For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகினி ஏகாதசி விரதம் : தன்வந்திரிக்கு பகவானுக்கு பஞ்ச மூலிகை அபிஷேகம்

ஆடி செவ்வாய்கிழமை நாளைய தினம் ஏகாதசி யோகினி ஏகாதசி என்பதால் தன்வந்திரி மூலவருக்கு பஞ்ச மூலிகை தீர்த்தங்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நோய் நீங்கி ஆரோக்யம் பெற யோகினி ஏகாதசியான நாளை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் தீர்த்தத்துடன், கரும்பு, அருகம்புல், சந்தனாதி தைலம், வில்வம் போன்ற தீர்த்தங்களுடன் மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஆடியில் தேய்பிறையின் போது வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்றும், வளர்பிறையில் வரும் ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசி வருகிற செவ்வாய்கிழமை 07.08.2018 ஏகாதசி யோகினி ஏகாதசி என்பதால் தன்வந்திரி மூலவருக்கு பஞ்ச மூலிகை தீர்த்தங்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

Yogini Ekadashi virath Ashadha month Dhanvantri arokya peedam

குபேரனின் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியாளனான ஹேமமாலி என்பவன் தனது அழகான மனைவி மீது கொண்ட மையலால், வழக்கமான தனது பணியை மறந்து போனதால், குபேரனால் சபிக்கப்பட்டு குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான்.

அப்போது ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகினி ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான். பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகினி ஏகாதசி எனப்பட்டது.

பல்வேறு நோய் தீர பஞ்ச மூலிகை அபிஷேகம் :

பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்திரியங்கள் இருக்கின்றன. பஞ்ச இந்திரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தைக் கிரகிப்பது கண். சப்தத்தைக் கிரகிப்பது காது. கந்தத்தை (மணம்) கிரகிப்பது மூக்கு. ரசத்தை (சுவை) கிரகிப்பது நாக்கு. ஸ்பரிசத்தைக் கிரகிப்பது சருமம். இந்த பஞ்ச இந்திரியங்கள் நல்ல முறையில் செயல்பட்டு உடல் பிணி மற்றும் உள்ளத்து பிணி நீங்கி மனிதன் ஆரோக்யமாக வாழவேண்டியும் தன்வந்திரி மூலவருக்கு கீழ்கண்ட பஞ்ச திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் மற்றும் தன்வந்திரி மஹா ஹோமம் நடைபெறுகிறது.

பஞ்ச திரவியமும் அபிஷேக பலன்களும் :

சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கவும். கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், நீரிழிவு நோயை தடுக்கவும், நெல்லிப்பொடி தீர்த்தம் கொண்டு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இரத்தம் சுத்தி அடையவும் கண் பார்வையில் தெளிவு பெறவும், இரத்த மூலம் நீங்கவும், சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகவும் தன்வந்திரி மூலவருக்கு அருகம்புல் சாரில் அபிஷேகம் நடைபெறுகிறது.

உடல் எடையைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், சுறுசுறுப்பாக இயங்கவும், கரும்பு சாரினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

உடல் சூடு தனியவும், மேக நோய்கள் விலகவும், மலட்டுத் தன்மை நீங்கவும் சந்தனாதி தைலத்தினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

கண் வலி, கண் எரிச்சல் நீங்கவும், காச நோய் மற்றும் தொற்று வியாதிகளை தடுக்கவும், வில்வ தீர்த்தத்தினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

காக்கும் கடவுள் தன்வந்திரி

தன்வந்திரி பெருமாள் அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றியவர். திருமாலின் அவதாரம். தேவர்களை காக்கும் பொருட்டு காக்கும் கடவுளாக தன்வந்திரியாக அவதரித்தவர். இவர் மருத்துவத்தின் கடவுள் என்றும் ரிக், யசூர், சாமம் மற்றும் அதர்வணம் போன்ற 4 வேதங் களையும் பிரம்மன் படைத்து அதன் சாரமாகிய ஆயுர் வேதத்தையும் படைத்தவர் ஆவார். மேலும் ஆயுர்வேதம் தழைத்தோங்கி வளர முதலில் பிரம்மன் சூரியபகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடமிருந்து ஆயுர்வேதத்தினை படித்த பதினாரு மாணவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தன்வந்திரி ஆவார் என வைவர்த்த புராணம் கூறுகிறது. இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருத்துவர் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 46 லக்ஷம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி மந்திரங்களை கொண்டு, மந்திரமே யந்திரமாக விளங்கும் ஆரோக்ய பீடத்தில் 7அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பட்டுப் பீதாம்பரம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனியாக, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியுடன் சீந்தல்கொடியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி பக்தர்களுக்கு திருகாட்சி அருள்கிறார்.

பரிவார மூர்த்திகளில் ஒருவராக இருந்த இவர்ம் சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என்ற வகையில் 75 பரிவார மூர்த்திகளுடன், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுடன் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார்.

பிரதி ஏகாதசி திதியில் மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி அபிஷேகம் தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது. இவருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியில் மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு மருத்துவ குணம் கொண்ட நெல்லி பொடி அபிஷேகத்துடன் பலவகை மூலிகை தீர்த்தங்களை கொண்டு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும்.

மஹா ஹோம பிரசாதங்கள்

தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஹோமம் மற்றும் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட தேன், நெய், சுக்கு வெல்லம், தன்வந்திரி யந்திரம், மூலிகை தீர்த்தங்கள், போன்ற பிரசாதங்களை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பக்தர்களின் நலன் கருதி பிரத்யோக பூஜைகள் நடத்தி பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் நீக்கும் ஔஷத பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை பெற்று நம்பிக்கையுடன் பயன் படுத்தி உடல் நோய்களிடமிருந்து முழுநிவாரணம் பெறலாம்.

விசேஷ பொருட்கள்

சீந்தல்கொடி இலை, துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, நக்ஷத்திர விருட்ச இலைகள், தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சிப்பூ, பாரிஜாதம், தாமரை, அரளி, பல்வேறு மூலிகைகள், நெய், தேன், பச்சரிசி, வெள்ளம், சுக்கு, மந்தாரை போன்ற பொருட்களை கொடுத்து பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடலாம். தொடர்புக்கு

தொலைபேசி 04172 - 230033, 9443330203.

English summary
As per the Hindu calendar, Yogini Ekadashi falls in the month of Ashadha that is during the Krishna Paksha, which is the waning phase of the moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X