• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக சுற்றுசூழல் தினம் - விருக்ஷ சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!

|

சென்னை: இன்று ஜூன் 5 உலகம் முழுவதும் சுற்றுசூழல் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன்-5 ஆம் தேதி பூமியையும் அதன் சுற்றுவட்ட பகுதிகளையும் மற்றும் இயற்கையை பாதுகாத்திடும் வகையில் 1972 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எது எதற்க்கெல்லாமோ தினங்கள் அனுசரிக்கும் நிலையில் உலக சுற்றுசூழல் தினம் மிகவும் அவசியமான ஒன்றாகும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றிருந்தாலும் இப்போதாவது விழிப்புணர்வு ஏற்பட்டதே என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

கடந்த 2016 நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்ததில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நீர்வரத்து அளவிற்கு அதிகமாக நமக்கு இருந்தாலும் அதை தேக்கி வைத்து பராமரிக்க போதுமான நீர்தேக்கங்களும் அணைகட்டுகளும் இல்லாமல் போன காரணத்தால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து விட்டது.

அடுத்த ஓரிரு மாதங்கள் கழித்து இயற்கை முற்றிலும் கடும் வெப்பம் நிலவும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் நம்முடைய நீர்வள தேவையில் தண்ணிறைவை பெற முடியாமல் போனது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் . மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்வளத்தை தக்கவைத்து கொள்ளும் தன்மை மரங்களுக்கு உண்டு.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

இப்போது நாம் செய்யவேண்டியது இரண்டு விஷயங்கள்.

1. தற்கால நீர் தேவையை கையாள்வது.

2. எதிர்கால நீர் தேவைக்கு திட்டமிடுதல்

தற்கால நீர் தேவையை கையாள நீரை சிக்கனமாக உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை. எதிர்கால நீர் தேவைக்கு மழைவேண்டி தெய்வங்களை வேண்டிகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மழை தரும் தெய்வமான சுக்கிர பகவானுக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டியிருக்கிறது.

சுற்றுச்சூழலும் ஜோதிடமும்:

பூமி காரகனான செவ்வாயின் நாளில் பூமியில் சுற்றுசூழல் பாதுகாப்பில் மரத்தின் பங்கு என்ன என்பதை சமூக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் பார்க்கலாம்.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

ஜோதிட ரீதியாக சுற்று சூழலுக்கு காரக பாவம் கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடகமும் அதன் அதிபதி சந்திரனுமே என்கிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள். என்றாலும் சுற்று சூழல் பாதுகாப்பிற்க்கு காரகமான மரங்களுக்கு காரக கிரஹம் சுக்கிர பகவானே ஆகும். நமக்கு தேவையான நீருக்கு காரக கிரங்கள் சுக்கிரனும் சந்திரனும்தான். அதே போல மரங்களுக்கு விவசாயத்திற்க்கும் காரக கிரகம் சுக்கிரன் தாங்க! இதிலிருந்து சுற்றுசுழல் பாதுகாப்பிற்க்கும் மழைக்கும் உள்ள தொடர்பை நன்கு உணரமுடியும்.

கோள்களும் கழனிகாடும்:

கம்ப்யூடரில் (IT) வேலை செய்வதற்க்கும் கழனி காட்டில் வேலை செய்வதற்க்கும் காரக கிரகம் சுக்கிரன் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. விவசாயத்திற்க்கு சுக்கிரனே பிரதான கிரகம் என்றாலும் பன்னிரெண்டு ராசிகளை வீடுகளாக கொண்ட நவகிரகங்களுக்குமே விவசாயத்தின் வாழ்க்கை சுழற்சுக்கு காரணமாகின்றது.

நில ராசிகளான ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிகளும் அதன் அதிபதிகளான சுக்கிரன்,புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே பயிர் விளைய ஆதாரமான நிலத்தை தந்து பயிர் முளைத்தல் மற்றும் விளைதலை செய்கின்றது. ஜல ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளும் அதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய், மற்றும் குரு ஆகிய மூவரும் பயிருக்கு தேவையான நீராதாரத்தை அளிக்கின்றனர்.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

நெருப்பு ராசிகளான மேசம், சிம்மம் மற்றும் தனுசு ராசி களும் அதனதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு விதைகள் மற்றும் பழங்கள் பழுக்க தேவையான வெப்பத்தை அளிக்கின்றனர். காற்று ராசிகளான மிதுனம்,துலாம் மற்றும் கும்ப வீடுகளும் அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் பயிர் செழிப்பாக வளரவும் அதற்கு தேவையான காற்று மற்றும் வெளிச்சத்தை அளிக்கின்றனர்.

ரகங்களின் தன்மைக்கேற்ற மரங்கள்:

உயமான கம்பீரமாக நிற்க்கும் மரங்களுக்கு சூரியன் காரகமாகும். சுக்கிரனும் சந்திரனும் நீர், பாலுள்ள மரங்கள் மற்றும் அழகிய மணம் வீசும் பூக்களை கொண்ட மரங்களுக்கு காரகமாகும். செவ்வாயும் முள் நிறைந்த மரங்களுக்கு காரகனாவார். புதன் குள்ளமான அடர்ந்த நிழல் தரும் மரங்களுக்கு காரக கிரமாவார். குரு சுவையுள்ள பழம் தரும் மரங்களுக்கு காரகனாவார். சனி ஒழுங்கற்ற வடிவம் பெற்ற மரங்களுக்கும் பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளுக்கும் காரக கிரகமாவார். ராகு மற்றும் கேது அடர்ந்த குட்டையான புதர் செடிகளுக்கு காரக கிரகங்கள் ஆவார்.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

தெய்வீக மரங்கள்:

வீட்டில் லக்ஷமி கடாக்ஷம் பெருக நெல்லி மரம், விலவ மரம் இலந்தை மரம் துளசிசெடி ஆகியவற்றை வளர்பது சிறந்ததாகும் இந்த மரங்களில் மஹாலக்ஷமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. சக்தியின் அம்சமான வேப்ப மரம் வீட்டில் வளர்பதும் தீய சக்திகளையும் நோய் நொடிகளையும் அண்டவிடாமல் காக்கும்.

கொன்றை மரம்

சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

மகிழ மரம்

இந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.

பன்னீர் மரம்

இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

குறுந்த மரம்

வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பும்ஸிக மரம்

சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.

அரிசந்தன மரம்

திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.

பரிசாதம்

அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.

we have to take oath to grow atleast one tree to save the earth on this world environment day

மந்தாரக மரம்

வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.

பின்னை மரம்

திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

கருநெல்லி மரம்

திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

செண்பக மரம்

சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.

பிராய் மரம்

மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள்.

இருபத்தேழு நட்சத்திரத்திற்குரிய மரங்கள்:

ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்:

நட்சத்திரம்:

அஸ்வதி - ஈட்டி மரம்

பரணி - நெல்லி மரம்

கார்த்திகை - அத்திமரம்

ரோகிணி - நாவல்மரம்

மிருகசீரிடம் - கருங்காலி மரம்

திருவாதிரை - செங்கருங்காலி மரம்

புனர்பூசம் - மூங்கில் மரம்

பூசம் - அரசமரம்

ஆயில்யம் - புன்னை மரம்

மகம் - ஆலமரம்

பூரம் - பலா மரம்

உத்திரம் - அலரி மரம்

அஸ்தம் - அத்தி மரம்

சித்திரை - வில்வ மரம்

சுவாதி - மருத மரம்

விசாகம் - விலா மரம்

அனுஷம் - மகிழ மரம்

கேட்டை - பராய் மரம்

மூலம் - மராமரம்

பூராடம் - வஞ்சி மரம்

உத்திராடம் - பலா மரம்

திருவோணம் - எருக்க மரம்

அவிட்டம் - வன்னி மரம்

சதயம் - கடம்பு மரம்

பூரட்டாதி - தேமமரம்

உத்திரட்டாதி - வேம்பு மரம்

ரேவதி - இலுப்பை மரம்

பன்னிரெண்டு ராசிகளுக்கான மரங்கள்:

மேஷம் - செஞ்சந்தனம் மரம்

ரிஷபம் - அத்தி மரம்

மிதுனம் - பலா மரம்

கடகம் - புரசு மரம்

சிம்மம் - குங்குமப்பூ மரம்

கன்னி - மா மரம்

துலாம் - மகிழ மரம்

விருச்சிகம் - கருங்காலி மரம்

தனுசு - அரச மரம்

மகரம் - ஈட்டி மரம்

கும்பம் - வன்னி மரம்

மீனம் - புன்னை மரம்

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த விருக்ஷங்களை வளர்பதால் மழை வளம் பெருகி நீர்வளம் மற்றும் நிலத்தடிநீர் சேமிக்கப்படுவதோடு அல்லாமல் மூலிகை பொருட்களாகவும் பயனளிக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் உடனடியாக மரம் மற்றும் தோட்டம் போட வசதியிருப்போர் வீடுகளிலும் வசதியில்லாதோர் பூங்காக்கள், சாலையோரங்கள், ஏரிகரைகள் போன்ற இடங்களில் குறைந்தது இரண்டு மரங்களாவது வளர்க்கவேண்டும்.

ஹலோ! வேகமா எங்க கிளம்பீட்டிங்க? மரக்கன்று வாங்க தானே! வாழ்த்துக்கள்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
World Environment Day is the biggest annual event for positive environmental action and takes place every 5 June. World Environment Day is a day for everyone, everywhere. Since it began in 1972, global citizens have organized many thousands of events, from neighborhood clean-ups, to action against wildlife crime, to replanting forests.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more