For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தப் பக்கம் கத்திரி.. இந்தப் பக்கம் கொரோனா.. நடுவே புருஷன் பொண்டாட்டி சண்டை.. எப்படி சமாளிக்கலாம்

நாற்பது நாட்களாக லாக்டவுன் காலம் நீடிக்கிறது. வீட்டில் சந்தோஷமாக இருந்தாலும் நிறைய சண்டைகளும் நடக்கிறது. சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு. வீட்டு சண்டைகளை சமாளித்து இன்னும் இருக்கும் லாக் டவுன் கா

Google Oneindia Tamil News

சென்னை: இது ஒரு கொரோனா லாக் டவுன் காலம், கடந்த நாற்பது நாட்களாக ஒரே வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். பணப்பிரச்சினை, வேலை போய்விடுமோ என்ற பதற்றம் ஒரு பக்கம் எல்லாம் சேர்ந்து மன அழுத்தம் அதிகமாகி சண்டைகளும் அதிகமாகிறது. அக்னி நட்சத்திர வெயில் அனலடிக்க குடும்பத்திலும் அனல் சண்டை வீடுகிறது. முந்தைய காலங்களில் இருந்ததை விட லாக் டவுன் காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து இருக்கிறது.
குடும்ப வன்முறை தொடர்பாக தினசரியும் நூற்றுக்கணக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினை தீர என்ன பரிகாரம் செய்யலாம் என்று பாருங்க.

கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன விவாதங்கள் முற்றி பெரிய சண்டையில் முடிகிறது. சில நேரங்களில் அடிதடிவரை போகிறது. மனைவியின் டார்ச்சரில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சில ஊர்களில் கணவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதே போல கணவரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று மனைவியும் மாறி மாறி புகார் கொடுக்கின்றனர். நாடு முழுவதுமே குடும்ப சண்டைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அலுவலகத்திற்கு சென்று வரும் நபர்களுக்கு வீட்டில் சண்டை போட நேரம் இருக்காது. இப்போது லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் எல்லோடுமே வீட்டிற்குள் இருப்பதால் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில்தான் அதிகமாக சண்டைகள் அதிகமாகிறது. உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மாநிலங்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சண்டையை தவிர்க்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

கணவனோ மனைவியோ அவரருக்கும் விருப்பு வெறுப்பு தனித்தனியாகவே இருக்கும் அவரவருக்கு இருக்கும் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒன்னோட குடும்பத்தைப் பற்றி எனக்கு தெரியாதா என்று ஆரம்பித்து சின்னச் சின்ன பிரச்சினைகளை கூட ஊதி பெரிதாக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கணவன் மனைவி சண்டையில் அடுத்த நபர்களை தலையிட விடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

கோபமான பேச்சுக்கள்

கோபமான பேச்சுக்கள்

கடுமையான வார்த்தைகளினால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளக்கூடாது. ஒருத்தர் கோபமாக பேசினால் மற்றொருவர் கோபமாக பேசாமல் அமைதியாக போவது ரொம்ப நல்லது. அப்படி அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான், எனவே குடும்பத்தில் காரசாரமான விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

கணவன் மனைவி பிரச்சினை

கணவன் மனைவி பிரச்சினை

ஏதாவது ஒரு விசயத்தை பேச அரம்பித்து மற்றொரு விசயத்தை பேசினாலே சண்டை பெரிதாகும். கணவன் மனைவி பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி மட்டுமே ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

விட்டுக்கொடுங்கள்

விட்டுக்கொடுங்கள்

வேலை வீடு அலுவலகம் என்று பறந்து கொண்டிருந்தவர்கள் ஒரே குடும்பத்தில் சேர்ந்திருக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த இது நல்லதொரு வாய்ப்பு. சின்னச் சின்ன தவறுகளை மன்னிக்க பழகிக்கொள்ளுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. விட்டுக்கொடுங்கள், தியாகம் செய்யுங்கள்.

நேசமான பேச்சுக்கள்

நேசமான பேச்சுக்கள்

தம்பதியர் அடிக்கடி மனம் விட்டு பேசுங்கள். பணப்பிரச்சினை, வேலையிழப்பு, சம்பளத்தில் பிடித்தம், வீட்டு பட்ஜெட்டில் சிக்கல் என எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து வரும் இன்றைய கால கட்டத்தில் வருவதால் பலருக்கும் மன உளைச்சல் வரும். இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று பேசுங்கள். மனதிற்கு பிடித்த பாட்டு, யோகா செய்யுங்கள். இது தம்பதியர் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். நேசமான பேச்சும் பரிவான பார்வையும் சமாதானக்கொடியை பறக்கவைக்கும்.

சண்டை தீர்க்கும் பரிகாரம்

சண்டை தீர்க்கும் பரிகாரம்

குடும்பத்தில் அனைவரும் சேர்ந்திருக்கும் இந்த நேரத்தில் பிரச்சினைகள் தீர சில பரிகாரங்களை செய்யலாம். சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், மன வலிமை உண்டாகும். கஷ்டங்கள் தொலைந்து போகும் வாழ்வு வளம் பெறும். வீட்டில் துளசி செடி வளர்ப்பவர்கள் தினந்தோறும் தண்ணீர் விட்டு வர தம்பதியர் இடையே ஏற்படும் பிரச்சினைகள் தீரும்.

English summary
The Coronavirus lockdown began there has been an increase in domestic abuse complaints. When Home is more dangerous than the coronavirus unsafe situations under the shadow of domestic violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X