• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி - கணபதி ஹோமத்திற்கு என்ன வாங்கித்தரலாம்

|

சென்னை: ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் செல்வ வளம் பெருகும். தீராதவினைகள் தீரும். சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக 108 கணபதிகளை வழிபடும் விதமாக 108 கணபதி ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் வரும் நாளே விநாயக சதுர்த்தியாகும். விநாயக பெருமானுக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் உள்ளது. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.

Vinayagar Chathurthi 2019: 108 Ganapathi Homam at Dhanvantri peedam

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும். விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவை களையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும். முதலில் தைலக்காப்பு, பிறகு அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும்.

ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.

வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.

திருவோண தைலக்காப்பு அபிஷேகம்

Vinayagar Chathurthi 2019: 108 Ganapathi Homam at Dhanvantri peedam

இந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் திருவோணம் மற்றும் பக்தர்களின் ஜென்ம நக்ஷத்திர நாட்களில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சன்னதியில் தன்வந்திரி ஹோமத்துடன் 108 கணபதி ஹோமம் விநாயக சதுர்த்தி நாளில் நடைபெற உள்ளது.

108 கணபதி ஹோமம்

Vinayagar Chathurthi 2019: 108 Ganapathi Homam at Dhanvantri peedam

மஹா கணபதி, மஹா கர்ண கணபதி, மஹா சக்தி கணபதி, சர்வ சக்தி கணபதி, நித்ய கணபதி, நிமல கணபதி, நித்யானந்த கணபதி, நாத கணபதி, நாகேஸ்வர கணபதி, நவ நதிய கணபதி, சித்து கணபதி, ஷ்யாமள கணபதி, சிங்கார கணபதி, சிவசக்தி சந்தான கணபதி, வினோத கணபதி, விஷேட கணபதி, சாத்வீக கணபதி, சதானந்த கணபதி, சுமூக கணபதி, சுத்த ஷ்யாமள கணபதி, சுத்த சிவமய கணபதி, சுந்தர கணபதி, மஹா காவ்ய கணபதி, ஜ்வாலா கணபதி, ஜோதி கணபதி, ஜோதி ஆனந்த கணபதி, சங்கர கணபதி, ஆனந்த கணப்தி, ஆரோக்ய கணபதி, முத்து கணபதி, முக்தி கணபதி, முக்தி யோக கணபதி, இச்சா கணபதி, இமாச்சல கணபதி, இந்திர கணபதி, வித்யா கணபதி, விமல கணபதி, உச்ச கணப்தி, உச்சிஷ்ட கணபதி, உகார கணபதி, ஈசான கணபதி, ஈசானந்த கணபதி, ஊர்மிள கணபதி, யந்திர கணபதி, ஏகானந்த கணபதி, ஐக்கிய கணபதி, ஐஸ்வர்ய கணபதி, ஹோம கணபதி, ஓங்கார கணபதி, ஔஷத கணபதி, கர்ண கணபதி, கந்பக கணபதி, ஞான கணபதி, ஞான சக்தி கணபதி, சதாசிவ கணபதி, சங்கல்ப கணபதி, கன்ன கர்ண கணபதி, டம்ப கணபதி, நாத கணபதி, நவ நதிய கணபதி, தபோநந்த கணபதி, தபசு கணபதி, தர்க்க ஜெய கணபதி, பவித்ர பத்ம கணபதி, மகார கணபதி, யாக கணபதி, யாக சக்தி கணபதி, ரத கணபதி, ராக கணபதி, லலிதா கணபதி, லவண கணபதி, வஜ்ர கணபதி, வசீகர கணபதி, நாத கணபதி, நாதாம்ச கணபதி, யோக கணபதி, யோக மஹா சக்தி கணபதி, ஞான நித்ய கணபதி, கமல கணபதி, ஷ்ராவண கணபதி, சித்த கணபதி, சித்து புத்தி கணபதி, கல்ப கணபதி, வித்தக கணபதி, லக்ஷ்மி கணபதி, சிந்து கணபதி, முக்தி கணபதி, சகஸ்ரார கணபதி, வினோத கணபதி, வில்லங்க நிவாரண கணபதி, அஷ்ட சித்து கணபதி, அஷ்ட ஐஸ்வர்ய கணபதி, அட்ஷய கணபதி, இடா கணபதி, இடா பிங்கள கணபதி, இடா பிங்கள சூட்ஷம கணபதி, ப்ரணவ கணபதி, ப்ரம்ம குண்டலினி கணபதி, விஷ்ணு கணபதி, சிவ கணபதி, ஆதி சக்தி கணபதி, ஆதார கணபதி, ப்ரணயாம சக்தி கணபதி, ப்ரகாச கணபதி, விக்னேஷ்வர கணபதி, வினோத கணபதி, சர்வ ஜெய கணபதி, சர்வ ஜெய விஜய கணபதி.

மேற்கண்ட 108 கணபதியை வேண்டி 108 கணபதி ஹோமம் மாபெரும் ஹோமகுண்டத்தில் ஷண்மத ஆச்சாரியர்களை கொண்டு விநாயக சதுர்த்தியன்று நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் அஷ்ட திரவியங்கள், அறுகம்புல், தேன், நெய், விலை உயர்ந்த மூலிகைகள், பிணி தீர்க்கும் திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள், மோதகங்கள், பல வகையான புஷ்பங்கள், பழங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 108 கணபதி ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு மஹா கணபதியின் பேரருளால் கர்ம விநைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். சகல காரிய அனுகூலமும் உண்டாகும், இடையூறுகள் விலகும், பேரும் புகழும் கிடைக்கும், சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழும் நிலையை பெறலாம். மேலும் பக்தர்களுக்கு பலவகை நர்பலன்கள் கிடைக்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Vinayagar chathurthi celebrates on September 2nd, 2019.Special pooja and 108 Ganapathi homam at sri dhanvantri peedam Valajapet, Vellore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more