For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Rahu Ketu Peyarchi Today | இன்று ராகு-கேது பெயர்ச்சி 2020 - பரிகார தலங்களில் பக்தர்கள் தரிசனம்

ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரி‌ஷப ராசிக்கு இன்று பகல் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த க

Google Oneindia Tamil News

கும்பகோணம்: ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு இன்றைய தினம் ராகு கேது பரிகார தலங்களான திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. கொரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மாஸ்க் அணிந்தபடி பரிகார பூஜைகளில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டுக்கான ராகு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இன்று மதியம் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் லட்சார்ச்சனை 30ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று நான்கு கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. இன்று ராகு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இன்று ஏராளமான பக்தர்கள் மாஸ்க் அணிந்தபடி பங்கேற்றனர்.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ராகு பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு நாககன்னி, நாகவல்லி என இருதேவியருடன் தனிசன்னதி கொண்டு ராகுபகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது அலட்சியம் காட்டக்கூடாது - கமல்தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது அலட்சியம் காட்டக்கூடாது - கமல்

சிறப்பு லட்சார்ச்சனை

சிறப்பு லட்சார்ச்சனை

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ஞாயிறு மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்குகியது. நேற்று காலை 2ஆம் கால யாக பூஜையும் மாலை 3ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு 4ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம்

கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம்

கேது பெயர்ச்சியை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் இந்த பெயர்ச்சியின் போது மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்.

திருமண தடைகள் நீங்கும்

திருமண தடைகள் நீங்கும்

நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு அரசின் வழிகாட்டுமுறை படி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். ராகு கேது பெயர்ச்சியையொட்டி இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வழிபாட்டு தலமும் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு, திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம் உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.

ராகு கேது பரிகார ஸ்தலம்

ராகு கேது பரிகார ஸ்தலம்

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் வண்டுசேர்குழலி உடனாய அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக் கோயிலானது ராகுகேது பரிகார ஸ்தலமாக இருந்துவருகிறது. இக்கோயிலில் இன்று ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. பக்தர்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர்.

ராகு கேது பெயர்ச்சி யாகம்

ராகு கேது பெயர்ச்சி யாகம்

வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் நடைபெறுகிறது. தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அமைந்துள்ள ராகு-கேது பகவானை ஆராதிக்கும் வகையில் 10 வருடமாக ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடைபெற்று வருகிறது.

English summary
Today Rahu ketu peyarchi Vakkiya Panchangam Special Poojas were held today at the Rahu Ketu Parikara TemplesThirunageswaram and Keelapperumpallam temples, to mark the relocation of Rahu Ketu. Aries, Taurus, Cancer, Leo, Libra, Scorpio, Sagittarius, Aquarius and Pisces are good to make amends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X