For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்

லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொ

Google Oneindia Tamil News

சென்னை: படித்து முடித்து விட்டு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். தொழில் தொடங்கி முதலாளி ஆக வேண்டும் என்று ஒரு சிலர் மட்டுமே நினைப்பார்கள். லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது. எத்தனை நாளைக்குத்தான் வேலை செய்து சம்பளம் வாங்குவது சொந்த தொழில் தொடங்கலாம் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். விஜயதசமி நாளான இன்று புதிதாக கற்கவும், தொழில் தொடங்கவும் நல்ல நாள். இந்த நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.

பத்தாம் இடத்தில் இருகின்ற கிரகத்தின் வலிமையையும், அதன் காரகங்களையும் முக்கியமாக தொழில் சம்மந்தப்பட்ட காரகங்களை அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் இடதின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் இடதின் அதிபதி தங்கி இருக்கின்ற வீட்டின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் வீட்டை யார் யார் பார்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. எந்த கிரகம் எந்த பார்வையில் பத்தாம் வீட்டைப் பார்கின்றது என்று அறிந்து அந்த கிரகத்தின் வலிமையையும், காரகதுவமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன காரணிகளை ஆராய்ந்து

சூரியன் பத்தாம் வீட்டில் நின்றால் வேந்தனாய், தனாவானாய் இருப்பார். சந்திரன் நின்றால் புத்திமான், சூரன் எடுத்த காரியம் முடிப்பார்.
செவ்வாய் நின்றால் பூமியை ஆளுவான், சகல காரியசித்தி கிடைக்கும். புதன் நின்றால் சிற்ப வித்தை அறிவான் கலைகள் பல அறிந்தவன். குரு நின்றால் செல்வமுடையவன். ராஜசேவை செய்வார். சுக்கிரன் நின்றால் சூரராய் இருப்பார். சனி நின்றால் தனம் தேடுவதில் சமர்த்தன். ராகு நின்றால் நடன சங்கீதங்களில் ஆர்வமுடையவன். கேது நின்றால் உற்சாகமானவன். விஜயதசமி தினமான இன்று கோச்சாரப்படி கிரகங்கள் அமர்வினைப் பொருத்து என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.

செல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்செல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்

மேஷ ராசி

மேஷ ராசி

செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே. முதலாவது ராசியான உங்களுக்கு இந்த வாரம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய் ஏழாம் வீட்டில் புதன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் புதனின் அனுக்கிரகம் அற்புதமாக உள்ளது. கல்வி தொடர்புடைய தொழில் தொடங்கலாம். ஆடம்பர பொருட்களை விற்கும் தொழில் நகைக்கடை, ஜவுளிக்கடை தொடங்கலாம். செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். நிகழப்போகும் குரு பெயர்ச்சி அற்புத பலன்களைத் தரப்போகிறது.

ரிஷப ராசி

ரிஷப ராசி

காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஆறாம் வீட்டில் சுக்கிரன் புதன், ஏழாம் வீட்டில் குரு எட்டாம் வீட்டில் சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கால கட்டத்தில் கல்வி சார்ந்த தொழில் தாடங்கலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். ஃபேஷன் டிசைனிங் தொழில் தொடங்கி செய்ய ஏற்றது. சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெற்றி கிடைக்க குரு பெயர்ச்சி வரை பொறுமை காக்கவும்.

மிதுன ராசி

மிதுன ராசி

புத்தி நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் புதன், ஆறாம் வீட்டில் குரு ஏழாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கால கட்டத்தில் சுய தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மீடியா சார்ந்த தொழில் தொடங்கலாம். ஆன்லைனில் யுடுயூப் சேனல்கள் ஆரம்பிக்கலாம். புத்தக கடைகள் ஆரம்பிக்கலாம். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும்.

கடக ராசி

கடக ராசி

மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் செவ்வாய் நான்காம் வீட்டில் சுக்கிரன் புதன், ஐந்தாம் வீட்டில் குரு ஆறாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு அதி அற்புதமான காலம் நீங்க என்ன தொழில் தொடங்கினாலும் ஜெயிக்கும். சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் பேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஜவுளி கடை, பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம். திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானை வணங்குங்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசி

தந்தை காரகன் சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன் புதன் நான்காம் வீட்டில் ஐந்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ரியல் எஸ்டேட் தொழில் தொடங்க நன்மைகள் நடக்கும். சகோதர சகோதரிகளிடன் கூட்டாக இணைந்து தொழில் தொடங்கலாம். ஞாயிறு கிழமைகளில் சூரியனை வணங்க நன்மைகள் நடக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் ராசிக்குள் சூரியன், செவ்வாய் இரண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன் மூன்றாம் வீட்டில் குரு நான்காம் வீட்டில் சனி கேது தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.அனுபவம் இருக்கும் தொழில் துறைகளில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது நல்லது ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசி

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன், ராசிக்குள் புதன், சுக்கிரன், இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நகைகள் வாங்க இது நல்ல நேரம். இரும்பு தொடர்பான தொழில்களை தொடங்கலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அன்னை மகாலட்சுமியை வணங்கலாம். குரு பெயர்ச்சி வரை காத்திருக்கவும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ஜென்ம ராசியில் குரு இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க தொழில் ஸ்தான அதிபதி ராசி நாதன் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் பூமி, நிலம் வாங்குங்கள். சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம். மளிகைக்கடை ஆரம்பிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி வரலாம். பழனி சென்று முருகனை வணங்கலாம்.

தனுசு ராசி

தனுசு ராசி

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய், லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் குரு ஜென்ம ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நல்ல காலம் தொடங்கப்போகிறது ஏழரை சனி காலம் என்பதால் நிதானம் தேவை. விரைய செலவுகள் அதிகம் ஏற்படும் காலம். சித்தர்களை வணங்குங்கள் நல்லது நடக்கும்.

மகர ராசி

மகர ராசி

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்க ராசிக்கு ஒன்பதாம் சூரியன் செவ்வாய் பத்தாம் வீட்டில் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் குரு, விரைய ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் சுப விரைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திண்டாடிக்கொண்டிருக்கிறீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்படுங்கள் நல்லது நடக்கும். சிவ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் புதன், பத்தாம் வீட்டில் குரு லாப ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரத்தின் படி பார்த்தால் ஏற்றுமதி இறக்குமதி தொழில் அற்புதமாக உள்ளது. புதிய தொழில் தொடங்க வேண்டாம் இருக்கும் தொழிலை விரிவு படுத்துங்கள் லாபம் அதிகம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

மீன ராசி

மீன ராசி

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் செவ்வாய் இணைந்துள்ளன. எட்டாம் வீட்டில் சுக்கிரன் புதன் சஞ்சரிக்கின்றனர். ஒன்பதாம் வீட்டில் குரு , பத்தாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களிடம் உள்ள சேமிப்பை வைத்து தொழில் தொடங்குங்கள். நீங்கள் தொடங்கும் தொழில் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் உங்க ராசி அதிபதி குருபகவானை வியாழக்கிழமை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

English summary
Vijayadasami, also known as Dashara is one of the major Hindu festivals. The name Vijayadashami is derived from Sanskrit words which mean victory In astrology, the 12 houses have great importance just like the 12 zodiac signs.These 12 Zodiac Signs Makes A Successful Entrepreneur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X