For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்குனி பிரம்மோற்சவம் 2020: கருடவாகனத்தில் வலம் வந்த பெருமாளை தரிசித்த பக்தர்கள்

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: கருடசேவையில் பெருமாள் எழுந்தருளுவதை காண கண் கோடி வேண்டும். திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 கருட சேவை நடைபெற்றது. மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரி‌ஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுத்தனர். ஏராளமான பக்தர்கள் இதனை தரிசனம் செய்தனர். இதேபோல திருநின்றவூர் ஸ்ரீ என்னைப்பெற்ற தாயார் சமேத ஸ்ரீபக்தவச்சல பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருடசேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79வது ஸ்தலமாகும். வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருக்குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார்.

இறைவனின் சிறப்பு

இறைவனின் சிறப்பு

இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீராமானுஜர் இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரி களிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

திருக்கல்யாண பிரமோற்சவம்

திருக்கல்யாண பிரமோற்சவம்

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10ஆம் தேதி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருத்தேர் முன்பு கால் நாட்டப்பட்டது.

கருடசேவை தரிசனம்

கருடசேவை தரிசனம்

இதையடுத்து 5 நம்பி சுவாமிகள் கருடசேவை நடந்தது. கருட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு மேலரதவீதியில் மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரி‌ஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரியும் இரவில் வை‌‌ஷ்ணவர்களுக்கு விடை சாதித்தல் நடைபெறுகிறது.

பெருமாள் கருடசேவை

பெருமாள் கருடசேவை

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ஸ்ரீ என்னைப்பெற்ற தாயார் சமேத ஸ்ரீபக்தவச்சல பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மூன்றாம் நாள் நடைபெற்ற கருடசேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மன்னார்குடி ராஜகோபால சுவாமி,

English summary
Panguni Brahmotsavam has been celebrated at Thirukurungudi Azhagiya Nambirayar Temple. Perumal had beautiful alangaram with garlands and jewels and gave darsanam in Garudavahanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X