For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓநாய் சந்திர கிரகணம் 2020: இந்தியாவில் தெரியாது... எந்த நாட்டில் தெரியும் என்ன பாதிப்பு ஏற்படும்

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை ஜனவரி 10ஆம் தேதி நிகழ்கிறது. இந்த சந்திரகிரகணம் பற்றி தமிழ் பஞ்சாங்கங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்தியாவில் குறிப்பாக தென்இந்தியாவில் இந்த க

Google Oneindia Tamil News

சென்னை: 2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை ஜனவரி 10ஆம் தேதி நிகழ்கிறது. இந்த சந்திரகிரகணம் பற்றி தமிழ் பஞ்சாங்கங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்தியாவில் குறிப்பாக தென்இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறலாம் அதே நேரத்தில் இந்த 'ஓநாய் சந்திர கிரகணம்' ராகு கிரகஸ்த சந்திரகிரகணமாக இருப்பதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

ஆறு கிரக சேர்க்கை சூரிய கிரகணம் முடிந்து இப்போது சந்திர கிரகணம் நாளை நிகழ்க்கிறது. சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது இந்த சந்திரகிரகணம். 'புறநிழல் நிலவு மறைப்பு' பெனும்பிரல் லூனார் எக்லிப்ஸ். நிலவின் ஒரு பகுதி இருண்டு காணப்படும். இது ஓநாய் சந்திரகிரகணம் ஆகும். இந்த நிலவு மறைப்பு நான்கு மணிநேரம் வரை நீடிக்கிறது. இந்த கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளில் தெரியும்.

இந்த சந்திரகிரகணம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 37 நிமிடத்தில் தொடங்குகிறது. 11ஆம் தேதி அதிகாலை 12 மணி 40 நிமிடம் கிரகணத்தின் மத்திமகாலமாகும். கிரகணம் 11ஆம் தேதி அதிகாலை 2.42 மணிக்கு முடிகிறது. பூமி என்பது மனித உடல் சந்திரன் மனதை ஆள்பவர் சூரியன் ஆன்மா. நாம் கிரகண நாளில் மனம் உடல் ஆன்மா ஆகியவை இயற்கையாகவே இணைகிறது. கிரகணத்தன்று பறவைகள், விலங்குகள் கூட வெளியே வருவதில்லை காரணம் அதன் கதிர்வீச்சின் பாதிப்புதான்.

2020 முதல் சந்திர கிரகணம்

2020 முதல் சந்திர கிரகணம்

2019 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 26 அன்று நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரிந்தது. 2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10 ஆம் தேதி தெரியும் என நாசா அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மொத்தம் 2 சூரிய கிரகணமும் 4 சந்திரகிரகணமும் நிகழ உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அதில் முதல் சந்திரகிரகணம் நாளை ஜனவரி 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நிகழ்கிறது. இது ஓநாய் சந்திர கிரகணம் அதாவது Wolf Moon Eclipse என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் தெரியாது

இந்தியாவில் தெரியாது

பொதுவாக கிரகண காலங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். கடந்த மாதம் நிகழ்ந்த சூரியகிரகணத்தின்போது 10 மணிநேரத்திற்கு மேல் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஆனால் நாளை நிகழ உள்ள சந்திரகிரகணத்தினால் இந்தியாவில் தெரியாது என்பதால் நமது தமிழ் பஞ்சாங்கங்களில் அதைப்பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை எனவே கோவில் நடை அடைப்பு பற்றிய அறிவிப்பும் வெளியிடவில்லை.

இருட்டு நிலா

இருட்டு நிலா

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சந்திரகிரகணம் சிவப்பு நிலவாகவும், நீல நிலவாகவும் தெரிந்தது. நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் அதாவது புறநிழல் நிலவு மறைப்பு சந்திரகிரகணம். இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருட்டாக மாறாது அல்லது சிவப்பாகவும் மாறாது. 2020ஆம் ஆண்டில் நான்கு பெனம்பிரல் சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணம் கண்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது, அதனால் எந்த சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் பார்க்க முடியும்.

எங்கு தெரியும்

எங்கு தெரியும்

பூமியின் செயற்கைக்கோளான சந்திரன் நம் பூமியின் நிழல் வழியாக செல்லும் போது ஒரு பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. முழு சந்திர கிரகணத்தின்போது, முழு நிலவும் பூமியின் இருண்ட நிழலில் வழியாக கடந்து செல்கிறது, மேலும் அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இது ஒரு பகுதி கிரகணத்தின் போது, சந்திரனின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலின் வழியாக செல்கிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் இந்த கிரகணம் ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவின் சில நாடுகளிலும், ஆப்ரிக்கா, வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.

எப்போது எங்கு தெரியும்

எப்போது எங்கு தெரியும்


இந்த 2020 ஆம் ஆண்டில் முதலில் வருகின்ற சந்திர கிரகணம் இது என்றாலும், இன்னும் இதே ஆண்டில் மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் தோன்ற இருக்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி இதுவும் நிழல் போன்ற கிரகணமாகத் தான் இருக்கும். தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் சில நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். ஜூலை 5, 2020 - இதுவும் நிழல் போன்ற தெளிவற்ற கிரகணமாகவே இருக்கும். இதை வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள நாட்டு மக்கள் மட்டுமே பார்க்க முடியும்.
நவம்பர் 30, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் நிகழம் இந்த சந்திர கிரகணமானது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தெரியும்.

English summary
Chandra grahanam or Lunar eclipse 2020 will start at 10:37pm on January 10, and countries including India will be able to see it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X