For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி : தமிழகம் முழுவதும் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள வைணவ திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மோட்ச ஏகாதசியாகவும் வைகுண்ட ஏகாதசியாகவும் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் காலை 8 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் ரங்கா... ரங்கா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்தினங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் மூலம் வடக்கு வாயில் வழியே பெருமாள் எழுந்தருளினார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகாலை நேரத்தில் அனுமதிக்கப்படவில்லை. மாறாக இன்று காலை 8 மணி முதல் பரமபதவாசல் வழியாக நம்பெருமாளை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தங்க பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளின் முன்பாக தமிழ் மறை, திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை மனமுருகப் பாடிச் சென்றனர்.

ஸ்ரீரங்கத்தில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்து, சொர்க்க வாசலைக் கடந்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று முதல் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும்.

நடப்பாண்டில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நிகழாண்டில் இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரத்தில் சொர்க்கவாசல் திறப்பு

சிதம்பரத்தில் சொர்க்கவாசல் திறப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் கோவிந்தராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர் பெருமாள் கோவில்

ஓசூர் பெருமாள் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மூன்று மலைகளில் ஒன்றான விஷ்ணு மலையில் எழுந்தருளிய ஸ்ரீ லட்சுமி வெங்கடரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதல் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சரியாக 5.50 மணி அளவில் சுவாமி சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மூன்று தனித் தனி மலைமீது பிரம்மா விஷ்ணு சிவன் சன்னதிகள் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சார்ந்த ஏராளமான பக்தர்கள் வழக்கமாக வருவது வழக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் கோவிலில்அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் பெருமாள் கோவில்

சேலம் பெருமாள் கோவில்

சேலம் கோட்டை பகுதியில் உள்ள அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலில் 3 மணியிலிருந்து திருப்பாவை படிக்கப்பட்டு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சரியாக 4. 45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஆன்லைன் மூலம் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் அவர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளனர் குறிப்பாக கோயிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது கோயில் நிர்வாகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்று திறக்கப்பட்ட இந்த சொர்க்க வாசல் வரும் நாலாம் தேதி வரை திறந்து இருக்கும் நாளை முதல் வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவர்.

திருப்பூர் பெருமாள் கோவில்

திருப்பூர் பெருமாள் கோவில்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சோலா கடைவீதி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உத்திர வீரராகவர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் அதிகாலை 4:30 மணிக்கு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஆனது கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு உத்தரவின்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை மேலும் பக்தர்கள் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களைத் தவிர எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை

திருவந்திபுரம் தேவநாதசுவாமி

திருவந்திபுரம் தேவநாதசுவாமி

கடலூர் அருகே உள்ளது புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில். 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், மார்கழி மாத சிறப்பு பூஜைகளும், பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்த பின் மூலஸ்தான உள்பிரகாரத்தில் தேவநாதசுவாமி வலம் வந்தார். அதை தொடர்ந்து சொர்க்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். தொடர்ந்து தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோ‌ஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவை, முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜனக நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.
ஸ்ரீ கொண்டல் ரவுத் மற்றும் பாண்டுரங்கன் பஜனை குழு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனை குழு ஆகிய குழுக்கள் பக்தி பாடல் பாடி வலம் வந்தனர்.

திருவண்ணாமலையில் சொர்க்கவாசல்

திருவண்ணாமலையில் சொர்க்கவாசல்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். வைகுண்ட ஏகாதாசி முன்னிட்டு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளி கவசம் சார்த்தப்பட்டு தீபாரதனை.கெஜலட்சுமி மற்றும் வைகுந்த வாயிலுக்கு தீபாரதனைக்கு பின் வைகுந்தவாசல் திறக்கப்பட்டது. இன்றைய தினம் உண்ணாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து நாளை விரதம் முடித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள்.

English summary
On the eve of Vaikunta Ekadasi, the gates of heaven were opened in Perumal temples all over Tamil Nadu without devotees. Only those who booked early in the morning with corona restrictions were allowed to darshan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X