Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்
சென்னை: சார்வரி வருடம் தை 13ஆம் தேதி ஜனவரி 26, 2021 செவ்வாய்கிழமை. திரயோதசி திதி இரவு 01.11 மணிவரை அதன்பின் சதுர்த்தசி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 03.11 மணி வரை அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மிதுனம் ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உங்க பேச்சில் கவனமாக இருக்கவும் கோபமாக பேசி நஷ்டப்பட வேண்டாம்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்ப பிரச்சினைகளை லாவகமாக கையாளவும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும் என்றாலும் மந்த நிலையை உணர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும்

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருக்கும். வேறு வேலைக்கு செய்யும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானதில் சஞ்சரிக்கிறார். வேலை தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி பெரும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை விசயமாக எடுக்கும் முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று மன அமைதி குறையும் என்பதால் மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது. இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வேலையில் கவனம் தேவை. உடன் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்கவும். உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.

தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். திடீர் பணவரவு திக்குமுக்காட வைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். அலுவலகத்தில் வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். சுபமுயற்சிகளில் தடைகள் வரலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். சொந்தக்காரர்களுடன் மனஸ்தாபம் வரலாம். வேலையிலும் வீட்டிலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் நன்மைகள் நடைபெறும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.