• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி

|

சென்னை: பால பருவத்தின் இறுதி நிலை குழந்தையும் தெய்வீகமும் தாண்டவமாடும் வசீகர முகம் பாலாதிரிபுரசுந்தரி, குழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள். இத்தகைய சக்தி வாய்ந்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவத்துடன் கோடி ஜப மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா ஹோமம் பூர்த்திவிழாவும், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை சங்கமம் நவம்பர் 3ஆம் தேதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

பெண் என்பவள் சக்தி, ஆண் என்பவன் சிவம். ஆண் இருப்பு,பெண் இயக்கம், இயக்கம் இல்லா இருப்பு உபயோகம் அற்றது.பிரபஞ்சத்தில் இருக்கிற அனைத்துமே இவ்விரு தத்துவங்களுக்குள்ளே அடங்குவதை நாம் தெளிவுற சிந்திக்கும் போது புலப்படும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கிற ஐந்து சக்திகளான பஞ்ச பூத தத்துவங்களான நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவகைகளின் அடிப்படையில்தான் நம் ஞானிகளும் சித்தர்களும் பூமியில் இருக்கிற அனைத்து விசயங்களிலும் உட்புகுத்தி அதன் செயல் சூத்திரங்களையும் கணக்கிட்டார்கள்.

Who is Bala Tripura Sundari

இப் பஞ்ச பூத தத்துவத்தில் இருப்பு சிவனாகவும்,இயக்கம் சக்தியாகவும் கொண்டு பல சூட்சுமங்களை உணர்த்திருக்கிறார்கள். மனிதனின் உருவாக்கத்தில் சக்தியும் சிவனும் மட்டுமே இயங்குவதாக கண்டார்கள். இதில் இருப்பு சிவனை விட இயக்க சக்தி பெரும் சக்தி வாய்ந்ததாக உணர்ந்ததால் தான் இயக்கத்தின் ஆதி கடவுளாக ஆதிபராசக்தியை கொண்டு அச்சக்திக்கு பெண் வடிவமும் கொடுத்தனர். மேலும் நாம் வணங்குகிற அனைத்து கடவுள்களிலும் மேற்கூறிய தத்துவங்களின் அடிப்படையில்தான் சித்தரித்து இருக்கிறார்கள்.

சிவம் சக்தி இரண்டையும் ஜோதிட தத்துவத்தில் சூரியன் சந்திரனுக்கு ஒப்பிட்டு பூமியின் இயக்கத்தை இரவு,பகல்,நாள் நட்சத்திரம்,திதி இவைகளின் கணக்குகளின் மூலமாக கொண்டிருப்பார்கள்.மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனை மட்டுமே கணக்கெடுப்பதால் நம் நாட்டின் ஜோதிடத்தில் இருக்கிற தீர்க்கம் அங்கு கிடைப்பதில்லை.

உயிர் ஜனித்ததிலிருந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வுயிரின் நிலை மாறி அடுத்த நிலை அடையும். இது ஜனன கால குருவின் சுழற்சியை கணக்கெடுத்து சொல்லப்பட்டு இருக்கிற ஒரு விஷயம். சக்தியின் இயக்கமான பெண்ணில் இத்தன்மை பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பெண்ணில் முதல் 12 ஆண்டுகள் முடிவுறுகிற தருவாயில் அடுத்த நிலைக்கு சக்தியினை உருவாக்கி ஒரு சக்தி பிரவாகமாக மாற்றுகிற காலம். ஆம் ஓர் உயிரிலிருந்து இன்னொரு உயிரை உருவாக்குவதற்கு உண்டான சக்தி மைய இயக்கத்தின் ஆரம்பம். ஒரு அணுவே பிரித்தால் பல அணுக்தளாக பிரிவதன் ரகசியம் அறிய முற்பட்டால் சக்தி சிவன் மூலம் உற்பத்தியின் ரகசியம் அறியலாம்.

ஓர் உயிரை ஜனனிப்பதற்கு உண்டான கருவறை திறப்பு,கோவில் கும்பாபிஷேகம். ஒளியாக இருந்து ஒளி பிழம்பாக உருமாறுகிற பருவம். இந்த ருது, பெண் வடிவத்தை தாயாக சக்தியாக சக்தியின் திரளாக உருவெடுக்கும் நேரம். இது சக்தியாக பெண்ணிற்கு மட்டுமே ஏற்படுகிற இயற்க்கை தந்த வரம். இத்தன்மையில் அந்த பெண்ணின் உடலில் பிரபஞ்ச சக்தியின் வலிமை இறங்கி இருக்கிற நேரம்.

நம் வீட்டில் இருக்கும் 12 -13 வயது பெண்ணை பாருங்கள் புரியும். குழந்தை தனம் மாறி உடலில் மாற்றங்களை மட்டுமே நாம் வெளிப்படையாக காணமுடியும் அனால் சூட்சுமத்தில் பெரிய சக்தி வடிவமாக இருப்பார்கள். அச்சக்தியின் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். பால பருவத்தின் இறுதி நிலை குழந்தையும் தெய்வீகமும் தாண்டவமாடும் வசீகர முகம்.

இப் பெண் என்ற சக்தி மையத்திற்கு 3 நிலைகள் முக்கியமாக கருதபடுகிறது. ருது என்கிற கர்ப்பகிரக திறப்பு. சக்தி சிவனை ஆகர்ஷணமாக்கி தன்னுள் அடக்குகிற முதல் தாம்பத்திய உறவு. சக்தி,சிவம் உரு கருவாகி இருக்கிற கர்ப்ப காலம். இம்மூன்று தன்மைகளிலும் பெண் ஜொலிப்பாள். அவர்களுடைய முகம் ஒரு பொலிவு பெற்று தெய்வீக தன்மையை வெளிபடுத்துவதை காணலாம்.

பெண் ருதுவாகி சக்தியாகின்ற அந்த யோனி திறப்பை இன்றும் மிக பெரிய சக்தி விழாவாக மேற்கு வங்காளம்,கவுகாத்தியில் உள்ள காமாக்கினி கோவிலில் காணலாம்.அவ்விழாவில் சாதுக்கள்,சித்தர்கள்,நாகாக்கள்,பெருவாரியாக கலந்து கொள்கிற வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற மிக பெரிய விழா அது.

பெண்ணாகிய சக்தியில் இவ்வுண்ணதத்தை உணர்ந்து தான் நம் முன்னோர்கள் சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று கேந்திரத்தை இயக்குகிற திரிகோணத்தை போற்றி உள்ளனர். இச்சக்தியை பெண்ணை போற்றுவோம்,வணங்குவோம் .

சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள். இத்தகைய சக்தி வாய்ந்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவத்துடன் கோடி ஜப மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா ஹோமம் பூர்த்திவிழாவும், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை சங்கமம் நவம்பர் 3ஆம் தேதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Bala Tripura Sundari is the daughter of the Hindu goddess Tripura Sundari. She was born from the goddess and Sri Kameshwara. She is a form of the goddess Ashokasundari.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more