• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021

|

சென்னை: பிலவ வருடம் வைகாசி 30 ஆம் தேதி ஜூன் 13,2021 ஞாயிற்றுக்கிழமை. திருதியைத் திதி இரவு 09.40 மணிவரை அதன் பின் சதுர்த்தி. புனர்பூசம் இரவு 07.00 மணிவரை அதன் பின் பூசம். சந்திரன் இன்றைய தினம் மிதுனம், கடக ராசிகளில் பயணம் செய்கிறார். விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணிக்கிறார். இன்றைய தினம் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்திக்கூர்மையால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார் வேலையில் புதிய பதவி அல்லது பொறுப்புகள் தேடி வரும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

பிற்பகல் வரைக்கும் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனதில் அமைதி குறையும் என்றாலும் குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் விரயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்படவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.

கடகம்

கடகம்

சந்திரன் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணிக்கிறார். இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் நான்கு கிரகங்களினால் பணவரவு கூடும். தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பிற்பகலுக்கு மேல் சந்திரன் உங்கள் ராசிக்கு வருகிறார் வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்

சிம்மம்

சந்திரன் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். மனதில் உற்சாகம் கூடும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள், வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படலாம். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றும். சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னி

கன்னி

சந்திரன் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் உற்சாகம் கூடும். உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தடைபட்ட செயல்கள் நிறைவடையும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்

துலாம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அப்பா வழியில் பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் பிற்பகல் வரைக்கும் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்வும். எதிர்பார்த்த பயணங்கள் காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்கள் இன்றைக்கு வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த செயலையும் செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் மன உளைச்சல் நீங்கும்.

தனுசு

தனுசு

சந்திரன் களத்திர ஸ்தானத்தில் இன்றைய தினம் பிற்பகல் வரை சஞ்சரிக்கிறார். வீட்டில் நிதானம் தேவை. பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களை தவிர்த்து விடவும்.

மகரம்

மகரம்

சந்திரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கடன் வாங்க வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமான பலனை தரும். புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் திருப்தியான சூழல் அமையும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்துவிடுவீர்கள். மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான சுப முயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. சாமர்த்தியமான பேச்சுக்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பிற்பகலுக்கு மேல் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்

மீனம்

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிற்பகலுக்கு மேல் சந்திரான் ஐந்தாம் வீட்டிற்குச் செல்கிறார். குழந்தைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.

English summary
Today's Rasi Palan Friday June 11, 2021 : Get your Daily Horoscope in tamil based on your zodiac signs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X