For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேளாங்கண்ணி மாதா பெசன்ட் மாதா திருவிழா - தேரில் வலம் வந்த அன்னையை தரிசித்த பக்தர்கள்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நடைபெற்றது. வண்ணமயமான வாண வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ப

Google Oneindia Tamil News

நாகப்பட்டிணம்: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நடைபெற்றது. உத்திரியமாதா, அந்தோணியார் உட்பட சிறிய தேர்கள் முன்னே வர அதற்குப் பின்னால் புனித ஆரோக்கிய மாதா தேரை பக்தர்கள் சுமந்து சென்றனர். இதையொட்டி ஆயர் நாட்ரன்சூசை தலைமையில் சிறப்பு கூட்டுபாடல் திருப்பலிகள் நடைபெற்றன. வண்ணமயமான வாண வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் மாதா ஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்க கூடிய பசிலிக்கா என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.

Velankanni car festival held on Saturday

இங்கு ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்வார்கள்.

திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தார்கள்.

சந்திராயன் 2 பற்றி பேசும் நீங்க சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பற்றியும் தெரிஞ்சுக்கங்கசந்திராயன் 2 பற்றி பேசும் நீங்க சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பற்றியும் தெரிஞ்சுக்கங்க

கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட கொடியை பேராலயத்துக்கு எடுத்து செல்லும்போது அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர். இதைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகிய பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 47ஆம் ஆண்டு மாதா கோயில் திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தங்க சரிகை அணிந்து வலம் வந்த மேரி மாதவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

English summary
Saturday evening marked the penultimate day celebrations of the Velankanni Feast the Velankanni car festival spruced with as much grandeur as the flag hoist ceremony, a week before. As if a metaphor, against the darkness of the late evening sky, the only light was from the shrine and the cars that carried the Gods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X