For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக காச நோய் தினம் : கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி நோய் டிபி

கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி நோய் டிபி எனப்படும் காசநோய். காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பற்றி இன்றைக்கு பேசாதவர்களே இருக்க முடியாது காரணம் 2020 ஆண்டில் அதிக அளவில் பலரை பற்றி பரவி உயிரை குடித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நம்பர் 1 உயிர்கொல்லி நோய் டிபி எனப்படும் காசநோய்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். எய்ட்ஸ், மலேரியாவை விட காசநோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காசநோய் பற்றிய காசநோய் கிருமியை உலகுக்கு அறிமுகப்படுத்திய மார்ச் 24ம் தேதி, காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 சதவிகிதம் பேர் இந்தியர்கள். காசநோய் வராமல் தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் இல்லை. தொடர்ந்து இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோய் அறிகுறிகள். நோயாளிகள் 6 மாதங்கள் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள். இந்தியாவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர். சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்புகின்றனர்.

காசநோய் எப்படி பரவும்

காசநோய் எப்படி பரவும்

காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium tuberculosis) என்கிற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்தியாவில் 40 சதவிகித மக்களுக்கு காசநோய் கிருமியின் தொற்று உடலில் இருக்கிறது. ஆனால் அது நோயாக மாறாத உள்ளுறைந்த தொற்றாக இருக்கிறதாம். இதை லேட்டன்ட் டிபி என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நபர்களைத்தான் காசநோயாளியாக மாற்றும். சர்க்கரை நோயாளிகள், மது, போதை பழக்கம், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களை காசநோய் எளிதில் தாக்கும்.

நுரையீரலை தாக்கும்

நுரையீரலை தாக்கும்

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் முறையற்ற இருமல், தும்மல் மற்றும் கண்ட இடங்களில் சளி துப்புதல் போன்றவற்றால், காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் அந்நோய் பரவுகிறது. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் வரலாம். முடி மற்றும் நகத்தை தவிர அனைத்து இடங்களையும் காசநோய் தாக்கும். குறிப்பாக, நுரையீரலை அதிகம் பாதிக்கிறது.

சந்திரன் பாதிப்பு

சந்திரன் பாதிப்பு

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் இதய நோய், நுரையீரல் நோய், மனநோய், காசநோய், குளிர் கபசுரம் போன்றவை ஏற்படும். யாருடைய ஜாதகத்தில், சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிறதோ அல்லது விருச்சிக ராசியில், நீசம் அடைந்தாலோ இந்த நோய் அவர்களை கண்டிப்பாக ஏதாவது ஒரு வயதில் தாக்கும். இதிலிருந்து விடுபட திங்கள் கிழமைகளில், நவக்கிரகங்களில் சந்திரனை வெள்ளை மலர் கொண்டு வழிபட வேண்டும்.

செவ்வாய் சனி ராகு

செவ்வாய் சனி ராகு

ஒருவருடைய ஜாதகத்தில் தொண்டை மற்றும் நுரையீரலை குறிக்கும் மிதுன ராசி 6,8,12 தொடர்புகள் பெறுவது, மிதுனத்தில் செவ்வாய், சனி, ராகு கேது போன்ற கிரஹங்கள் நின்று அசுபத்தன்மை பெறுவது காசநோய் பாதிப்பை ஏற்படுத்தும்.

நுரையீரலை தாக்கும்

நுரையீரலை தாக்கும்

தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவ தொடர்புகள், செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படும் நிலையை ஏற்படுத்துகிறது.

தன்வந்திரி மந்திரம்

தன்வந்திரி மந்திரம்

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு நிவாரணம் பெறலாம். சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. "ஓம் நமோபகவதே வாசு தேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ருலோக்யநாதாய" என்ற மந்திரத்தை சொல்லி வணங்கலாம். தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

English summary
Every year, we celebrate World Tuberculosis Day on March 24 to raise awareness about the staggering health, social and economic outcomes of TB, and to increase efforts to end the worldwide TB epidemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X