• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : தனுசு ராசிக்கு குடும்ப சனியால் குதூகலம் அதிகரிக்கும்

Google Oneindia Tamil News

மதுரை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் ஏழரை சனி காலமாகும். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் எனவே செயல்களில் நிதானமும் அதிக கவனமும் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி என்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். டென்சனை குறைப்பது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும்.

வண்டி வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். சனி பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து சுக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், லாப ஸ்தான வீடுகளைப் பார்வையிடுகிறார். இந்த சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை. தொழில், ஆரோக்கியம், குடும்பத்தில் என்னென்ன நடைபெறும் என்று பார்க்கலாம்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

குடும்பசனி குதூகலத்தை ஏற்படுத்துவார். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. சுய பெருமை பேச வேண்டாம். அனைவரையும் மதித்து நடப்பது அவசியம். இதுவரை ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு அதிகரிக்கும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரக்கூடும் குடும்ப விவகாரங்களில் தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை தலையிட விடக்கூடாது. வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.

கடன் வாங்குவதில் கவனம்

கடன் வாங்குவதில் கவனம்

சனி பகவான் 7ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வாங்க. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை.

சம்பள உயர்வு கூடும்

சம்பள உயர்வு கூடும்

சனிபகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.

உயர்கல்வி யோகம்

உயர்கல்வி யோகம்

சனிபகவான் 3ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 4ஆம் இடத்தை பார்ப்பதால் தடைபட்ட உயர் கல்வி தொடரும். இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தல் அவசியம். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உற்சாகமாக படிப்பை தொடருங்கள்.

English summary
Sani peyarchi palan tamil 2020 - 2023 Dhanusu Rasi Kudumba sani Rasi Sani peyarchi palangal. Sani will be second house for Dhanusu Rasi you need to take care of your spouse health saturn will not return your house for another 30 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X