For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை

தண்ணீர் கடவுளைப் போன்றது. தண்ணீரை மதிக்காமல் அதை அசுத்தம் செய்வதால்தான் இன்றைக்கு தண்ணீர் பஞ்சத்தில் தடுமாறுகிறது தமிழகம். தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவரின் புத்திரர்களுக்கு சாப வ

Google Oneindia Tamil News

மதுரை: தந்தை சொல் கேட்காமல் தண்ணீரை அசுத்தம் செய்த முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதையை இந்த வைகாசி விசாகம் நாளில் தெரிந்து கொள்வது அவசியம். தூய்மையாக ஓடும் ஆறுகளையும், சுத்தமான குளங்களையும் சீரழித்து தண்ணீர் பஞ்சத்தில் தடுமாறுகிறோம். தண்ணீரை சுத்தமாக பாதுகாத்தால் அந்த முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

வைகாசி விசாகம் இன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும்.

Vaikasi Visakam Purana story

பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக திருநாளின் முக்கிய அம்சமாக இன்றைக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

வைகாசி விசாகம் புராண கதை

பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன.

அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.

அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார்.

உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

English summary
Vaikasi Visakam is celebrated as birthday of Lord Murugan. It is celebrated during Visakam Nakshatra in Tamil month Vaikasi here is the Purana story of Vaikasi Visakam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X