For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு? வேலூர் ஜோதிட கருத்தரங்கத்தில் விளக்கம்

நவகிரகங்களும் நவரத்தினங்களும்” எனும் தலைப்பில் நவரத்தின கற்களின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் பற்றி ஜோதிட கருத்தரங்கத்தில் பேசினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    வேலைக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு?- வீடியோ

    வேலூர்: சனீஸ்வர பகவானும் வேலை வாய்ப்பும் எனும் தலைப்பில் எப்போது வேலை கிடைக்கும், வேலை மாற்றம், வேலையிழக்க காரணங்கள் பற்றி ஜோதிட கருத்தரங்கத்தில் ஜோதிடர்கள் எடுத்துக்கூறினர்.

    புகழ் பெற்ற கோட்டை மாநகரும் தெய்வத்திரு கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்த ஊருமான வேலூரில் நேற்று வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் ஜோதிட கருத்தரங்கம் கடந்த ஞாயிரன்று நடைப்பெற்றது.

    இந்த கருத்தரங்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் கருத்தரங்கத்தில் கலந்துக்கொண்டார்கள். மேலும் பல ஜோதிடர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

    வேலூர் ஜோதிடர் கருத்தரங்கம்

    வேலூர் ஜோதிடர் கருத்தரங்கம்

    மதியம் இரண்டுமணியளவில் மகளிர் ஜோதிடர் சுமித்ரா குத்துவிளக்கேற்றியதை தொடர்ந்து இறைவணக்கத்துடன் கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. அதனை தொடர்ந்து சங்க செயலாளர் சிவலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

    ஜோதிடர்கள் விளக்கம்

    ஜோதிடர்கள் விளக்கம்

    வரவேற்புரையை தொடர்ந்து ஜோதிடர்கள் உரையாற்றினார்கள். முதலில் சென்னையை சேர்ந்த பிரபல ஜோதிடரான பன்ருட்டி தினேஷ் "ஜிகேவின் சந்திரநாடி அனுபவங்கள்" எனும் தலைப்பில் தனது சந்திரநாடி அனுபவங்களை பகிர்ந்து சிறப்புரையாற்றினார். அவர் தனது கணீர் குரலால் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நவகிரகங்கள்

    நவகிரகங்கள்

    அடுத்ததாக சென்னையை சேர்ந்த நவரத்தின வல்லுனர் கோபி "நவகிரகங்களும் நவரத்தினங்களும்" எனும் தலைப்பில் நவரத்தின கற்களின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் பற்றி அழகாக எடுத்துரைத்தார். நேரம் ஆக ஆக ஜோதிடர்களின் கூட்டம் அலைமோதியதால் அரங்கமே ஸ்தம்பித்தது,

    ஜோதிட சாம்ராட் சித்தூர் திரு சுந்தர்

    ஜோதிட சாம்ராட் சித்தூர் திரு சுந்தர்

    தேனீர் இடைவேளையை தொடர்ந்து ப்ரசன்ன ஜோதிட சாம்ராட் சித்தூர் சுந்தர் "பிரசன்ன ஜோதிடம்" எனும் தலைப்பில் பிரசன்ன ஜோதிடத்தை பற்றி அழகாக உரையாற்றினார். தனது உரையில் பிரசன்னத்தின் பயன்பாடு மற்றும் அதன் அவசியத்தையும் நிமித்த சாஸ்திரத்தின் தொடர்பையும் விளக்கினார். ஜாதகம் இல்லாதவர்களுக்கும் சில திடீர் கேள்விகளும் ஜாதகத்தைவிட பிரசன்ன ஜோதிடமே கை கொடுக்கும் என கூறினார்.

    யோகி, அவயோகி

    யோகி, அவயோகி

    அவரை தொடர்ந்து ப்ரெடிக்டர் செல்வம் அவர்கள் "ஜோதிட சூக்‌ஷ்மங்கள்" எனும் தலைப்பில் யோகி, அவயோகி, அனுயோகி பற்றி விளக்கி உரையாற்றினார். பல பிரபலங்களின் ஜாதகங்களை உதாரணம் காட்டி யோகி/அவயோகிகளால் அடைந்த நன்மை தீமைகளை நுட்பமாக விளக்கினார்.

    வேலைக்கு காரகன்

    வேலைக்கு காரகன்

    அதனை தொடர்ந்து நமது ஜோதிட கட்டுரை எழுத்தாளர் மற்றும் ஜோதிடரான அஸ்ட்ரோ சுந்தரராஜன் அவர்கள் "சனீஸ்வர பகவானும் வேலை வாய்ப்பும்" எனும் தலைப்பில் எப்போது வேலை கிடைக்கும், வேலை மாற்றம், வேலையிழக்க காரணங்கள் போன்ற விஷயங்களை பற்றி தனது உரையில் அழகாக கூறினார்.

    ராசி, நவாம்சம்

    ராசி, நவாம்சம்

    அவரை தொடர்ந்து வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்க தலைவர் ரவிராஜன் "வர்க சக்கரங்களின் அதி சூட்சமம்" எனும் தலைப்பில் வர்கச்சக்கரங்களின் அவசியத்தையும் நவ நவாம்சம் எனும் சூட்சமத்தையும் இரட்டை குழந்தைகளின் ஜாதகத்தில் ராசி, நவாம்சம் போன்றவை இருவருக்கும் ஒன்றாக இருக்குபோது நவ நவாம்சத்தை உபயோகித்து இரட்டையர்களுக்கு பலன் காணும் சூட்சமத்தை அழகாகவும் அற்புதமாகவும் விளக்கினார்.

    கர்மா விளக்கம்

    கர்மா விளக்கம்

    அவரை தொடர்ந்து சென்னையை சேர்ந்த மூத்த ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆசிரியருமான ஜோதிட பேரோளி ஸ்ரீ ரங்கம் க்ருஷ்ணன் ஐயங்கார் ஜோதிட சிறப்புரையாற்றினார். அவரை தொடர்ந்து சென்னை கொளத்தூர் ஹரி ஜோதிட ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஹரிஹரன் காலபுருஷ தத்துவத்தை பற்றியும் கர்மாவை பற்றியும் அழகாக சிறப்புரையாற்றினார்.

    ஜோதிடர்கள் குழு

    ஜோதிடர்கள் குழு

    அனைத்து ஜோதிடர்களின் சிறப்புரைகளை தொடர்ந்து வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்க நிறுவனர் ஜோதிட மாமணி பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரையாற்றினார். ஜோதிடத்தை வளர்க்கும் முயற்சியாக வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் பல கருத்தரங்கங்களை நடத்துவதோடு வாட்ஸ் அப் குழுவிலும் பல ஆராய்ச்சிகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vellore Astrology Research Association used to conduct periodical astrological conference at Vellore and other places. This year annual conference conducted at Vellore on 19/11/2017 and various astrologers delivered their speeches on astrology.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X