
ராகு கேது பெயர்ச்சி 2022: பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு.. யாருக்கு அள்ளித்தரப்போகிறார்
சென்னை: ராகு பகவான் மேஷ ராசியில் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து சுக்கிரனின் பரணி நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பெயர்ச்சியால் செல்வ செழிப்பை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.
ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்வார்கள். ராகு பகவான் இப்போது சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
23.5.2022 முதல் 29.1.2023 வரை ராகு பகவான் சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் செல்லும் போது வண்டி வாகனம் வாங்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். சொந்த வீடு கட்டுபவர்கள் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேரும் காலம் வரப்போகிறது.

ரிஷபம்
9 மாத காலங்கள் பயணம் செய்வார் ராகு பகவான் இந்த பயணத்தின் போது உங்களுக்கு அபரிமிதமான பணவரவு அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் விஷயமாக பேசி முடிவு செய்யலாம். புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுனம்
புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பண வரவால் கடன் பிரச்சினை நீங்கும்.
மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். உங்கள் மகனின் திறமையைக் கண்டறிந்து அவரை உற்சாகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். திடீர் பணவரவு உண்டு. பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உங்களைக் குறை கூறியவர்களும் இனி பாராட்டுவார்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். வீடு, மனை மூலம் லாபம் உண்டாகும்.

கடகம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதேநேரம் வீண்பழிகள் வர வாய்ப்பு உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். பழைய கடன்கள் வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் திருப்தி தரும். பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மன உளைச்சல், டென்ஷன் விலகும்.

சிம்மம்
சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் ராகு செல்வதால் வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்யம் கூடும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. சிலருக்கு தகுதிக்கேற்ற நல்ல புதிய உத்தியோகம் அமையவும் வாய்ப்பு உண்டு. அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் வரும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.

கன்னி
அம்மாவின் உடல் நலம் சீரடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு திருமண சுபகாரியம் கை கூடும். தொழிலில் திறமை பளிச்சிடும். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

துலாம்
இதுநாள் வரைக்கும் உங்கள் மனதில் இருந்த டென்ஷன் நீங்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கி மன உற்சாகம் அதிகரிக்கும். திடீர் சுப செலவுகள் வந்து நீங்கும். வேலை விசயமாக முடிவு எடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். சுப காரியங்கள் கை கூடி வரும்.

விருச்சிகம்
வீண் கவலைகள் நீங்கப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு கூடும். அபரிமிதமான பண வரவினால் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். பெண்களுக்கு பொன் நகை சேர்க்கை ஏற்படும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். வேலைச்சுமை அதிகரிக்கும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

தனுசு
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கப் போகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். விஐபிக்கள் அறிமுகமாவார்கள். பொன் நகை சேர்க்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பூர்வீக சொத்து மூலம் லாபம் வரும். வேலையில் புரமோசனும் நீண்ட நாட்களாக வர வேண்டிய சம்பள உயர்வு வரும். மனைவி அல்லது கணவனின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மகரம்
உங்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் நீங்கி சுகமான நாட்களாக மாறப்போகிறது. கசப்பான நாட்கள் மாறி இனி தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரப்போகிறது. பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. பணத்தட்டுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்
சுபகாரியங்களும் நல்ல காரியங்களும் நிறைய நடைபெறப்போகிறது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க முயற்சி செய்யலாம். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கடன் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றியவர்கள் நேரில் வந்து கொடுத்து விட்டு செல்வார்கள். திடீர் திருப்பங்கள் நிகழப்போகிறது. காரியத்தடைகள் நீங்கும் வெற்றி கை கூடும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாலினத்தவரிடம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சில மாதங்களில் சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.