For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக கிட்னி தினம் 2020: ஜாதகத்தில் சுக்கிரன் சுகமா இருந்தா சிறுநீரகமும் சுகமா இருக்கும்

நோய்கள் ஏற்பட்டால் மருத்துவ ஜோதிடத்தில் அதற்கான காரணங்களை அறியலாம். நமது ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி பார்வையை பொறுத்து நோய்கள் ஏற்படுகின்றன. உலக கிட்னி தினமாக கடைபிடிக்கப்படும் இன்றைய தினம

Google Oneindia Tamil News

சென்னை: சுக்கிரன் சுக போகங்களை தரக்கூடியவர். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுகமாக இருந்தால் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் யோகங்களையும், பாவ கிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் அவரே நோய்களையும் கொடுப்பார். சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீராக கோளாறுகள் ஏற்படுகின்றன. மார்ச் 12ஆம் தேதியான இன்று உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் கிட்னி பிரச்சினை வரும் மருத்துவ ஜோதிடத்தின் மூலம் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

சிறுநீரக செயலிழப்பு என்பது ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும். எந்த வயதிலும் சிறுநீரக செயலிழப்பு வரலாம். குழந்தைகளை பொறுத்தளவில் மிகவும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆயிரம் பேர். இதில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்றவை சிறுநீரகம் செயல் இழக்க காரணமாகிறது. நீர் வறட்சி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வது சிறுநீரக பிரச்சினைக்கு காரணமாகும். நோய் முற்றிய பிறகுதான் சிறுநீராக கோளாறு ஏற்படும். சர்க்கரை நோயையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் சிறுநீரகம் பாதிப்படைவதை தடுக்கலாம்.

சுக்கிரன்

சுக்கிரன்

மனித உடலில் சிறுநீராகத்தையும் அதன் செயல்பாட்டையும் குறிப்பவை துலாம் ராசியும் சுக்கிரனும். துலாம் ராசி கால புருஷ தத்துவப்படி ஏழாம் ராசி. சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதி. சுக்கிரன் களத்திரகாரகன் அவரே ஏழாம் வீட்டு அதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் துலாம் ராசியும் சுக்கிரனும் ராகு கேது உடன் தொடர்பு ஏற்பட்டிருந்தால் சிறுநீராக கோளாறு ஏற்படும். டயாலிசிஸ் சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

சிறுநீரக கோளாறு

சிறுநீரக கோளாறு

குருபகவான் துலாம் ராசியில் இருந்து ஆறாம் வீட்டு அதிபதி ராகுவின் தொடர்பு ஏற்படுமானால் அந்த நபருக்கு கிட்னி பிரச்சினை ஏற்படும். லக்னத்திற்கு ஆறாம் வீட்டிற்கு அதிபதி சனி பகவான் குரு சுக்கிரன் கிரகங்களுக்கு ராகு கேதுவினால் பாதிப்பு ஏற்படுமானால் சிறுநீராக கோளாறு ஏற்படும்.

கிட்னி கோளாறு ஏற்படுவது எப்படி

கிட்னி கோளாறு ஏற்படுவது எப்படி

சுக்கிரன்தான் சுகங்களை தரக்கூடியவர். அவரே களத்திரகாரகன். மனிதர்களுக்கு ஆடம்பர ஆசையை தூண்டுபவர். பெண் மற்றும் பொன் ஆசையை தூண்டுபவர். அசுரகுருவாக போற்றப்படுகிறார். ரிஷபம், துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் இவர் மீனம் ராசியில் உச்சமடைகிறார். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கிட்னி நோய்கள் சிறுநீரக கற்கள், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். பெண்களுக்கு சிறுநீராக கோளாறுகள், கருப்பை கோளாறுகள் விந்தணு கோளாறுகள் ஏற்படும். மர்மநோய்கள் ஏற்படும்.

பிரச்சினைக்கு காரணம்

பிரச்சினைக்கு காரணம்

சிறுநீரகம் நன்றாக இயங்க சுக்கிரன் மட்டுமல்ல குருவின் பார்வையும் அவசியம். சந்திரனின் பலமும் நன்றாக இருக்க வேண்டும். பாவ கிரகங்களின் சேர்க்கை பார்வை இல்லாமல் இருக்க வேண்டும். ராகு உடன் சுக்கிரன் சேர்க்கை பார்வை இருந்தால் சிறுநீராக கோளாறு ஏற்படும். உடலில் துர்நாற்றம் வீசும்.

பாதிப்பு தீர பரிகாரம்

பாதிப்பு தீர பரிகாரம்

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். சுக்கிரனுக்கு உகந்தது மொச்சை, தண்ணீர் காய்கறிகள், சாமை அரிசி, இஞ்சி, நாவல் பழம், நன்னாரி போன்றவைகளை சாப்பிடலாம். நெல்லிக்காய், அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடலாம். இரும்புச்சத்து, வைட்டமின் பி6 அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடலாம்.

சிறுநீரக நோய் தீர்க்கும் நடராஜர்

சிறுநீரக நோய் தீர்க்கும் நடராஜர்

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சநதன நடராஜர் ஸ்தலம் சிறுநீராக கோளாறுகளை நீக்குகிறது. ஆசியாவிலேயே மிகவும் அரிதானது இந்த நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

English summary
Libra sign rules over kidney, today we will discuss about the number of kidney diseases has increased now a days. The excess drugs and allopathic drugs have side effects. they suffering from kidney troubles which end in failure of kidney or need transplantation of kidney.Mainly The kidney is ruled by 7th house and 7th lord. Any affliction to 7th house or 7th lord causes kidney troubles.Jupiter , venus and Moon are the karaka of kidney disease. Venus is karaka of the 7th house and Libra sign rules the 7th house of natural zodiac.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X