India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய் பெயர்ச்சி பலன்: மீன ராசியில் அமரும் செவ்வாயால் குரு மங்கள யோகம் யாருக்கு கிடைக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: மங்களகாரகன் செவ்வாய் பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். செவ்வாய். நெருப்புகிரகம் செவ்வாய் நீர் ராசியில் குருவின் வீட்டில் குரு, சுக்கிரன் உடன் அமர்கிறார் இதன் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும் யாரெல்லாம் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பகவானுக்கு மேஷம், விருச்சிகம் சொந்த வீடு. கடகத்தில் நீசமடையும் செவ்வாய் மகரகத்தில் உச்சமடைகிறார். செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் திருமண தடையை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் ரத்தத்திற்கும் விபத்திற்கும் காரகர். உடன் பிறப்புகளுக்கும் காரகர். ராணுவம், காவல்துறை போன்ற பணி செய்பவர்களுக்கும் காரகராக திகழ்கிறார்.

செவ்வாய் பூமிகாரகன். இவர் அருள் இருந்தால்தான் பூர்வீகச் சொத்துகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும். இந்த செவ்வாய் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை தருகிறது என பார்க்கலாம் அதற்கேற்ற பரிகாரங்களையும்பார்க்கலாம்.

 மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவான் மேஷ ராசியின் அதிபதி, எட்டாம் இடத்தின் அதிபதியும் அவரே. ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிக கோபம் ஆபத்தில் முடியும் என்பதால் கவனம் தேவை. நிலம், வீட்டு மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் உடல் நலனில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். விரைய ஸ்தானமான 12வது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். உங்களின் வேலையில் பிறரை தலையிட விட வேண்டாம். குறை சொல்பவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம். பயணத்தை ஒத்திப்போடுங்கள். இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம்கணவன் மனைவி இடையே சில கருத்து மோதல்கள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு 12 மற்றும் 7ஆம் வீட்டு அதிபதி. விரைய ஸ்தான அதிபதி 45 நாட்களுக்கு இனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய செல்வாக்குக் கூடும். ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.
கணவன் மனைவி உறவில் உற்சாகம் பிறக்கும். எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் காதல் பறவைகளாக சிறகடித்துப் பறப்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் உறவு பலப்படும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும். தினசரியும் ஹனுமான் சாலீசா படிக்கலாம் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிக்கு 11 மற்றும் ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய் செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள் என்றாலும் பணியில் கவனம் தேவை. செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கூடும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு பத்து மற்றும் ஐந்தாம் அதிபதியான செவ்வாய் பகவான் ஒன்பதால் வீட்டில் அமர்ந்துள்ளார். அதிர்ஷ்டகரமான நேரம் இது. அரசு தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பணிசெய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புரமோசனுக்காக தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் நிற்பதால் ஒருபக்கம் செலவினங்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, மனை அமைய வாய்ப்பிருக்கிறது. சகோதரங்களால் பயனடைவீர்கள். உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் அமரும் செவ்வாயினால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகளுடன் வாக்குவாதங்கள் வந்து செல்லும் உரிய பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் கிழமைகளில் முருகன் ஆலயங்களுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடலாம். சிவப்பு நிற ஆடைகளை அணியலாம். செம்பவள மோதிரம் அணிய மேலும் நன்மைகள் நடைபெறும். திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் ஒன்பதாம் அதிபதியான செவ்வாய் இன்னும் இரண்டு மாத காலங்களுக்கு எட்டாம் வீட்டில் அமர்வது அத்தனை சிறப்பானது அல்ல. அதிக கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம் இது. 8ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பண தர வேண்டாம். பணம் கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் வங்கிக் காசோலை, டி.டி மூலமாக செய்வது நல்லது.புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும் என்றாலும் அநாவசியப் பேச்சுகளை குறைப்பது நல்லது. அதிகாரிகளுடன் வீண் விவாதங்களெல்லாம் வேண்டாம். சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். செவ்வாய் தலமாக திகழும் பழனிக்கு சென்று மலைமேல் முருகனை தரிசனம் செய்து வர பிரச்சினைகள் தீரும். செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் எட்டாம் அதிபதியுமான செவ்வாய் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார். உடல் நலனில் அக்கறை காட்டவும். செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் நிற்பதால் பணபலம் கூடும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் ராசியை செவ்வாய் பார்ப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும். குருவின் பார்வை இருப்பதால் கவலை வேண்டாம். செவ்வாய், குரு, சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்லவும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும். பாதிப்புகள் நீங்க செவ்வாய்கிழமை, வியாழக்கிழமைகளில் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதியுமான செவ்வாய் இரண்டு மாத காலங்களுக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தன்னம்பிக்கை பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சகோதரங்களுக்கிடையே அவ்வப்போது சலசலப்புகள், பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் மற்றொரு பக்கம் மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். கடலோரத்தில் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்க எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசி அதிபதியும் ஆறாம் இட அதிபதியுமான செவ்வாய் இனி ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 5ஆம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். காதல் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். வண்ண கனவுகள் வந்து செல்லும். பணி செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி கிடைக்கும் காலம் இதுவாகும். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

ராசிக்கு ஐந்து மற்றும் 12ஆம் அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம். உங்களுடைய சுகஸ்தானமான 4ஆம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில காரியங்கள் தடைப்பட்டு முடிவடையும். முதல் முயற்சியிலேயே எந்த வேலைகளையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். பணி செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். டென்சனை குறைத்துக்கொண்டால் வெற்றியும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்ட வாஸ்து செய்யலாம். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கலாம்.

 மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் 11ஆம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசியல்வாதிகளின் நட்பு அதிகரிக்கும். ஏழரைச் சனி நடைபெறுவதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். எங்கிருந்தாவது வந்து பணம் கொட்டும். பங்குச்சந்தைகளில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் அதிகரிக்கும். மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நன்மைகள் அதிகம் நடைபெற செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கவும்.

கும்பம்

கும்பம்

ராசிக்கு மூன்று மற்றும் பத்தாம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் இதுநாள் வரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்தார். இனி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளிடையே உற்சாகம் பிறக்கும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம். வேலை செய்யும் இடத்திலும் பேச்சிற்கு மதிப்பு கூடும். செவ்வாய் 2ஆம் வீட்டில் வாக்கு ஸ்தானத்தில் நிற்பதால் கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. திருப்பரங்குன்றம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நன்மைகள் நல்லதே நடக்கும்.

மீனம்

மீனம்

ராசிக்கு இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். குரு மங்கள யோகம் கூடி வந்துள்ளது. உங்கள் உடல் நலனில் உற்சாகம் பிறக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டமாகும். அதிர்ஷ்டம் தேடி வரும். உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். வீட்டில் தம்பதியரிடையே வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போனால் வீண் சண்டைகளை தவிர்த்து விடலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரக்கூடும். சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண் வலி, சின்ன சின்ன நெருப்புக் காயங்களெல்லாம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. செவ்வாய்கிழமைகளில் பழனிமலை ஆண்டவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

English summary
Sevvai peyarchi palan 2022 Tamil ( செவ்வாய் பெயர்ச்சி பலன் 2022) Let us discuss the effects of Mars transit in Pisces for all 12 zodiac signs From may 17th 2022 to June 25th 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X