For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்குனி மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை பொழியப்போகுதாம் தயாரா இருங்க

பங்குனி மாதம் சூரியன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். பங்குனி மாதம் மீனம் மாதம், இந்த மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாதம். இந்த மாதத்தில் சிம்மம் முதல் கன்னி வரை 12 ராசிக்காரர்களுக்கு

Google Oneindia Tamil News

சென்னை: பங்குனி மாதம் தமிழ் மாதத்தின் கடைசி மாதம் மீனம் சூரியன் மீனம் ராசியில் சஞ்சரிப்பார். இதற்குப் பின்னர் சூரியன் மேஷத்தில் உச்சநிலையை அடைகிறார். இந்த மாதத்தில்தான் முதல் நாளில் சிறப்பான காரடையான் நோன்பு வருகிறது. நீர் ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும் வெயில் பட்டையை கிளப்பும். இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. இந்த பங்குனி மாதத்தில் தனுசு முதல் மீனம் வரை வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

பங்குனி மாதம் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் மீனம் ராசியில் சூரியன், பங்குனி 9ஆம் தேதி தனுசு ராசியில் உள்ள செவ்வாய் மகரம் ராசிக்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார். மேஷம் ராசியில் உள்ள சுக்கிரன் பங்குனி 15ஆம் தேதி ரிஷப ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். தனுசு ராசியில் உள்ள குரு பகவான், 16 ஆம் தேதி மகரத்தில் குரு அதிசாரம் பெற்று மகரம் ராசியில் நீசம் பெறப்போகிறார். கும்பம் ராசியில் உள்ள புதன் பங்குனி 15ஆம் தேதி மீனம் ராசியில் நீசம் பெற்று அமரப்போகிறார்.

பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழும். இந்த மாதத்தில் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாணங்களைக் கண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என திருக்கல்யாணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி மாதத்தில் நவ கிரகங்கள் சஞ்சாரத்தின் படி தனுசு முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் புதன், நான்காம் வீட்டில் சூரியன், சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். பாக்ய ஸ்தான அதிபதி சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். பாத சனியாக இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பேச்சில் நிதானம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். வீட்டிலும் அலுவலகங்கள் பொது இடங்களில் அமைதியாக பேசுங்கள். இந்த மாதம் உங்க ராசியில் உள்ள செவ்வாய் உச்சம் பெற்று இரண்டாம் வீட்டில் உள்ள சனியோடு இணைகிறார். உச்சம் பெற்ற செவ்வாய் ஆட்சி பெற்ற சனியோடு இணைவது யோகம். முக்கிய மாற்றங்கள் ஏற்படும். பூமி யோகம் வரும். நிலம், வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான மேஷம் ராசியின் மீது விழுகிறது. மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் உள்ள சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆறுக்கு அதிபன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம், திடீர் பணவரவு சொத்துக்கள் கிடைக்கும். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுகிறது. பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு அதிசாரமாக செல்கிறார். தனுசு ராசிக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு வலுவான மாதமாக இருக்கிறது. இந்த மாதம் நிறைய வருமானம் வரும். குடும்பம் குழந்தைகள் என குதூகலமாக இருப்பீங்க. இந்த மாதம் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணுவங்க. உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப சனியாக இருந்தாலும் கூடவே நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு இருப்பதால் உங்களுக்கு எந்த சங்கடங்களும் வராது. சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 15 நாட்கள் இருப்பது நிறைய சந்தோஷங்கள் கொடுக்கும். உங்க பிள்ளைகள் மூலம் நிம்மதியும் உற்சாமும் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபமான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி படிக்க யோகம் வரும். நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும் சந்தோஷங்கள் கூடி வரும். இந்த மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதம் எண்ணங்கள் பலிக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கு பங்குனி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் 12ல் குரு, செவ்வாய், கேது இரண்டாம் வீட்டில் புதன் மூன்றாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாத பிற்பகுதியில் செவ்வாய் உச்சம் பெற்று உங்க ராசியில் சனியோடு சேருகிறார். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த முயற்சிகள் வெற்றியை தரும். சுக்கிரன் ஆட்சி பெற்று ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்க ராசியில் இந்த மாதம் சனி, செவ்வாய் குரு ஆகிய மூன்று கிரகங்கள் இணைகின்றன. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க காரணம் சூரியன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்க நிதானமாக பேசுங்க. அலுவலகத்திலோ வீட்டிலோ சூடான வார்த்தைகளை பேச வேண்டாம். ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கிறது. மகரம் ராசிக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடைபெறும். உங்க ராசி அதிபதி சனி உங்க ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு நிறைய சாதகமான விசயங்கள் நடைபெறும். சிவில் இன்ஜினியர்கள், கட்டுமான துறையில் இருப்பவர்கள் ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். வீடு நிலம் விற்பனை மூலம் லாபம் கிடைக்கும். மகரம் ராசிக்காரர்கள் நிலம் வாங்கலாம் சொத்துக்கள் வாங்கலாம். சனிபகவான் உங்க ராசியில ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சில மன அழுத்தங்கள் ஏற்படும். அதே நேரம் உங்க ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போகிறார். கூடவே குரு அதிசாரம் பெற்று உங்க ராசிக்கு வரப்போவதால் உங்களுக்கு தடைகள் நீங்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். வேலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைத்தால் தைரியமாக சேரலாம். சுப பேச்சுவார்த்தைகள் நன்மைகள் முடியும். திருமண முயற்சிகள் சுபமாக கை கூடி வரும் காரணம் உச்சமடைந்த செவ்வாய் உங்க ராசிக்கு ஏழாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டினை பார்க்கிறார். யோகங்கள் அதிகமாகும். இது அதிர்ஷ்டகரமான மாதம். புதிய வாகனம் வாங்கலாம், வீடு மாறலாம். உங்க தன்னம்பிக்கை அதிகமாகும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும். படிப்பில் உற்சாகமாக இருப்பீர்கள் தேர்வுகளை எதிர்க்கொள்வீர்கள். ஹயக்ரீவரை வணங்குங்கள் தடைகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் இரண்டாம் வீட்டில் சூரியன், புதன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். சில நாட்களில் நீசமடைந்து இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார் புதன். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகமாகும். மேற்படிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். ஏழரை சனி காலம் ஆரம்பமாகியுள்ளது. விரைய சனி என்பதால் நிறைய விரைய செலவுகள் வந்தாலும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். சிலருக்கு சோதனையான காலமாக இருக்கிறது. மாணவர்களுக்கு படிப்பில் சில பிரச்சினைகள் வரலாம். ஏழரை சனி தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு சில தடைகள் தாமதங்கள் வரலாம். நிறைய வருமானம் வந்தாலும் நிறைய செலவுகளும் வரும். சொத்துக்களை விற்கலாம். சில தினங்களிலேயே லாப ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் பெயர்ச்சியாகி விரைய சனியோடு இணைகிறார். குருவும் அதிசாரமாக பெயர்ச்சியாகி சனியோடு இணைகிறார். நிலம் சொத்துக்களை விற்று கடன்களை அடைப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் நான்காம் வீட்டிற்கு நகர்ந்து ஆட்சி பெற்று அமர்கிறார். இது மாளவியா யோகமாகும். நிறைய சந்தோஷமான சமாச்சாரங்கள் ஏற்படும். புதிய வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் வரும் என்றாலும் நன்றாக விசாரித்து வாங்குங்கள். புதிய ஒப்பந்தங்களை கையெழுத்து போடும் போடு படித்து பார்த்து யோசித்து விரைய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைவதால் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்க பதற்றப்படாதீர்கள். எந்த புதிய முயற்சிகளும் வேண்டாம் அப்புறம் நஷ்டப்பட்டுதான் உட்கார வேண்டியிருக்கும். பயணங்கள் எதுவும் வேண்டாம். திருமணம் உள்ளிட்ட சுப பேச்சுவார்த்தைகளை இந்தமாதம் பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க. வீணான பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. நீங்க இந்த மாதம் சனிக்கிழமைகளில் சனிபகவானை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு தலைமைப்பண்பு தேடி வரும். புதன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சில தினங்களில் இடப்பெயர்ச்சி உங்க ராசியில் நீசம் பெற்று அமரப்போகிறார். லாப ஸ்தானத்தில் சனி, தொழில் ஸ்தானத்தில் குரு, செவ்வாய், கேது, இரண்டாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு என சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் முற்பகுதியில் தர்மகர்மாதிபதி யோகம் கூடியுள்ளது. பிற்பகுதியில் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயும் குருவும் சனியோடு இணையப்போகின்றன. புது வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தினர் நண்பர்கள் உதவி கிடைக்கும். உங்க தனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்வது சிறப்பு பணவரவு அதிகமாகும். மூன்றாம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்கிறார் உங்க முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். உங்களுடைய தொழிலுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். தொழிலில் முதலீடு செய்யுங்கள் லாபம் கிடைக்கும். பண வருமானம் வரும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கும். திருமணம், வீடு கிரகப்பிரவேசம் என சுப பலன்கள் அதிகம் நடைபெறும். மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உறவினர்கள் சகோதர சகோதரிகளுடன் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடைய பிள்ளைகளுக்கும் இது ரொம்ப நல்ல மாதம். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். புதன் உங்க ராசியிலேயே இருப்பதால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகத்திற்கு தெளிவாக திட்டமிடலாம். தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். சாதகமான சம்பவங்கள் நிறைய நடக்கும் இந்த மாதம் ரொம்ப யோகமான மாதமாக அமையப்போகிறது.

English summary
Panguni masam begins in March, ends in April 2020. Rasi palan for the Tamil month of Panguni from March 14,2020 to April 14.This month Saturn and Mars conjunction in Makaram Rasi check out what is the effect and remedies for 12 zodiac signs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X