For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷடாசீதி புண்ணிய காலம்: ஆனி மாத பிறக்கும் போது சிவனை வணங்கினால் கேட்டது கிடைக்கும்

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறக்கப் போகிறது. ஆனி மாதம் ஷடசீதி புண்ணியகாலமாகும். இந்த காலம் சிவபெருமானுக்கு உகந்த காலமாகும். சிவபெருமானை நினைத்து வழிபட நன்மைகள் நடைபெறும்.

Google Oneindia Tamil News

சென்னை: ஷடாங்கன் என்றால் சிவன். சிவனுக்குாிய மாதங்கள் ஆனி, புரட்டாசி, மாா்கழி, பங்குனி, இந்த மாதங்கள் பிறக்கும் நேரமே ஷடசீதி புண்ணியகாலம். நாளைய தினம் ஆனி மாதம் பிறக்கிறது. ஆனி 1 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 5-54 முதல் 24 மணி நேரம் சிவனுக்கு விசேஷமான 'ஷடசீதி புண்ணிய காலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி 1 ம் தேதி ஆக வருடத்தில் நான்கு ஷட சீதி புண்ணிய காலம் வரும். ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவன், சக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனி சிறப்பினைத் தரும்.

விஷுவகன் என்றால் பிரம்மா. பிரம்மாவுக்குாிய மாதங்கள் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. இதில் சித்திரை மற்றும் ஐப்பசி மாத பிறப்பு விஷு புண்ணியகாலம். ஆடி மாதம் தட்சிணாயன புண்ணியகாலம், தை மாதம் உத்திராயன புண்ணியகாலம்

பகவான் விஷ்ணுவுக்குாிய மாதங்கள் வைகாசி, ஆவணி, காா்த்திகை, மாசி மாதங்கள். இந்த மாதங்கள் மாதங்கள் பிறக்கும் நேரமே விஷ்ணு பதி புண்ணியகாலம்

5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும் 5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும் "கொரோனா திட்டம்".. சென்னையில் அமலுக்கு வந்த புது யுக்தி!

ஷடசீதி புண்ணிய காலம்

ஷடசீதி புண்ணிய காலம்

சிவ பெருமானுக்கு மிக பிரியமான மேஷம், கடகம், கன்னி, கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் இந்த நாளில் சிவன், சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு ஆற்றலையும் மன மகிழ்ச்சியையும் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. அன்றைய தினம் முழுவதும் முடிந்தவரை சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். இப்போது ஆலயங்கள் மூடப்பட்டுள்ளதால் கோவிலுக்கு போக முடியாது வீட்டிலேயே சிவ சிந்தனையோடு இருப்பது நல்லது.

நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்

இந்த நாளில் சிவன், சக்தியிடம் நீங்கள் வைத்த கோரிக்கை, அடுத்துவரும் மூன்று ஷடசீதி புண்ணிய காலத்திற்குள் நிச்சயம் நிறைவேறும்.
இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால், பித்ருக்களின் ஆசியும், உதவிகளும் நிச்சயம் கிடைக்கும். திரு என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை வழிபட்டு வருவது சிறப்பினைத் தரும்.

சிவனின் அருள்

சிவனின் அருள்

சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள். தேவர்களுக்கு எல்லாம் தேவர் மகா தேவர், மகேஸ்வரன். சிவன் எளிமையானவர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். சிவனின் அடி முதல் முடி வரை நமது வாழ்வியல் குறித்தும் பண்பு நலன்கள் குறித்து சூசகமாக பல விசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

சிவனின் தோற்றம்

சிவனின் தோற்றம்

சிவன் எளிமையானவராக இருந்தாலும் அவரது உடல்திறன் வலிமையானது. திடகாத்திரமாகவும் இருக்கும். இதன் மூலம் எளிமையானவர்களின் வாழ்க்கைதான் வலிமையாக திடமான நிலைக்கு செல்லும் என்பதை உணரலாம். ஜடாமுடி, நெற்றிக்கண், திரிசூலம், சாம்பல் பூசிய தோற்றம், நாகம், நீலகண்டம், உடுக்கை, நாகம், கங்கை கமண்டலம் என அனைத்துமே மனித வாழ்க்கைக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது. நான் எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதை சிவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

English summary
When is Shadasheeti Punyakalam in 2020? Know about Shadasheeti Punyakalam and the day and date on which Shadasheeti Punyakalam falls this year. Shadasheeti Punyakalam on 15th June 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X