For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஐப்பசியில் நடைபெறும் டோலோத்சவம் எனப்படும் ஊஞ்சல் உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் 3ஆம் தேதி தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை முதல் பங்குனி வரை பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்தது.

Oonjal Festival at Srirangam Temple

ஐப்பசி மாதம் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் விழா கடந்த 5 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரியும் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.30க்கு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார். அலங்காரம் கண்டருளிய பின், இரவு 7.15க்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது.

ஊஞ்சலில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி ஆடிய நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி மாலை நம்பெருமாள் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Oonjal Festival at Srirangam Temple

9 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி ஊஞ்சல் உற்ஸவம் கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர், மாலை 6.15 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8 மணிமுதல் இரவு 9 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

Oonjal Festival at Srirangam Temple

விழாவின் நிறைவு நாளான 9ஆம் நாள் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது.

English summary
Srirangam Temple Oonjal Festival This festival is celebrated in the Tamil Month of Aippasi also known as Dolothsavam for 9 days. The Namperumal oonjal Festival is celebrated for 9 days every year at the Srirangam Ranganathar Temple. This year’s spring festival started on the 3rd. The festival runs until the 11th 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X