For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் ராசிக்காரர்களே இதுநாள் வரைக்கும் ஒருவித நெருக்கடிகளில் இருந்து வந்தீர்கள் இனி உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் மன குழப்பமும் நெருக்கடிகளும் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப் போகிறது. ஏழரை சனி, ஜென்ம குரு, விரைய குரு, விரைய கேது என கடந்த கால கட்டங்களில் விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து இருக்கிறீர்கள். நிறைய சோதனைகளை சந்தித்து நொந்து போயிருப்பீர்கள் இனி உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும் காலம் வந்து
விட்டது.

தொழில், வியாபாரம் வருமானம், உறவுகள் என அனைத்தையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி இனி மன நிம்மதியை தரப்போகிறது.

கடந்த காலங்களில் உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் வந்து கொண்டு இருந்தது. சண்டை சச்சரவுகள் இருந்தது. நண்பர்கள் உறவினர்கள் கூட உங்களுக்கு எதிராக இருந்தனர். இதன் மூலம் உங்களுக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. இனி இனி உங்க வாழ்க்கையில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

காரிய தடை நீக்கும் ஸ்ரீ ராம ஜெயம் - குபேர வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம்காரிய தடை நீக்கும் ஸ்ரீ ராம ஜெயம் - குபேர வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம்

குடும்பத்தில் ஒற்றுமை

குடும்பத்தில் ஒற்றுமை

திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியவர்கள் இனி மனம் திருந்தி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் தேடி வரும். ராகு ஏழாம் வீட்டில் இருந்தாலும் அவர் நீசமடைந்திருப்பதால் உங்களுக்கு நல்ல யோகம்தான். கடந்த கால கட்டத்தில் கவலையோடு இருந்தீர்கள். காரணம் ஏழரை சனி உங்களை படாத பாடு எடுத்தி விட்டது. இனி வரும் காலங்களில் உங்களுக்கு நிறைய திருப்புமுனைகள் ஏற்படும். இனி வெற்றிகளை மட்டுமே ருசிக்கப் போகிறீர்கள்.

பதவி உயர்வு தேடி வரும்

பதவி உயர்வு தேடி வரும்

பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு வேலை, அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேர் புகழ் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எதிர்பார்க்காத பண வரவு வரும். கடன் சுமைகள் நீங்கும். நீங்க கொடுத்து நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.

நெருக்கடிகள் நீங்கும்

நெருக்கடிகள் நீங்கும்

கேது உங்க ராசியில் வந்து உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். இனி நெருக்கடிகள் நீங்கும். உங்க வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது உங்க ராசிநாதன் போல உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது.

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் சனி, கேது, குரு என சேர்ந்து உங்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தனர். இனி அந்த நெருக்கடிகள் எல்லாம் தீரப்போகிறது. இனி மன அழுத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருச்செந்தூர் முருகனை செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வரலாம். கீழப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வணங்கி வரலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு கேது

English summary
Rahu Ketu Peyarchi 2020 Viruchigam Rasi Palangal in Tamil: Check out Kanni Rahu Ketu Peyarchi Palangal and Parikarangal விருச்சிகம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி 2020 -22 பலன்கள் குறித்து இந்த பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X