரண்டு ஏழுக்குடைய சுக்கிரன் மூன்றாம் இடத்திலிருப்பது இம்மாதம் பதினாராம் தேதி வரை அலைச்சலைக் கொடுக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். மூன்று ஆறுக்குடைய புதன் குடும்பஸ்தானத்தில் இருப்பது குடும்பத்தில் பிரச்சினையைத் தரும் கடன் வாங்கும் நிலையை உருவாக்கும். ஐந்துக்குடைய சூரியன் குடும்பஸ்தானத்தில் இருப்பது பூர்வீகச் சொத்துக்கள் மூலம் பண வரவைத் தரும், குழந்தைகளின் படிப்பை மேன்மையுறச் செய்யும். பாக்கியாதிபதி குரு நான்கில் உச்சம் பெற்று நிற்பது புதிய வீடு கட்டும் எண்ணத்தை நிறைவேற்றும், வாகன யோகம் தரும். ஜீவன லாப ஸ்தானாதிபதி சனி அஷ்டமத்தில் நிற்பது நல்லதல்ல தொழில் ரீதியாக பலவித கஷ்டங்களைத் தரும், எதிர் பார்த்த லாபம் கிடைக்காது. ராகு ஆறில் நிற்பது தைரியத்தைத் தரும், எதிரிகளை வெல்லும் திறனைத் தரும். கேது பன்னிரெண்டில் நிற்பது ஆன்மீக ரீதியான செலவ்களையும், மருத்துவ செலவுகளையும் தரும்.

வைகாசி மாதம் 18ம் தேதி பகல் 01-07 மணி முதல் 20ம் தேதி இரவு 07-50 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

ரிஷபம்

ராசி நாதன் சுக்கிரன் தனஸ்தானத்தில் இருப்பது பண வரவை அதிகரிக்கச் செய்யும் குடும்பத்தில் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். இரண்டு ஐந்துக்குடைய புதன் ராசியில் இருப்பது குழந்டைகளால் மன சந்தோஷத்தையும் கடவுள் பக்தியையும் மேம்படுத்தும். நான்காமதிபதி சூரியன் ராசியில் இருப்பது அரசு குடியிருப்பு கிடைக்கும், அரசாங்க வாகன யோகம் உண்டாகும். ஏழு-பன்னிரெண்டுக்குரிய செவ்வாய் ராசியில் இருப்பது கணவன்-மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும், மனைவிக்காக செலவுகளும் அதிகரிக்கும். எட்டு-பதினொன்றுக்குரிய குரு மூன்றாமிடத்தில் இருப்பது சகோதரர்களால் கஷ்ட நஷ்டங்களையும் பகைமை உணர்வையும் உண்டாக்கும். பாக்கியாதிபதி மற்றும் ஜீவனாதிபதி சனி ஏழில் இருப்பது மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும், தொழில் விருத்தியைத் தரும். ராகு ஐந்தில் இருப்பது குழந்தகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்று சுட்டிகாட்டுகிறது. கேது பதினொன்றில் இருப்பது மனதில் நினைத்த காரியங்களை வெற்றியுடன் முடிக்க உறுதுணை செய்யும், பெரியவர்களுடன் சச்சரவையும் ஏற்படுத்தும். வைகாசி மாதம் 20ம் தேதி இரவு 07-50 மணி முதல் 22ம் தேதி இரவு 12-19 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கனம் தேவை.

மிதுனம்

ராசியதிபதியும் சுகஸ்தானாதிபதியுமான புதன் விரயஸ்தானத்தில் அமர்ந்திருப்பது வீடு மற்றும் வாகன வகைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும், மேல் படிப்பிற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். மூன்றாமதிபதி சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது வெளிநாடு செல்லும் நிலை உருவாகும், இடமாற்றம் ஏற்படும். ஐந்து-பன்னிரெண்டுக்கு அதிபதி சுக்கிரன் ராசியில் இருப்பது குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆறு-பதினொன்றுக்கு அதிபதி செவ்வாய் பன்னிரெண்டில் இருப்பது உடல் ஆரோக்கியம் சீர்கெடும் நிலையை உருவாக்குகிறது மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் நிலை உண்டாகும். ஏழு-பத்துக்குடைய தன காரகன் குரு தனஸ்தானத்தில் உச்சம் பெற்று நிற்பது தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் பண வரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். எட்டு-ஒன்பதுக்குறிய சனி ஆறில் நிற்பது தகப்பனாருடன் விரோதத்தை உருவாக்கும், மனதில் கஷ்டங்கள் அதிகரிக்கும். நான்கில் ராகு இருப்பது அம்மாவின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பத்தில் கேது நிற்பது தொழிலில் எதிரிகளையும் போட்டியையும் உருவாக்கும். வைகாசி மாதம் 22ம் தேதி இரவு 12-19 மணி முதல் 24ம் தேதி இரவு 03-41 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கடகம்

ராசியதிபதி சந்திரன் பாக்கியத்தில் அமர்ந்த நிலையில் மாதம் துவங்குகிறது குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். இரண்டாம் அதிபதி சூரியன் பதினொன்றில் இருப்பது தொழில் லாபத்தையும், செல்வச்சேர்க்கையும் அதிகரிக்கச்செய்யும். மூன்று-பன்னிரெண்டுக்கு அதிபதி புதன் லாபஸ்தானதில் இருப்பது சகோதரர்களால் நன்மையையும், அதிக செலவினங்களையும் உருவாக்கும். நான்கு-பதினொன்றாம் அதிபதி சுக்கிரன் விரயத்தில் அமர்ந்திருப்பது காரியத் தடையையும் வீட்டை அழகுபடுத்துவதில் செலவையும் தரும். யோகாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் அமர்ந்திருப்பது தொழிலில் லாபத்தையும், பூர்வீக சொத்திலிருந்து வருமானத்தையும் உண்டாக்கும். பாக்கியாதிபதி குரு ராசியில் உச்சம் பெற்று நிற்பது தந்தை மூலம் பணவரவைத் தரும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏழு-எட்டுக்குடைய சனி ஐந்திலிருப்பது கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்யும் மேலும் ஏதோ ஒரு வகையில் மன பாரத்தைக் கொடுக்கும். ராகு மூன்றிலிருப்பது மன தைரியத்தை அதிகரிக்கும் கேது ஒன்பதில் இருப்பது குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையைத் தரும். வைகாசி மாதம் 24ம் தேதி இரவு 03-41 மணி முதல் 27ம் தேதி காலை 06-40 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

சிம்மம்

ராசியதிபதி சூரியன் பத்தில் இருப்பது சுய தொழிலை மேம்பாடு அடையச் செய்யும் மேலும் அப்பா மூலம் பண வரவை அதிகரிக்கச் செய்யும் தன-லாபாதிபதி புதன் பத்தில் இருப்பது தொழிலில் லாபத்தையும் வங்கி சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும். மூன்று-பத்துக்குடைய சுக்கிரன் லாபத்தில் நிற்பது பெண்கள் மூலமாக யோகத்தைத் தரும், உல்லாசப் பயணம் செல்வீர்கள். யோகாதிபதி செவ்வாய் பத்தில் இருப்பது பணம், பதவி, பட்டம், அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குரு விரயத்தில் நிற்பது பூர்வீகச் சொத்து விற்க்க வேண்டிய சூழ்நிலையைத் தரும், ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தரும். ஆறு-ஏழுக்குடைய சனி நான்கில் நிற்பது அம்மாவிடம் கருத்து வேறுபாட்டை உண்டாக்கும், கணவன் மனைவியிடையே பிரச்சினையை உண்டு பண்ணும். ராகு இரண்டில் நிற்பது குடும்பத்தில் குழப்பத்தை, பண வரவில் தடையையும் தரும். எட்டில் கேது நிற்பது வாகன விபத்தை உண்டாக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை. வைகாசி மாதம் 27ம் தேதி காலை 06-40 மணி முதல் 29ம் தேதி காலை 09-40 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கன்னி

ராசியதிபதி புதன் பாக்கியத்தில் அமர்ந்த நிலையில் மாதம் துவங்குகிறது குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும். தன-பாக்கியாதிபதி சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது தொழிலில் முன்னேற்றம் தரும், பூர்வீக தொழில் மேன்மையடையும். மூன்று-எட்டுக்குடைய செவ்வாய் பத்தில் இருப்பது தொழில் ரீதியாக அலைச்சலை உண்டாக்கும் மேலும் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நான்கு-ஏழுக்குடைய குரு பதினொன்றில் உச்சம் பெற்று இருப்பது புதிய வீடு, வாகன யோகத்தைத் தரும், திருமண பருவத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். ஐந்து-ஆறுக்குடைய சனி மூன்றில் இருப்பது உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது மேலும் குழந்தைகள் உல்லாசப் பயணம் செல்வார்கள். விரயாதிபதி சூரியன் ஒன்பதில் இருப்பது தந்தைக்காக செலவு அதிகரிக்கச்செய்யும் மேலும் திருக்கோயிலுக்காக தான தர்மங்கள் செய்வீர்கள். ராகு ராசியில் இருப்பது உடல் அசதியைத் தரும், கேது ஏழில் இருப்பது அனைவரிடமும் சச்சரவைத் தூண்டும். வைகாசி மாதம் 01ம் தேதி இரவு 02-41 மணி முதல் 03ம் தேதி அதிகாலை 04-52 மணி வரை சந்திராஷ்டமம். மேலும் 2
9ம் தேதி காலை 09-40 மணி முதல் 31ம் தேதி பகல் 01-04 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

துலாம்

ராசியதிபதி சுக்கிரன் பாக்கியத்தில் அமர்ந்த நிலையில் மாதம் துவங்குகிறது இஷ்ட தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள், ஸ்ரீரங்கம் சென்று மகாலட்சுமியை தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும். இரண்டு-ஏழுக்குடைய செவ்வாய் எட்டில் இருப்பது குடும்பத்தில் குழப்பத்தையும் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினையை உருவாக்கும். மூன்று ஆறுக்குடைய குரு பத்தில் உச்சம் பெற்றிருப்பது தொழிலில் மேன்மையையும் கொடுக்கும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். யோகாதிபதி சனி இரண்டில் இருப்பது செல்வச் சேர்க்கையும் வீடு மனை யோகத்தையும் தரும். பத்தாமதிபதி ஆறில் இருப்பது உடல் உழைப்பு மேன்மையை தரும். லாபாதிபதி சூரியன் அஷ்டமத்தில் இருப்பது சிறப்பில்லை, தொழிலில் எதிர் பார்த்த லாபம் கிடைக்காது, மூத்த சகோதர வகையிலும் சச்சரவு உண்டாகும். ராகு விரயத்தில் இருப்பது வெளிநாட்டு யோகத்தைத் தரும். கேது ஆறில் இருப்பது எல்லாவற்றிலும் எதையும் எதிர் கொள்ளும் துணிச்சலைத் தரும். வைகாசி மாதம் 03ம் தேதி அதிகாலை 04-52 மணி முதல் 06ம் தேதி காலை 08-48 மணி வரை சந்திராஷ்டமம். மேலும் இம்மாதம் 31ம் தேதி பகல் 01-04 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

விருச்சிகம்

ராசியதிபதி ஏழில் இருப்பது கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை உண்டாக்கும். சூரியன் ஏழில் இருப்பது வியாபார விருத்தியைத் தரும், அரசு வகை ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் தரும். சந்திரன் ஐந்திலிருப்பது ஆலய சேவையை மேம்படுத்தும், குலதெய்வ வழிபாட்டிற்கு வழி வகுக்கும், புதன் ஏழில் இருப்பது கமிஷன் வியாபாரம் சிறப்பாகும், தகவல் தொடர்பு மேம்படும். குரு ஒன்பதில் உச்சம் பெற்று இருப்பது தனவரவை அதிகப்படுத்தும், பொன் பொருள் சேர்க்கையை அதிகப்படுத்தும். சுக்கிரன் எட்டில் இருப்பது பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலையை குறிக்கிறது. சனி ராசியில் இருப்பது அதிக அலைச்சலையும் மனக்குழப்பத்தையும் அதிகப்படுத்தும். ராகு பதினொன்றில் இருப்பது எதிர் பாராத பணவரவையும் லாபத்தையும் தரும். கேது ஐந்தில் இருப்பது குழந்தைகளின் படிப்பில் மந்த நிலையை உருவாக்கும். வைகாசி மாதம் 06ம் தேதி காலை 08-48 மணி முதல் 08ம் தேதி பகல் 03-59 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

தனுசு

ராசியதிபதி குரு எட்டில் இருப்பது சாதகமானது அல்ல பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுக்கும், இருப்பினும் உச்ச பலத்துடன் இருப்பதால் வெயிலைக் கண்ட பனி போல் கஷ்டங்கல் அனைத்தும் விலகிவிடும். சூரியன் ஆறில் இருப்பது உத்தியோக் உயர்வுக்கு வழிவகுக்கும் ஆனால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை உருவாகும். செவ்வாய் ஆறில் நிற்கிறார் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும், குழந்தைகளுக்கு உஷ்ண சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும். புதன் ஆறில் நிற்பது தாய் மாமனுடன் விரோதத்தை உருவாக்கும், வியாபாரத்தில் கடன் வாங்கும் நிலை உருவாகும். சுக்கிரன் ஏழில் இருப்பது கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கச் செய்யும், பெண்களால் யோகம் உண்டாகும். சனி விரயஸ்தானத்தில் இருப்பது தொழில் ரீதியாக பணியாளர்களின் வகையில் செலவு அதிகரிக்கும், உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். ராகு பத்தில் இருப்பது தொழில் வியாபாரத்தில் மேன்மையைத் தரும், புதிய அலுவலகக் கிளையயை தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். கேது நான்கில் இருப்பது சொந்த வீடு அமையும் யோகத்தை உண்டாக்கும் இருப்பினும் அன்னையின் உடல் நலத்தை பாதிக்கும். வைகாசி மாதம் 08ம் தேதி பகல் 03-59 மணி முதல் 13ம் தேதி பகல் 03-10 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

மகரம்

ராசியதிபதியாகிய சனி பதினொன்றில் நிற்பது தொழில் லாபத்தையும் செல்வச் சேர்க்கையும் கொடுக்கும், மனதில் நினைத்த அனைத்து விஷயங்களையும் எளிதில் நிறைவேறுவதற்கான வழி வகுக்கும். சூரியன் ஐந்தில் நிற்பது குழந்தைகளுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோயினைத் தரும், போட்டி பந்தயத்தில் வெற்றி பெறத்தக்க யோகத்தையும் தரும். செவ்வாய் ஐந்தில் நிற்பது சகோதரர்களுடன் இணக்கமான போக்கைத் தரும், பூர்வீக நிலம் கிடைக்கக் கூடிய யோகத்தைத் தரும். புதன் ஐந்தில் நிற்பது ஷேர்மார்க்கெட் முதலீடுகளில் லாபத்தைத் தரும், தகவல் தொடர்பு சிறப்பாக அமையும். குரு ஏழில் நிற்பது வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கொடுக்கும், தொழில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் ஆறில் நிற்பது கணவன் மனைவிக்கிடையே பிரச்சினையை உண்டாக்கும், பெண்களால் கஷ்டம் உண்டாகும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். ராகு ஒன்பதாம் இடத்தில் நிற்பது அப்பாவுக்கு கண்டத்தைத் தரும், நீண்ட தூரப் பயணத்தையும் தரும். கேது மூன்றில் நிற்பது வீண் அலைச்சலையும்,மனக் குழப்பத்தையும் தரும். வைகாசி 10ம் தேதி பகல் 02-27 மணி முதல் 13ம் தேதி பகல் 03-10 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

கும்பம்

சூரியன் நான்கில் நிற்பது அரசு ஒதுக்கீட்டில் வீடு அமையும் யோகம் உண்டாகும், தாயார் மூலமாக அரசு உத்தியோகத்திற்க்கான வாய்ப்பும் அமையும். செவ்வை நான்கில் இருப்பது இயந்திர தொழில் சிறப்பாக அமையும், புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதன் நான்கில் இருப்பது கல்வியில் மேன்மையைத் தரும் மேலும் தாய் மாமன் உதவி கிடைக்கும். குரு ஆறில் இருப்பது வாரிசுகளுடன் சச்சரவையும், கடன் வாங்கும் நிலையையும் உருவாக்கும். சுக்கிரன் ஐந்தில் இருப்பது குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லும் நிலையைத் தரும், விருந்து கேளிக்கை என்று பொழுது கழியும். சனி பத்தில் இருப்பது உத்தியோகத்திற்கு சிறப்பான ஒன்றாகும், புதிய உத்தியோக வாய்ப்புகள் உருவாகும், தொழிலில் மேன்மையான நிலையை அடையலாம். ராகு எட்டில் இருப்பது எதிர்பாராத விபத்துகளுக்கு வழி வகுக்கும் கவனமாக இருக்கவும். கேது இரண்டில் இருப்பது குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கும், பேச்சில் கவனம் தேவை. வைகாசி 13ம் தேதி பகல் 03-10 மணி முதல் 15ம் தேதி இரவு 03-25 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

மீனம்

சூரியன் மூன்றில் இருப்பது வீண் அலைச்சலைத் தரும், சகோதரர்களுக்காக கடன் பட நேரிடும். செவ்வாய் மூன்றில் இருப்பது நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் மேன்மையைத் தரும், புதிய மின்சாதனங்களை வாங்குவீர்கள். புதன் மூன்றில் இருப்பது கமிஷன் வியாபாரம் சிறப்படையும், கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு ஐந்தில் இருப்பது பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும், பண வரவு அபரிமிதமாக இருக்கும். சுக்கிரன் நான்கில் இருப்பது ஆடம்பரமான நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகத்தைத் தரும், மேலும் வசிக்கும் வீட்டை புதிய கலை நயத்துடன் அழகு படுத்துவீர்கள். சனி ஒன்பதாம் வீட்டில் இருப்பது பூர்வீக வீடு வகையில் வில்லங்கத்தைத் தரும், தாத்தா முறை உள்ளவர் ஒருவருக்கு கண்டம் உண்டாகும். ராகு ஏழில் இருப்பது வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும் மேலும் அனைவரிடமும் சச்சரவு உண்டாக்கும் வேலையைச் செய்யும். கேது ராசியில் இருப்பது வீண் மனக்குழப்பத்தைத் தரும். வைகாசி 15ம் தேதி இரவு 03-25 மணி முதல் 18ம் தேதி பகல் 01-07 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

English summary
Tamil Month of Vakasi Rasi Palan from 15-05-2015 to 16-05-2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X