For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுக்கிரனை பார்க்கும் செவ்வாயால் இந்த ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் வருமாம்

காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டி விட்டன. காதலுக்கும் நவகிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. காதல் யாரால் எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. கோச்சார ரீதியாக சுக்கிரனும் செவ்வாயும் சேரும் போ

Google Oneindia Tamil News

சென்னை: காதல் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம். காதலாகி கசிந்து உருகி ஒவ்வொரு ரத்த அணுக்களிலும் காதலோடு துடித்துக்கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உலகத்தில் காதல் மட்டும் இல்லை என்றால் பலருக்கும் பைத்தியம் பிடித்திருக்கும். காதல் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. மனதிற்குள் மணியடித்து பல்ப் பளிச்சென்று எரிவதற்கும் நேரம் காலம் கூடி வரவேண்டும் அப்போதுதான் எனக்கென பிறந்தவர் இவர்தானோ என்று பாடுவார்கள். காதல் கிரகங்களில் முக்கிய கிரகங்களான சுக்கிரனும் செவ்வாயும் எங்கே எப்படி சேருகின்றன. எந்த நேரத்தில் பார்த்துக்கொள்கின்றன என்பதைப் பொறுத்து காதல் உருவாகி உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவும். இந்த காதலர் தின கொண்டாட்டத்தின் போது நவகிரகங்களின் சஞ்சாரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது. எந்த ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் உற்சாகத்தை கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரனும் செவ்வாயும் காதலை தூண்டும் கிரகங்கள். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ, செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். இந்த வாரம் செவ்வாய் தனது வீடான விருச்சிகத்தில் இருந்து நகர்ந்து தனுசு ராசியில் கேது, குரு உடன் இணையப்போகிறார். சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைந்து இருக்கிறார்.

செவ்வாயின் பார்வை தனுசு ராசியில் இருந்து மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் மீது விழுகிறது. இதே போல மிதுனம் ராசியில் உள்ள ராகுவின் மீதும் விழுகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம், பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் உற்சாகத்தை தரும் யாரெல்லாம் காதலில் விழுந்து கமிட் ஆகப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

தைப்பூசம் 2020: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் பழனி பாதயாத்திரைதைப்பூசம் 2020: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் பழனி பாதயாத்திரை

காதல் எப்படி வரும்

காதல் எப்படி வரும்

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம், துலாம், மீனம் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் பார்வையால் காதலை பற்றிக்கொள்ள வைப்பார். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்தும் சுக்கிரன் ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். செவ்வாய்தான் தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். ஒருவரின் ஜாதகத்தில் இவர்கள் இணைந்திருந்தால் காதல் பற்றிக்கொள்ளும்.
காதலுக்கு வேகமும் துணிச்சலும் ரொம்பவே முக்கியம். வீரத்தின் நாயகன் ரத்தக் காரகன் செவ்வாய் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருக்கிறது. செவ்வாய், சுக்கிரன், சனி சந்தோஷத்தை தரப்போகிறது. 9ஆம் வீட்டில் அமரும் செவ்வாயின் பார்வை உங்க 12ஆம் வீட்டில் உள்ள சுக்கிரன் மீதும் மூன்றாம் வீட்டில் உள்ள ராகுவின் மீதும் விழுவதால் சிங்கிளாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் இந்த காதலர் தினத்தில் ஒரு ஜோடியோடு மிங்கிள் ஆவீர்கள். இனி கமிட்டர் என்று ஸ்டேட்டஸ் போடுவீர்கள். காதல் என்கிற அற்புத உணர்வை அனுபவிக்க தயாராக இருங்க மக்களே.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சும்மாவே உற்சாகமழைதான். காரணம் ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். காதல் நாயகன் சுக்கிரனை எட்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் பார்க்கிறார். கூடவே இரண்டாம் வீட்டில் உள்ள ராகுவின் மீதும் செவ்வாயின் பார்வை விழுகிறது. காதலாகி கசிந்து உருகுவீர்கள். உங்களுக்கு காதல் காலம் பிறந்து விட்டது என்றாலும் கொஞ்சம் பொறுமையாக இருங்க இல்லாவிட்டால் காதல் பிரிந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இது சந்தோஷமான வாரமாக அமையப்போகிறது. காதலுக்காக தவமிருந்தவர்களுக்கு வரமாக கிடைக்கப் போகிறது காரணம் செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து நேரடியாக உங்க ராசியை பார்க்கிறார். ஏற்கனவே குருவின் பார்வையும் உங்களுக்கு இருக்கிறது. இப்போது செவ்வாயின் பார்வையும் உங்க ராசிக்கு கிடைப்பதால் நிறைய பேர் காதலிப்பீர்கள், காதலிக்கப்படுவீர்கள். உங்க காதல் திருமணம் வரைக்கும் செல்லும் அடுத்த காதலர் தினத்தை தம்பதிகளாக கொண்டாடுவீர்கள்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த வாரம் நிறைய சந்தோஷ அதிர்வலைகள் வீசும். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் நிறைய சந்தோஷங்களை தரப்போகிறார். ஏற்கனவே காதலிப்பராக இருந்தால் கவனமாக பேசுங்கள். வீணான வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். சின்ன சண்டை கூட பிரிவினையை ஏற்படுத்தி விடும் கவனம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் காதலில் வல்லவர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகங்களின் சஞ்சாரமும் அற்புத பலன்களை தரப்போகிறது. குரு மங்கள யோகம், சந்திரன் சஞ்சாரம், செவ்வாய், சுக்கிரன் பார்வை நன்மையை தரும். காதலிப்பவர்கள் இந்த காதலர் தினத்தில் உல்லாச பயணம் செல்வீர்கள். சிலருடைய காதல் கல்யாணத்தில் முடியும். சிலருக்கு புதிய காதல் பிறக்கும். இந்த காதலர் தினத்தை சந்தோஷமாக எதிர்கொள்ள தயாராகுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே ஏற்கனவே நான்காம் வீட்டில் குரு கேது சஞ்சரிக்க, ஐந்தாம் வீட்டில் சூரியன் சனி கூடியிருக்கின்றனர். இப்போது செவ்வாயும் நான்காம் வீட்டிற்கு நகர்ந்து உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரனை பார்வையிடுகிறார். மன்மதன் அம்பு பாயும் நேரம் வந்து விட்டது. காதல் எனக்கெல்லாம் வராது என்று சிங்கிளாக கெத்து காட்டியவர்களுக்கு இந்த காதலர் தினத்தில் கண்டிப்பாக காதல் மலரும். சிலரது காதல் உடனடியாக கல்யாணத்தில் முடியும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் செவ்வாய் ஆறாம் வீட்டில் உள்ள சுக்கிரன் மீதும், ஒன்பதாம் வீட்டில் உள்ள ராகுவின் மீதும் விழுகிறது. காதல் ராசிக்காரர்கள் நீங்கள். உங்க காதல் இந்த கால கட்டத்தில் கல்யாணம் வரைக்கும் போகும். பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி காதல் மயக்கத்தில் டேட்டிங், சாட்டிங் என்று போக வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

இதுநாள் வரை உங்க ராசிக்குள் இருந்த செவ்வாய் இரண்டாம் வீட்டில் உள்ள குரு உடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தரப்போகிறார். உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது. தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் என்று பாடப்போகிறீர்கள். லவ் புரபோஸ் பண்ணும் போது பேச்சில் காரத்தை குறைத்து விட்டு கனிவை கொண்டு வாங்க. ஏற்கனவே காதலிப்பவர்கள் சின்னச் சின்ன சண்டைகளைக் கூட ஊதி பெரிதாக்க வேண்டாம்.

தனுசு

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்க ராசிக்குள் அமர்ந்துள்ள செவ்வாய் பகவான் காதல் ஆசையை தூண்டுவார். ஆனால் கேதுவும், குருவும் அந்த ஆசையை கட்டுப்படுத்துவார்கள். நீங்கள் காதலிக்கவோ கல்யாணம் செய்து கொள்ளவோ இது சரியான தருணம் இல்லை. கவனமாக இருங்க நேரம் வரட்டும் பொறுமை, நிதானம் தேவை இல்லாவிட்டால் பொய்யான காதலில் சிக்கிக்கொள்வீர்கள்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் காதலில் திளைப்பவர்கள். காதலுக்காக கசிந்து உருகுபவர்கள். விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய், முயற்சி ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார். அதோடு ஆறாம் வீட்டில் உள்ள ராகுவின் மீதும் செவ்வாயின் பார்வை விழுகிறது. கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே என்று உங்க அன்பானவரைப் பார்த்து பாடிக்கொண்டிருப்பீர்கள் இனி கவலை வேண்டாம் உங்க காதலை சந்தோஷமாக சொல்லுங்கள் க்ரீன் சிக்னல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் காதல் உற்சாகத்தை கொடுக்கும். குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சேர்க்கை என மனம் முழுவதும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. காதலிப்பவர்கள் இந்த காதலர் தினத்தில் கல்யாண பேச்சுவார்த்தையை தொடங்குங்கள். நமக்கு காதல் வருமா என்று ஏங்கித்தவர்களுக்கு இந்த காதலர் தினத்தில் ஒரு வரம் கிடைக்கும். அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

மீனம்

மீனம்

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. உங்க ராசியில் சுக்கிரன் பெற்று அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது. கூடவே சுக ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீதும் செவ்வாயின் பார்வை விழுகிறது. காதல் மழை உங்க மீது பொழியப்போகிறது. ஏற்கனவே காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த காதல் நிறைய சந்தோஷங்களை தரப்போகிறது. திருமணமான ஆண்களுக்கு திடீர் காதல் வரலாம் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள். மனது நிறைய உற்சாகத்தோடு இந்த காதலர் தினத்தை கொண்டாட தயாராகுங்கள்.

English summary
Here are some of the Valentine’s Day Tips with the use of Vedic Astrology. If you are looking for Valentine’s Day gift ideas for him and her, these articles are sure to guide you through.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X