• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற விகாரி தமிழ் புத்தாண்டு தினத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

|

வேலூர்: வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதி ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், தொழில் வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

Vikari Tamil New year: Aishwaryam Tharum 5 Homams At Sri Danvantri Arogya Peedam

1. நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்தி ஹோமம்.

2. எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்.

3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.

4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.

5. வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இந்த ஹோமம் நடத்தபடுகின்றது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும், வாழ்வில் ஆஸ்தியை பெருக்கிக் கொள்வதன் முயற்சியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கலாம். இதன் மூலம் செல்வம் பல மடங்கு பெருகும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதின் மூலம், உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றம் காண முடியும், வருமானத்தை பெருக்கிக் கொள்ள இயலும்.

பாரம்பரிய முறை ஹோமம்

Vikari Tamil New year: Aishwaryam Tharum 5 Homams At Sri Danvantri Arogya Peedam

யாகங்களை முன்னிட்டு காலை கோ பூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது.

தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடைபெறும் இந்த யாகங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொண்டு நக்ஷத்திர தோஷம், ஆயுள் தோஷம், பயம், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று தமிழ் புத்தாண்டில் அனைத்து நலன்களையும் பெறலாம் என தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை-632513. தொலைபேசி : 04172-230033 / 09443330203

மழை வேண்டி நவகலச திருமஞ்சனம்

10.04.2019 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் கீழ்கண்ட விசேஷ திரவியங்களை கொண்டு நடைபெற்றது. மேற்கண்ட திருமஞ்சனம் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை 27 நக்ஷத்திரகரர்களின் நலன் கருதியும், மழை வேண்டியும், குழந்தைகளுடைய கல்வி, ஆரோக்யத்தில் முன்னேற்றம் அடையவும், விவசாய நலனுக்காகவும், அம்மை போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்ய கடவுளை மனம் குளிர்விக்கும் வகையில் 9 விதமான கலசங்களில் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், கரும்புசாறு, பழசாறு, நெல்லி பொடி, முள்ளி பொடி போன்ற 9 விதமான திரவியங்களை கொண்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும், நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 21 ஆவது ஆண்டாக பாண்டிச்சேரி அக்ஷயா சார்பில் 2019-20 விகாரி வருட புது பஞ்சாங்கம் வெளியிட்டு விழா பீடாதிபதி "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வமிகள் ஆசிகளுடன் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
With the blessings of our beloved Guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr Sri Muralidhara Swamigal, we are conducting Aishwaryam Tharum 5 Homangal on 14.04.2019 at 10.00 AM on the occasion of Tamil New Year at our Sri Danvantri Arogya Peedam, Walajapet for health and wealth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more