
ராகு கேது பெயர்ச்சி 2022: புது வேலை, ப்ரமோஷன் சம்பள உயர்வு இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்
சென்னை: கும்ப ராசிக்காரர்களே, முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் ராகுவும் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் நிகழப்போகிறது. நிழல் கிரகங்களின் இடப்பெயர்ச்சி பார்வைகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 13ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது.
ராகு கேது பெயர்ச்சி 2022: அமைதிப்பூங்காவாக மாறும் வீடு... யாருக்கு மன நிம்மதி கிடைக்கும் தெரியுமா
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். இந்த 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகத்தைத் தரப்போகிறார்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

கும்பம் குதூகலம்
நேர்மையும் தைரியமும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அபரிமிதமான நன்மைகளைத் தரப்போகிறது. புதிய முயற்சிகள் பலிக்கும். சோம்பலும் நோய்களும் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். டென்சன் மன உளைச்சல் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இணக்கமான போக்கு அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்கும்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் தேடி வந்து கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அம்மாவின் ஆரோக்கியம் கூடும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்.
இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

புதிய வேலை கிடைக்கும்
சுபகாரியங்களும் நல்ல காரியங்களும் நிறைய நடைபெறப்போகிறது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க முயற்சி செய்யலாம். 2023 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

கேதுவினால் கிடைக்கும் வெற்றி
கேது பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் 18 மாதங்களும் வெற்றிகள் தேடி வரப்போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். தடுமாற்றம் நீங்கும் தெளிவு பிறக்கும். பண வரவு அதிகரிப்பதால் பற்றாக்குறை நீங்கும் சேமிப்பு அதிகரிக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். ராகுவின் நட்சத்திரத்தில் கேது செல்லும் காலத்தில் சிறு சிறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். சுப விரைய செலவுகள் வந்து செல்லும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புதங்களை நிகழ்த்தப்போகும் கிரகப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது.