• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Today's Rasi Palan: இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை மே 14, 2021

|

சென்னை: பிலவ வருடம் சித்திரை 31ஆம் தேதி மே 14, 2021 வெள்ளிக்கிழமை. திருதியைத் திதி முழுநாள். மிருகஷீரிடம் முழுநாள். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இரவுக்கு மேல் மிதுன ராசிக்கு மாறுகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கும் இரவுக்கு மேல் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிக்குள் இன்றைய தினம் நான்கு கிரகங்கள் பயணம் செய்கின்றன. இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை நன்றாக நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மன தைரியம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை குறையும். இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். மன நிம்மதி அதிகரிக்கும் சந்தோஷம் ஏற்படும்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பண முதலீடுகளில் கவனம் தேவை. நகை விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். உடல் மந்தநிலை ஏற்படும். முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு இரவு 07மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இரவுக்கு மேல் நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். 4 கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இரவு 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். உடல்நிலையில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.

தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்திகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பண வரவு அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். வீடு பராமரிப்பு செய்வீர்கள்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு செல்லும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும்.

English summary
Today's Rasi Palan Friday May 14, 2021 : Get your Daily Horoscope in tamil based on your zodiac signs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X