For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்

நாட்டில் வெட்டுக்கிளிகளால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது. சார்வரி ஆண்டில் வெட்டுக்கிளிகளால் விவசாயம் பாதிக்கும் என்று பஞ்சாங்கம் எச்சரித்தது போ

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு அடங்கும் முன்னே வட மாநிலங்களில் locust swarms attack எனப்படும் வெட்டுக்கிளி தாக்குதல் புரட்டி போட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் இருக்கும் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துள்ளது. வெயில் காலங்களில் ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக உள்ளது. வெட்டுக்கிளிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று சார்வரி ஆண்டு தமிழ் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது போலவே நடந்துள்ளது.

Recommended Video

    வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா?

    நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நடக்கப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணித்து விடுகின்றனர். மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், விபத்துக்கள் என அனைத்துமே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. அதே போல தற்போது வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை சூறையாடுவதைப்பற்றியும் பஞ்சாங்கம் சில மாதங்களுக்கு முன்பே கணித்துள்ளது.

    நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் தமிழ் படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க கார்ப்பரேட் நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்பார்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்து விளைநிலங்களை தன் வசப்படுத்துவதற்காக இந்த படுபாதக செயல்களை செய்வதாக கதை எழுதப்பட்டிருக்கும். இதே போல ஒரு சம்பவம் தற்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

    வேகமாக வருகிறது.. வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா.. உண்மை என்ன?வேகமாக வருகிறது.. வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா.. உண்மை என்ன?

    விவசாயம் பாதிப்பு

    விவசாயம் பாதிப்பு

    வெட்டுக்கிளிகள் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் வேகமாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சி அடையும். சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களில் கடந்த பிப்ரவரி மாதம் வெட்டுக்கிளிகள் செய்த அட்டகாசத்தால் சுமார் 1,75,000 ஏக்கரில் விளைந்த தானியங்கள் ஒட்டுமொத்தமாக நாசமானது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா நாட்டில் அப்போது தேசிய அவசர நிலை அறிவிக்கப்படும் அளவிற்கு நிலைமை மோசமானது.

    நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்

    நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்

    அங்கிருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் விவசாயிகள் கோதுமை பயிர்களை நாசம் செய்தன. மெல்ல மெல்ல இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் புகுந்து விளைபயிர்களை தின்று ஏப்பல் விட்டு வருகின்றன. ஆண்டுதோறும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் வரைதான் அதிகமாக வரும். இந்த முறை வடஇந்தியாவில் 5 மாநிலங்களை வெட்டுக்கிளிகள் தாக்கி இருக்கிறது. மொத்தமாக 8 லட்சம் ஏக்கர் நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளது.

    வெட்டுக்கிளி கூட்டம்

    வெட்டுக்கிளி கூட்டம்

    ஒரு நாளுக்கு 180 கிமீ தூரம் இந்த வெட்டுக்கிளிகள் பறக்கிறது. ஒரு குழுவில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வெட்டுக்கிளிகள் பறந்து வந்து பயிர்களை மட்டுமல்லாமல் மனிதர்களையும் துன்புறுத்துகிறது. மகாராஷ்டிரா வரை இந்த வெட்டுக்கிளிகள் வந்தாலும் தமிழகத்தை தாக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவது ஆறுதலை தருகிறது என்றாலும் பஞ்சாங்கம் சொல்வதை பார்க்கத்தான் வேண்டும்.

    பலித்த கணிப்புகள்

    பலித்த கணிப்புகள்

    மழை, புயல், வெயில் என இயற்கை சீற்றங்களைப் பற்றி தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது பலமுறை பலித்துள்ளது. இந்த முறையும் சார்வரி ஆண்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் நாட்டின் விவசாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கணித்துள்ளது. இதற்கு என்ன கரணம் மகரம் ராசியில் குரு நீச்சம் பெற்றிருப்பதுதான் என்கிறது பஞ்சாங்கம் கணிப்பு.

    கோதுமையை நாசம் செய்யும்

    கோதுமையை நாசம் செய்யும்

    சார்வரி ஆண்டு பிறக்கும் போது துலாம் லக்னம் தனுசு ராசியில் பிறந்துள்ளது. முன்றாம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான குரு பகவான் மகரம் ராசியில் அதிசாரமாக சென்று நீசம் பெற்றிருக்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி உச்சம் பெற்ற செவ்வாயுடன் இணைந்து சூரியன் சாரம் பெற்றிருந்தார். இதனால் நாடு முழுவதும் அக்னி பயம், அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படும். பாலைவனத்தில் மணல் சூறாவளி ஏற்பட்டு ராஜஸ்தான் பாதிக்கும். வெடடுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்று எச்சரித்துள்ளது.

    English summary
    Saarvari Tamil New year Panchangam have predicted in Locust attack. In India Rajasthan and Gujarat have been grappling with the pest problem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X