• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்சுமி கடாக்ஷம் அருளும் தேன் கூடு

By Mayura Akilan
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: தேன் கூடு கட்டியிருக்கும் இடத்தில் மஹாலக்ஷமி வாஸம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக... என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்... கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

தேன்... என்று சொன்ன உடனே நாக்கில் உமிழ்நீர் சுரக்காதவர்களே இருக்கமாட்டார்கள். யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்... "சுத்தமான தேன் எங்கு கிடைக்கும்?" என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே... தட்டுப்பாடுதான்!

தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

தேனின் மருத்துவ குணங்கள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.

குடல் புண்கள்

குடல் புண்கள்

குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். தேனை குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். பேதியை நிறுத்தும். இரத்த சோகை நோயை போக்கும். நரம்புகளுக்கு வலிமை தரும். தூக்கத்தை தரும். நீர்க்கோவையை சரிசெய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.

நோய்கள் போக்கும்

நோய்கள் போக்கும்

தோல் சம்பந்தமான நோய்களை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமிநாசினியாக வேலை செய்யும். பற்கள், கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தீச்சுட்ட புண்கள், சிரங்குகள், ஆறாத இரணங்கள் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றல் பெற்றது. உடல் பருமனை குறைக்கும். இரத்த அழுத்த நோய்களை குணமாக்கும். சூல ரோகங்களை போக்கும். நீண்ட ஆயுளை தரும்.பெண்களின் கருப்பை நோய்களை குணமாக்கும். உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.இப்படி தேனை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜோதிடமும் தேனும்:

ஜோதிடமும் தேனும்:

இனிப்பான பொருட்கள் அனைத்திற்க்கும் சுக்கிரன்தான் காரகர். அதிலும் மதுபர்கம் என போற்றப்படும் தேனின் காரகர் சுக்கிரபகவானேதாங்க!காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானம் சுக்கிரபகவானின் ரிஷபராசியாகும். ஒருவருக்கு கல்வி, கேள்விகளில் சிறந்துவிளங்க மற்றும் இசைத்துறையில் சிறந்துவிளங்க வணங்க வேண்டிய தெய்வம் சுக்கிரபகவானாகும்.

தேன் நிவேதனம்

தேன் நிவேதனம்

குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமா ஏதாவது தோஷம் இருந்தாலோ, அல்லது கல்வியறிவு பெருக வேண்டியோ சுக்கிரனுக்கு பிடித்த தேனை மகாலக்ஷமி, ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் சுக்கிரபகவான் ஆகியவர்களுக்கு நிவேதனம் செய்து நாக்கில் தடவிவர வாக்குஸ்தானம் சிறக்கும் எனகிறது ஜோதிடம்.

தொண்டை நோய் அகலும்

தொண்டை நோய் அகலும்

தொண்டையின் காரகர் சுக்கிரனாகும். தொண்டையில் ஏற்படும் கரகரப்பு, சளித்தொல்லைகள், கபக்கட்டு, தொண்டை எறிச்சல் போன்ற நோய்கள் துளசி சாறு மற்றும் தேன் அல்லது சிதோபலாதி சூர்னம், மதுயஷ்டி (அதிமதுரம்) போன்ற மருந்துகளை தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.

சர்கரை நோயின் காரகன் சுக்கிரன்:

சர்கரை நோயின் காரகன் சுக்கிரன்:

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து. காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் நெல்லிப்பொடி, 2 ஸ்பூன் நாவல் தேன் கலந்து குடித்தால் சர்க்கரை நோய், சிறுநீரக நோய்,கண் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். பற்கள் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

குங்குமப்பூவுடன் தேன் :

குங்குமப்பூவுடன் தேன் :

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.உடல் பலம் மற்றும் நிறம் பெறும். இரத்தம் சுத்தமாகும். சுகப்பிரசவம் ஏற்படும்.

மலட்டுத்தன்மை நீங்க

மலட்டுத்தன்மை நீங்க

ஆண்மைகுறைவு மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க செவ்வாழையுடன் தேன் கலந்து உண்டுவர மலட்டுத்தன்மை யும் ஆண்மைகுறைவும் நீங்கும். இதுக்கெல்லாம் காரகர் நம்ம சுக்கிரன் தாங்க.

மகாலட்சுமி அருள் கிடைக்கும்

மகாலட்சுமி அருள் கிடைக்கும்

தேன் மருந்துப்பொருள் மட்டுமில்லைங்க. பணத்தை அள்ளி கொடுக்கும் மஹாலக்ஷமியாகும். கனினித்துறையில் வேலை செய்த பலரும் தற்போது தேனீவளப்பில் ஈடுபட்டு லட்சங்களோடும் லட்சியத்தோடும் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

உடல் வெப்பம் சீராகும்

உடல் வெப்பம் சீராகும்

துளசித்தேன் இரத்தக்கொதிப்பை நீக்கும்.கல்லீரல்,மண்ணீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.பல்,எலும்புகளை பலப்படுத்தும். உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி தரும்.இரத்தம் விருத்தியாகும்.நினைவாற்றல் அதிகரிக்கும்.மலச்சிக்கல் வராது. அத்திப்பழ தேன் மூலவியாதிக்கு நல்ல மருந்து.தலைவாதம்,தோல்நோய்,சிறுநீரக நோய்,கல்லீரல் பெருக்கம்,உடல்வெப்பத்தை சரிசெய்யும்.மூளைக்கு பலம் தரும். ஆண்மை விருத்திக்கு நல்லது.

எத்தனை வகை தேன்

எத்தனை வகை தேன்

நரம்புக்கும், மூளைக்கும் நல்ல பலம் தரும்.கீழ்வாதம், முடக்குவாதம்,தொண்டைப்புண்ணை நீக்கும்.காய்ச்சல்,சளி போன்றவை சரியாகும்.சீரண உறுப்பில் ஏற்பட்டிருக்கும் இரணங்களை நீக்கும். மாம்பழ தேனில் வைட்டமின் ஏ அதிகம் செரிந்தது என்பதால், கண் பார்வைக்கு நல்லது. கூந்தலை அதிகப்படுத்தும்.கணையம், கல்லீரலை பலப்படுத்தும். இதயத்திற்கு புத்துணர்வு அளிக்கும்.மூட்டுவலி, இரத்தக்கொதிப்பை நீக்கும். பேரீட்சை தேன் வைட்டமின் சத்துக்களும்,தாதுக்களும் அதிகம் உள்ள தேன். இது ஒரு முழு உணவு. ஆண்மைக்குறைவை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். ரோஜாத்தேன் உடல்பொலிவு பெற உதவும். கழிவு மண்டலம் சிறப்பாக இயங்க உதவும். மூலநோய் வராமல் இருக்க தொடக்க நிலை மருந்தாக பயன்படுத்தலாம்.காசநோய் குணமாக சிறந்த நிவாரணி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Goddess Lakshmi is called Shri, the feminine energy of the Supreme, Goddess Lakshmi is worshipped in all Hindu households.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more