For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலர் தினம் 2020: காதல் கை கூட உதவி செய்யும் கடவுள்கள் - பரிகார கோவில்கள்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணத்திற்கு மட்டுமல்ல காதல் கைகூடவும் கடவுள் அருள் தேவை. மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் மட்டுமல்ல தெய்வீக காதல்களும் பல போராட்டங்களுக்கு பின்னரே வ

Google Oneindia Tamil News

சென்னை: பெருமாளின் மீது ஆண்டாள் கொண்ட காதலை உலகமே அறியும் அதே போல வள்ளியை விரட்டி விரட்டி காதலித்த முருகனின் காதலை இன்றைக்கும் வள்ளி திருமணமான நாடகத்தில் போட்டுக்கொண்டிருக்கின்றனர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதைப் போலத்தான் இருமனங்கள் இணையும் காதலும் சொர்க்கத்தில் இறைவனால் நிச்சயிக்கப்படுகின்றன. காதல் கைகூடவும் அந்த காதல் வெற்றிகரமான திருமணத்தில் முடியவும் கடவுளின் அருள் தேவை. காதலிப்பவர்களும், காதலிக்கப் போகிறவர்களும் காதல் வெற்றி பெற சில ஆலயங்களுக்கு போய் வழிபட வேண்டும். விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை காதலுக்கு உதவி செய்யும் தெய்வங்கள் உள்ளன.

பார்வதி பரமசிவன், கண்ணன் ராதா என தெய்வீக காதல்களும் புராண கதைகளாக மக்கள் முன் பேசப்படுகிறது. ஆண்டாள் தன் காதல் கைகூட வேண்டும் என்று அழகரை வேண்டினாள் அதற்கு நேர்த்திக்கடனாக அக்கார அடிசல் நெய் வடிய அளித்தார் ராமானுஜர். இன்றைக்கும் அந்த காதலின் நினைவாக அக்கார அடிசல் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

உண்மையான காதல் என்றால் அந்த காதல் நிச்சயம் ஜெயிக்கும் அதற்காக அந்த கடவுளே தூது செல்வார். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முதல் சென்னை அருகே கோவளத்தில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் வரை பல கோவில்கள் உள்ளன இந்த ஆலயங்கள் திருமண வரம் தரும் ஆலயங்களாக உள்ளன.

 மாசி மாதம் இந்த 2 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் மாசி மாதம் இந்த 2 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்

மதுரை மீனாட்சியம்மன்

மதுரை மீனாட்சியம்மன்

மதுரையில் சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம் காண கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள். இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை மாலை போட்டு வணங்கி அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடி வரும் காதலும் கைகூடும்.

ஆண்டாள் அழகர்

ஆண்டாள் அழகர்

ரங்கநாதன் மீது ஆண்டாளுக்கு அளப்பரிய காதல். அந்த காதல் கைகூட அருள வேண்டும் என்று அழகரை வேண்டிக்கொண்டாள் ஆண்டாள். காதல் கை கூடியது. இறைவனிடம் ஐக்கியமானாள் ஆண்டாள். இப்போது காதலிப்பவர்கள் திருமாலிருஞ்சோலை அழகரை தரிசனம் செய்யலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும் சென்று வணங்கலாம்.

காதல் தெய்வங்கள்

காதல் தெய்வங்கள்

காதலை தூண்டும் கிரகம் சுக்கிரன். காதலுக்கு மன்மதன் அம்பு பாய வேண்டும். ரதி மன்மதனை வணங்கினால் காதல் கை கூடும். பெண்கள் மன்மதன் சிலைக்கும், ஆண்கள் ரதி சிலைக்கும் பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். காதல் கை கூடி திருமணத்தில் முடிந்த பின்னர் தம்பதி சமேதராக ரதி மன்மதனை வழிபடலாம்.

கபாலீஸ்வரர் கற்பாகாம்பாள்

கபாலீஸ்வரர் கற்பாகாம்பாள்

அன்னை பார்வதி மயிலாக உருமாறி வந்து இறைவனை நோக்கி தவமிருந்த தலம் மயிலாப்பூர். இங்கு புன்னை மரத்தடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் புன்னைவன நாதரையும் கபாலீஸ்வரர், கற்பகாம்பாளையும் வணங்கினால் காதலும், திருமணமும் கை கூடி வரும். பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தால் தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கும்.

வள்ளி தெய்வானை முருகன்

வள்ளி தெய்வானை முருகன்

முருகப்பெருமான் காதல் நாயகன். தெய்வானையை திருமணம் முடித்த பின்னரும் குறத்திப் பெண் வள்ளியின் மீது காதல் கொண்டு பல திருவிளையாடல்களை நடத்தியவர். கிழவனாக வந்து காதல் மொழி பேசியவர். இவரின் காதலுக்கு அண்ணன் விநாயகரே உதவி செய்திருக்கிறார். எனவே காதல் வலை வீசுபவர்கள் விநாயகரையும், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானையும் வணங்கலாம். திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்களுக்கு சென்று வணங்கலாம். காதலர்கள் மனமுருகி வேண்டிக்கொண்டால் காதலில் வெற்றி பெறும் வரம் அருள்வார்கள்.

வன்னி மரம் அத்திமரம்

வன்னி மரம் அத்திமரம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் உள்ள தல விருட்சமான வன்னிமரத்தில் மனதிற்கு பிடித்தமானவர்களை நினைத்து பிராத்தனை செய்து மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கோர்த்து மரத்தில் கட்டி வேண்டிக்கொண்டால் காதல் நிறைவேறும் திருமணம் நடைபெறும். இதே போல வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உள்ள அத்தி மரம் வேண்டிய வரம் தரும் மரம். இங்கு திருமண வரம், குழந்தை பாக்கிய வரம் வேண்டி மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொள்ள காதல் கைகூடி வரும் திருமணம் வெற்றிகரமாக நடைபெறும். பிரிந்த தம்பதியர் இணைவார்கள். காதலர் தினத்தில் காதல், திருமண வரம் தரும் ஆலயங்களுக்கு போய் வேண்டிக்கொள்ளுங்கள் மக்களே உங்க காதல் வெற்றிகரமாக கைகூடி திருமணத்தில் முடியும்.

English summary
Visiting the temples that are powerful to clear the way can boost up the success of love and wedding processes.Thirumanancheri Kalyanasundhareshwarar and goddess Parvathi stays hand in hand position and resolve the delayed wedding problems.Thiruviandhai Nithyakalyana Perumal.The Srivillipuththur Andal temple is where
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X