• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிப்பு பிரியரா நீங்க? நீரிழிவு பற்றி குருவும் சுக்கிரனும் சொல்வதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்!

By Staff
|

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் நீரிழிவு நோயிற்க்கு ஜோதிட ரீதியான காரணங்களை விளக்கவே இந்த கட்டுரை.

world diabetes day observed on november 14 each year to raise awareness and provide affordable care to all

நீரிழிவு நோய்:

முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது.சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். இந்தக் கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவில் உண்டாகும் குறைபாடே சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் என்ற குறைபாடுதான் பல நோய்கள் உடம்பில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழித்தல்எப்போதும் பசித்தல்தண்ணீர் அதிகமாகக் குடிப்பதுஎப்போதும் களைப்பாக இருக்கும்ஆறாத புண்பிறப்புறுப்பில் இன்பெக்சன்உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல்காரணமில்லாமல் எடை குறைதல்இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவுமிகக் கூடுதல் எடைகால் மரத்துப் போய் உறுத்துதல்மங்கலான பார்வை

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயிற்க்கான ஜோதிட காரணங்கள்:

குரு மற்றும் சுக்கிரன் இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். இவ்விருவரும் தாமாக தனிப்பட்ட எந்த வியாதியையும் உருவாக்குவதில்லை, குறைபாட்டினைத் தோற்றுவித்து பலவிதமான நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகிறார்கள்.

ஆனால் நீரிழிவு வியாதியைத் தருவது குருவும், சுக்கிரனும்தான் என்று கூறப்படுகிறதே அது எப்படி என்ற கேள்வி எழலாம். குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இந்தச் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது, அப்படியென்றால் இவர்கள் எல்லோரின்

ஜாதகத்திலும் குருவும், சுக்கிரனும் வலுவிழந்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

குருவும், சுக்கிரனும் சாதகமாக அமர்ந்திருந்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் 80 வயதிற்கு மேற்பட்டும் அன்றாடம் மருந்துகளை உட்கொண்டு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்திருப்பர்.

குரு - சுக்கிரனின் வலு குன்றியிருந்தால் 50 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோயின் தாக்கத்தால் பெருத்த பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதே இதற்கான பதில்.

நீரிழிவு நோயை உருவாக்கும் கிரக நிலைகள்:

1.குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் வந்து விடுகிறது. குருஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி பெற்று மருந்து மாத்திரைகளுடன் பிரச்சனையின்றி வாழ்ந்திடுவர். ஆனால் குரு நீசமும் வக்ரமுமடைந்தவர்களுக்களுக்கு மருந்துகளும் பலனின்றி அவதியுருவர்.

2. கல்லீரலுக்கு காரகமான குரு கால புருஷனுக்கு ஆறாம் வீடு எனப்படும் கன்னி ராசியில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெற்று நிற்பது. மற்றும் சுக்கிரன் நீசமடைவது. கன்னியில் நீசமடைந்த சுக்கிரன் செரிமான கோளாரை ஏற்படுத்தி நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடுகிறது.

3. துலாம்,மீனம் மற்றம் தனுசு,ரிஷபம் லக்னமாகவோ ராசியாகவோ பெற்றவர்களுக்கு குருவும் சுக்கிரனும் சஷ்டாஸ்டகமாக நின்று சர்க்கரை நோய் ஏற்பட்டுவிடுகிறது.

4. எந்த லக்னமானாலும் அதன் ஆறாம் வீட்டில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு அதிபதிகளாகி அசுபத்தன்மை பெற்று நிற்பது.

5. கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீடாகிய மீனத்தில் குரு ஆட்சி பெறுவது அல்லது சுக்கிரன் உச்சமடைவது.

6. ஜெனன ஜாதகத்கதிலோ அல்லது கோச்சாரத்லதிலோ கன்னி ராசியில் சனி நிற்ப்பது இறுதிநிலை அல்லது தீவிரமான உச்ச நிலை சர்க்கரை நோயை தெரிவிக்கிறது. கன்னியில் வாயு கிரகமான சனி செரிமான கோளாரு, வாயுத்தொல்லை, கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் என்சைம் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி தீவிர சர்க்கரை நோயை ஏற்படுத்திவிடுகிறது.

7.குரு ராகு சாரம் பெற்று நிற்பது, ராகுவுடன் இனைந்து நிற்ப்பது சுக்கிரன் சனி சாரம் பெறுவது மற்றும் சுக்கிரன் சனியுடன் இனைந்து நிற்ப்பது குருவும் சுக்கிரனும் பாதகாதிபதி தொடர்பு பெறுவது அல்லது பாதகாதிகளாகவே நிற்பது பிறப்பிலிருந்தே சர்க்கரை நோய் ஏற்பட்டு விடுகிறது.

8.சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கை எந்த விதத்தில் ஏற்பட்டாலும் அதிக கார்போஹட்ரேட் உணவுகளினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

9. வைட்டமின் B6 (காரக கிரகம் குரு) குறைபடுள்ளவர்களுக்கு அமினோ அமிலமான ட்ரிப்டோபான் (Tryptophan) ஸாந்துரனிக் (Xanthurenic acid) அமிலமாக மாற்றமடைந்து குறைந்த கால இடைவெளியில் கனையம் சிதிலமடைந்து ரத்தத்தில் சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது. அதனால் அதிகளவு குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து செல்லிலிருந்து அதிகளவு நீரினை வெளியேற்றுவதால் அடிக்கடி சிறுநீரு கழிப்பது நாவரட்சி போன்றவை ஏற்படுகிறது.

மேலும் வைட்டமின் B6 என்பது பெண்கள் கருத்தரிக்க மிகவும் அவசியமானது. எனவே பெண்களுக்கான வைட்டமின் (Female vitamin) என செல்லமாக அழைக்கப்படுகிறது. புத்திர காரகனாகிய குரு இதற்க்கும் காரகமாவது எவ்வளவு பொருத்தமானதன்றோ!

10. தாதுக்களில் முக்கியமானதான மாங்கனிசு (காரக கிரகம் குரு) மற்றும் க்ரோமியம் (காரக கிரகம் குரு) குறைபாடும் கனைய செயல்பாடு மற்றும் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

ஜோதிட பரிகாரங்கள்:

குரு பரிகாரஸ்தலங்களான திரு ஆலங்குடி,தென்குடி திட்டை, திருசெந்தூர் போன்ற ஸ்தலங்களுக்கும் சென்னையில் உள்ளவர்கள் திருவலிதாயம் அம்பத்தூர் பாடியில் உள்ள குரு ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது வியாழக்கிழமை மகான்கள் தரிசனம் மற்றும் விரதமிருப்பது ஆகியவை சர்க்கரை நோய் வருவதை தடுக்கும். நோய் ஏற்பட்டவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனேயின்றி விரதமிருக்க கூடாது.

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும் சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோஷம் குறையும். விருத்தியடையும். பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நல்லது. அத்துடன் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. அங்கு சென்று தேவியருடன் அருள்பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும்.

சென்னை மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற வெள்ளளீஸ்வரர் ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை பிரார்த்தித்து வழிபட குடும்பத்தில் நலங்களும், வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்கள் சம்பந்தமான கோளாறுகள், மற்றும் சர்க்கரை நோய் நிவர்த்தியாகும். பரிகார ஸ்தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தோஷங்களும் நீங்கும். சுபிட்சம் உண்டாகும்.⁠⁠⁠⁠

ரத்தத்தை குறிக்கும் காரக கிரகமான செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும்.

இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும்.

மருத்துவ முறைகள்:

ஆயுர்வேதத்தில், நீரிழிவு மதுமேகம் என அறியப்படுகிறது. ஆயுர்வேத, நீரிழிவு நோய் ஒரு வளர்சிதை மாற்ற கபம் வகை சார்ந்த நோயாக கருதப்படுகிறது இதில் அக்னி (செரிமான தீ) குறைபாடு காரணமாக அஜீரன கோளாருகளால் கனயத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.

மதுமேகாதி சூர்னம், வஸந்த குசுமாகர ரஸம், அஸ்வ கந்தா சூர்னம் (அமுக்கார சூர்னம்) போன்ற மருந்துகள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நோயை கட்டுக்குள் வைக்கும.

கசப்பு சுவையின் காரகர் சனைச்சர பகவான் ஆகும். சனைச்சர பகவானின் காரகம் நிறைந்த பாகற்காய் சர்க்கரையின் அளவை குறைப்பதில் பெரும்பங்கு பெறுகிறது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஆயுர்வேதம்.

அமிர்த சர்க்கரை எனும் சீந்தில் சர்க்கரை (டினோஸ்போரா கார்டிபோலியா):

பலருடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல் / மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவு வகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு, மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது என்று குறிப்பிடபட்டுள்ளது. சுக்கிரன் நீசம் அடைவது, சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து நிற்பது போன்றவை பலருடன் உடலுறவு கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

சீந்தில் கொடி குருவின்தன்மையும் சுக்கிரனின் தன்மையும் நிறைந்த கொடிவகை தாவரமாகும். இதனை வஞ்சிக்கொடி என்றும் அழைப்பார்கள். சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு.

வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது.

சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
World Diabetes Day falls every year on 14 November and is a day when millions of people around the world come together to raise awareness of diabetes, and what it’s really like to live with the condition. It’s a global campaign led by the International Diabetes Federation with activity taking place around the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X