For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடலையும் மனதையும் வலுவாக்கும் யோகா... உங்க ஜாதகம் என்ன சொல்லுது?

ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் அமைப்பைப் பொருத்து அவர் யோகா கற்றுக்கொண்டு சிறந்து விளங்குவார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்கு தொடர்பு பெற்றால் யோகாசனத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. சபை யோகா தினத்தை அறிவித்தது. இந்த ஆண்டுக்கான யோகா தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இன்றைய அவசர உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டோம். அதனால் பல வியாதிகளை சுமந்து வாழ்ந்து வருகிறோம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல் காலங்கடந்து யோகா செய்வதால் பலன் கிடைக்காது.

யோகாவினால் நன்மை

யோகாவினால் நன்மை

யோகா உடம்பையும் மனதையும் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும். மேலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்

வருமுன் காப்போம்

வருமுன் காப்போம்

நோய் வந்தபின் மருத்துவரிடம்சென்று அவர் தரும் மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிடுவதைவிட நோய் வருமுன்யோகாசனங்களை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.

நோய்களுக்கு தீர்வு

நோய்களுக்கு தீர்வு

ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள் நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

யோகா ஒரு அங்கம்

யோகா ஒரு அங்கம்

இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை நீங்கள் மூட்டை கட்டிவைத்துவிட்டு நமது உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்கவேண்டும். முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஜோதிடத்தில் யோகாசனத்திற்கான கிரக நிலைகள்:

ஜோதிடத்தில் யோகாசனத்திற்கான கிரக நிலைகள்:

1. யோகாசனம் கற்கவும் தொடர்ந்து செய்யவும் ஒருவர் ஜாதகத்தில் லக்னம், முயற்சி பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் நிறைவேற்றும் பாவமான பதிறோராம் பாவம் ஆகிவை பலமாக இருக்க வேண்டும்.

2. காலபுருஷனுக்கு லக்னமாக மேஷமும் மூன்றாம் பாவமாக மிதுனமும் பதினொராம் பாவமாக கும்பமும் வருவதால் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகியவற்றின் தொடர்பு அவசியமாகும்.

3. கிரகங்களில் விளையாட்டை குறிக்கும் செவ்வாயும் சுவாசத்தை குறிக்கும் புதனும் எலும்பை குறிக்கும் சனியும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும். இவற்றோடு உடம்பை குறிக்கு சந்திரனும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

4. உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்க்கு தொடர்பு பெற்றால் யோகாசனத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

5. வளையும் தன்மை பெறுவதற்கு மூலை ராசிகளின் தொடர்பும் லக்னத்திற்கோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களுக்கோ அமைய வேண்டும்.

6. யோகா ஆசிரியர்களாக அமைய ஆறு மற்றும் பத்தாம் பாவ தொடர்போடு குரு சேர்க்கையும் பெற வேண்டும்.

7. பிரபல யோகா குருமார்களின் ஜாதகங்களில் மூலை ராசிகளில் லக்னம் அமைவது அல்லது செவ்வாயின் வீடுகளில் லக்னம் அமைவது, சனியின் வீடுகளில் லக்னம் அமைந்து செவ்வாய் உச்சம் பெறுவது போன்ற நிலைகள் காணப்படுகின்றன. மேலும் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பது, சந்திரன் உச்சம் பெற்று நிற்பது ஆகியவையும் குறிப்பிடத்தக்க நிலைகளாகும்.

8. செவ்வாயின் வீடுகளை லக்னமாக பெற்றவர்களுக்கு மூன்றாம் பாவம் அல்லது பதினோறாம் பாவம் புதனின் வீடுகளாக வருவது யோகாவில் சிறக்க சிறப்பான கிரக நிலைகளாகும்.

யோக கலையில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய திருக்கோயில்கள்:

யோக கலையில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய திருக்கோயில்கள்:

1. பதஞ்சலி முனிவர் இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோக கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

திருச்சி சென்னை சாலையில் பெரம்பலுருக்கு அருகில் திருப்பட்டூர் எனும் இடத்தில் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயில் எனும் பிரம்மா மற்றும் குருவிற்கான கோயில் உள்ளது அதன் அருகே பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியும் புலிக்கால் முனிவரின் திருக்கோயிலும் அமைந்துள்ளது. அங்கு சென்று குரு, பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் ஆகியவர்களை வணங்குவது யோகக்கலையில் சிறப்பை தரும்.

2. அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் யோகக்கலைகளில் சிறந்து விளங்கியது புராணங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அவர்களின் ஜீவ சமாதிகளை வணங்குவது, தாம்பரம் கேம் ரோடு அருகே பதினெட்டு சித்தர்களுக்கான ஆலயத்தில் சென்று வழிபடுவது ஆகியவை யோகக்கலை பயில விரும்பும் மற்றும் யோக கலை ஆசிரியர்களாக விளங்க சிறந்த வழிபாட்டு தலங்களாகும

3.தமிழ் சித்தர்களின் முதற்கடவுளாக விளங்குபவர் முருக பெருமானாவார். அவரே செவ்வாய்க்கும் அதிபதியாவார். அவரை பழனி மலையில் சென்று தரிசிப்பது யோககலையில் சிறந்த நிலை அடைய உதவும்.

4. சிதம்பரம் நடராஜபெருமானின் நடன நிலை யோகக்கலையின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.

English summary
Yoga astrology focuses on the link between the traditional areas of the body in astrology, and how we can strengthen them through yoga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X