• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மகாலட்சுமியின் அருள் கிடைக்கணுமா?... கணவனின் கால்களை பிடித்து விடுங்க

|

சென்னை: ஓயாது அலை வீசும் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது படுத்திருக்கும் மகாவிஷ்ணுவின் கால்களை மகாலட்சுமி பிடித்து விட்டுக்கொண்டிருப்பார். இந்த குறியீடு ஆணாதிக்கத்தை குறிப்பதல்லவாம். கணவனின் கால்களை பிடித்து விட்டால் செல்வம் பெருகும் என்பதை குறிக்கத்தானாம். அதெப்படி கணவன் காலை பிடித்தால் செல்வம் சேரும் என்கிறீர்களா? இதை படிங்க உங்களுக்கு புரியும்.

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே வைத்துள்ளனர்.

Why is Lakshmi sitting near the legs of Lord Vishnu

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்குகீழ் வருகின்றது. அதேசமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டது என்று முன்னோர்கள் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள்.

ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இப் பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகி ன்றார்கள்.

[புரட்டாசி சனிக்கிழமையில் மகா பிரதோஷம்: விரதத்தின் மகிமை தெரியுமா?]

மிக புனிதமான உறவாக போற்றப்படுவது கணவன் மனைவி உறவே ஆகும். அந்த உறவில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்பொழுது, வாழ் க்கை சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். கணவனின் காலை மனைவி பிடித்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் அதிகரிக்கும் என்றும், வீட்டில் யோகம் பிறக்கும். மகாவிஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு இதுதான் காரணமாம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் லட்சுமிதேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

இதே போல எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் என இவர்கள் வீட்டில் லட்சுமி ஆனந்தமாக வசிப்பாள் எனப் புராணங்கள் கூறுகின்றன.

லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான்.

இதை படிப்பவர்கள் எளிதாக கோடீஸ்வரர் ஆக இப்படி ஒரு வழி இருக்கையில் பணத்திற்காக ஏன் டென்சன் ஆக வேண்டும். இரவு உறங்கும் போது கணவனின் காலை பிடித்து விடுங்க அப்புறம் பாருங்க வீட்டு அம்மணிகளின் பர்ஸ்களில், பீரோவில் சும்மா பணம் நிறையும்.

 
 
 
English summary
Lakshmi is the goddess of light, beauty, good fortune and wealth. People tend to pray to Lakshmi to achieve success, but she does not reside with anyone who is lazy and only desires her wealth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more