For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலட்சுமி விரத பூஜை: லட்சுமி பூஜையில் என்ன செய்யலாம் - என்ன செய்யக்கூடாது

வரலட்சுமி விரதம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் போது இந்த விசயம் எல்லாம் செய்யாமல் இருந்தாலே முழுபயனும் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்களும், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரத நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து சமயத்தை பின்பற்றும் சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்.

Varalakshmi vratham: Dont these mistakes during Lakshmi Pooja

அப்படிப்பட்ட மிக முக்கிய விரத நாளா வரலட்சுமி விரதம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளிக் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காலை நல்ல நேரம் 9 மணி முதல் 10.30 மணிக்குள் சாமி கும்பிடலாம். மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.

வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலையே வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

வீடு அசுத்தமாக இருக்கக் கூடாது தலைகுளித்து விட்டு தலையை கட்டிக்கொண்டே பூஜை செய்யக்கூடாது தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும். தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் வந்து விடும்.

லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம்.

ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும்.

பட்டுத்துணியல் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும்.

அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சி போடவேண்டும்.

வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை அவசியம் அழைப்பது அவசியம். சர்க்கரைப் பொங்கல் பாயாசம் நைவேத்தியம் செய்வது அவசியம்.

பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும்.

English summary
However when it comes to Lakshmi pooja, there are things that you should not do as well. Read on to know what they are.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X