Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்
சென்னை: சார்வரி வருடம் தை 9ஆம் தேதி ஜனவரி 22, 2021 வெள்ளிக்கிழமை. நவமி திதி மாலை 06.29 மணிவரை அதன்பின் தசமி திதி. பரணி நட்சத்திரம் மாலை 06.40 மணி வரை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் செவ்வாய் சந்திரன், ரிஷபம் ராசியில் ராகு, விருச்சிகம் ராசியில் கேது, தனுசு ராசியில் சுக்கிரன், மகரம் ராசியில் சூரியன், புதன், குரு, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுடைய குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும் திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும் வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் தடை ஏற்படலாம். உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் காதலை சொல்ல இது சரியான தருணம்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களின் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இன்றைக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சந்திரன் செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். மனதளவிலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று நீங்கள் உங்களின் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வீட்டில் திடீர் செலவுகள் அதிகமாகும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் நீங்கும். உறவினர்களால் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நன்மைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.