• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பாதிப்பு - சீனாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே அகத்தியர் சொன்ன உண்மை

|
  சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

  சென்னை: தன்வினை தன்னைச்சுடும் என்பார்கள் அப்படித்தான் இப்போது சீனா மாட்டிக்கொண்டு விழிக்கிறது. கொரொனா வைரஸ் சீனாவை மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகளை நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. சாதாரணமான சளியில் இருந்து ஆரம்பித்து மிகக்கொடிய நிமோனியா வரை சென்று மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இது. இந்த நோய் தாக்குதலுக்கு மூலகாரணமாக இருப்பது பாம்பு கறி என்று சொன்னாலும் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் என குளிர்ச்சியான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். சில மாதங்களுக்கு தவிர்த்து விடுங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலினால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தாலும் சீனாவே முடங்கி கிடந்தாலும் இன்னமும் உண்மை வெளி வரவேயில்லை. ஆனால் கொரோனா வைரஸ் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர் பாடலில் கூறியுள்ளனர்.

  உலகம் முழுக்க வல்லரசு நாடுகள் தற்போது பயோ வார் எனப்படும் உயிரியல் போருக்காக தயாராகி வருகிறது. சீனா, இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயோ ஆயுதங்களை தயாரித்து வருகிறது. வுகான் நகரத்தில் உள்ள பயோ சோதனை கூடத்தில் நடந்த தவறுதான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று புகார் வைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கிருமிகளை வைத்து சீனா ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும் அதுதான் தற்போது தவறுதலாக வெளியே பரவிவிட்டதாகவும் உலக அரங்கில் சீனாவின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

  ஏழாம் அறிவு படத்தில் வருவது போல மோசமான நோய் கிருமிகளை உருவாக்கி அதை எதிரி நாட்டிற்கு பரப்ப சீனா நினைத்திருக்களால் ஆனால் சீனா நாட்டு மக்களே தற்போது சாக தொடங்கி இருக்கிறார்கள். தன்வினை தன்னைச் சுடும் என்பது போல தான் உருவாக்கிய கிருமி தற்போது தன்னையே பதம் பார்க்கத் தொடங்கிவிட்டது என்கின்றனர்.

  சளியில் தொடங்கி சாகடிக்கும் வைரஸ்

  சளியில் தொடங்கி சாகடிக்கும் வைரஸ்

  நோய் எதிர்ப்பு சக்தி என்ற வெள்ளை அணுக்கள் நம் உடம்பில் ராணுவம் போல செயல்படும். அது சரியாக இருந்தால் எந்த நோயும் உடம்பிற்குள் அண்டாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. சாதாரண சளி இருமல் என்றுதான் முதலில் உடம்பிற்கு நுழைந்து படிப்படியாக பதம் பார்க்கிறது இந்த கொரோனா வைரஸ். முதல் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை எந்த எபெட்டும் காட்டாது

  அப்புறம்தான் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறது கொரோனா.

  முடங்கிய சீனா

  முடங்கிய சீனா

  கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளான வுகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது. சீனா பங்குச்சந்தை படுபாதாளத்தை எட்டியுள்ளது பங்குச்சந்தையே மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த நாட்டு மக்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றனர். வுகான் வீழாது வுகான் மீண்டும் எழும் என்பதே இந்த மக்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. இந்த வரிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

  கொரோனா தாக்கியது எப்போது

  கொரோனா தாக்கியது எப்போது

  இந்த வைரஸ் தாக்குதல் பற்றி சீனா இதுவரைக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. வவ்வால், பாம்பு என்று சொன்னாலும் உயிர்கொல்லி வைரஸ்களை உருவாக்கும் சோதனைக்கூடங்களில் இருந்துதான் இது உருவாகியிருக்கலாம் சந்தேகமும் உலகத்தின் முன்பு எழுந்துள்ளது. இதை உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்காமல் பொருளாதார ரீதியாக தொடுக்கப்பட்ட போராகவே நாம் கருதவேண்டும்.

  கொரோனா வைரஸ் பாதிப்பு நவம்பர் மாதமே சீனாவில் தாக்கத்தொடங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்புகின்றனர். டிசம்பர் இறுதியில்தான் இதை வெளியே விடுகின்றனர் என்று சொல்கின்றனர்.

  சூரிய கிரகணம்

  சூரிய கிரகணம்

  தனுசு ராசி நெருப்பு ராசி. இந்த ராசியில் சனி, குரு, கேது, சூரியன், சந்திரன், புதன் ஆகிய ஆறு கிரக சேர்க்கையும், சூரிய கிரகணமும் இந்த நோய் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் வெளிநாட்டு ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவில் திபெத் தவிர அனைத்து பகுதிகளுமே கொரானோ வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோயில் இருந்து மக்களை காக்க புதிய மருத்துவமனையே கட்டப்போகிறார்கள்.

  சீனாவில் அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் எங்க இருந்து பரவியது என்று தெளிவாக சொல்லலை

  ஆனால் சீனா ரொம்ப அமைதியாக இருக்கிறது.

  மவுனம் சாதிக்கும் சீனா

  மவுனம் சாதிக்கும் சீனா

  விலங்குகளின் மாமிசங்களை உயிரோடு சாப்பிடுபவர்கள் சீனர்கள் வுகான் மேயர் கூட உண்மையான பிரச்சினையை வெளியே சொல்ல தயாராக இல்லை. உலக அளவிலான பிரச்சினையாக மாறி வந்தாலும் சீனா மவுனம் சாதிக்கிறது. 5000 பேர் வரை சீனாவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் உள்ள 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இருமல் தொண்டை வலிதான் இதற்கான அறிகுறி. மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இது சீனாவின் பிரச்சினை மட்டுமல்ல உலக பிரச்சினையாக மாறப்போகிறது.

  சைவத்திற்கு மாறும் சீனர்கள்

  சைவத்திற்கு மாறும் சீனர்கள்

  உடம்பில் ஏற்கனவே நோய் இருப்பவர்களை தாக்குகிறது கொரோனா. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை தருகிறார்கள். சளி இருமல் சுவாசப்பிரச்சினை கொண்ட நோயாக இது உருவாகி பின்னர் சுவாசத்தை நிறுத்துகிறது. சீனாவில் உள்ள முக்கிய நகரங்களில் உணவு தட்டுப்பாடு, பால் தட்டுப்பாடு காய்கறி பழங்கள் தட்டுப்பாடு இருக்கிறது. பாம்புக்கறி, எலிக்கறி, பல்லிக்கறி சாப்பிட்ட சீனா மக்கள் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறத் தொடங்கியிருக்கின்றனர்.

  பாம்பின் விஷம்

  பாம்பின் விஷம்

  இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சித்தர் பாடலில் எழுதப்பட்டுள்ளது. தேவர்களும் அசுரர்களும் பாம்பை இரு பக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விஷத்தைக் கக்கியது. உண்மையில் அது விசமில்லை கொரோனா வைரஸ். அந்த வைரசை சிவன் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது. இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம். அதை அறிந்துதான் மக்களைக் காக்க சிவன் பாம்பை கழுத்திலே அணிந்து தெய்வ அந்தஸ்துக் கொடுத்து பாம்பை உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம்.

  ஓலைச்சுவடியில் கொரோனா

  ஓலைச்சுவடியில் கொரோனா

  சீனாவில் பாம்பு கறியை சமைக்காமல் சாப்பிட்டவரிடம் இருந்துதான் இந்த வைரசே பரவியது என்று சொல்கின்றனர். இதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.

  "சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு

  கர்ப்பமறியா கன்னியும்

  வாயு பகவான் பகைகொண்டு

  பித்தம் சித்தம் சிதைகொள்வாள்"

  இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் பாதிக்கப்பட்டு, பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை பாதிக்கப்பட்டு இறப்பார்கள் என்று கூறியிருக்கிறார் சித்தர்.

  எது எப்படியோ சீனா கொரோனா வைரஸ் பாதிப்பினால் முடங்கியுள்ளது. இந்த நோய்க்கு எப்போது மருந்து கண்டுபிடித்து மீளப்போகிறார்களோ தெரியவில்லை. இன்னும் எந்தெந்த நாட்டு மக்கள் பாதிக்கப்போகிறார்களோ பார்க்கலாம்.

   
   
   
  English summary
  Wuhan Coronavirus outbreak in astrology and astrogeography. Data and analyses for the new SARS related virus outbreak on the climax of the Six Planet conjunction.The symptoms of most coronaviruses are similar to any other upper respiratory infection, including runny nose, coughing, sore throat and sometimes a fever. In most cases, you won't know whether you have a coronavirus or a different cold-causing virus, such as rhinovirus.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X