For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஸ்து தோஷங்கள் நீக்கும் வலம்புரி சங்கு - வீட்டில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள்

சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம்.

Google Oneindia Tamil News

சென்னை: திருமகளின் அம்சமாகவே இருக்கும் வலம்புரிச் சங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் அற்புத சின்னமாகும். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது மூத்தோர் வாக்கு.

தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தார் அவருடனே தோன்றியது இந்தச் சங்கு. அதனை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார் மகா விஷ்ணு. 'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது.

Vastu Tips for keeping Shanku at home

புதுமனை வாங்கி அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் நன்றாக வாழ்ந்தாலே கண் திருஷ்டியால் வியாபாரச் சரிவு ஏற்படும். கடன்கள் தொழில் கூடங்களில் தொய்வு சிலருக்கு ஏற்படும். இதை போக்கவல்லது வலம்புரி சங்கு. எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்கவல்ல அற்புத சங்கு,

வலம்புரிச் சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும்.

கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்.

திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.

தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது.

விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.

அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.

கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.

பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும்.

ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள்.

சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது.

வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால்,சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி எல்லாம் சங்கு பூஜை செய்வதற்கு உரிய நாள்கள். வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது.

வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும், நினைத்த காரிய வெற்றி உண்டாகவும், ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் வலம்புரிச் சங்கின் வழிபாடு இல்லத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். இவ்வலம்புரிச் சங்கு, சாஸ்திரிகளால் ஒரு மண்டலம் உருவேற்றப்பட்டது. உயிரோட்டமும் சக்தியும் கொண்ட வலம்புரிச் சங்கு மிகுந்த சிறப்புடையது.

வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.

வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

English summary
In Hindu mythology it is described that Lord Vishnu, time and again in his various avatars, blows through the conch to destroy the negativity around the world. The Conch or Shankh is Vishnu’s sacred symbol and thus holds highest importance in both Hinduism and Buddhism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X