For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம் 2020: கிரகணங்களின் தீய கதிர்வீச்சில் இருந்து காக்கும் தர்ப்பை புல்

தர்ப்பைப்புல்லுக்கு கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க தர்ப்பையை பயன்படுத்துகிறோம்.

Google Oneindia Tamil News

சென்னை: தர்ப்பைப்புல் கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. எனவே கிரகண காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க தர்ப்பையை பயன்படுத்துகிறோம்.

Recommended Video

    கிரகணத்தின் போது கோவில்களை மூடுவது என்ன காரணம் தெரியுமா?

    ஜோதிடத்தில் தர்ப்பைபுல்லுக்கு காரகராக மூன்று கிரகங்களை கூறலாம். தர்ப்பையின் புனிதத்தன்மையின் காரணமாக குருவையும் பித்ருகாரியங்களுக்கும் பயன்படுவதாலும் மருத்துவதன்மையின் காரணமாகவும் சனியை காரகராகவும் புல்வகை தாவரங்களுக்கு கேது காரகர் எனவும் கூறலாம்.

    தர்ப்பைப் புல்லை பிராமணர்களிடமும் நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். தர்ப்பை புல் புனிதமானது. எனவேதான் வைதீக காரியங்கள் செய்யும் போது அவை தடைபடாமல் இருக்க நாம் தர்ப்பையை அணிகிறோம். நாம் எடுத்துக்கொண்ட காரியம் முடியும் வரைக்கும் நாம் தர்ப்பையை கையில் இருந்து கழற்றுவதில்லை.

    தர்ப்பை புல்லின் மகத்துவம்

    தர்ப்பை புல்லின் மகத்துவம்

    தர்ப்பைப்புல் எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்ப்பைப்புல் கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரகண காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க தர்ப்பையை பயன்படுத்துகிறோம். சூரிய, சந்திர கிரகண காலங்களில் வெளியாகும் தீய கதிர்வீச்சுக்கள் உணவுப்பொருட்களை தாக்காதவாறு நாம் தர்ப்பையை போட்டு வைக்கிறோம். இதனால் உணவுப்பொருட்கள் கெடாதவாறு தர்ப்பை தடுக்கும்.

    அசுரனுக்கு எதிரான போர்

    அசுரனுக்கு எதிரான போர்

    விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.

    புனித தீர்த்தங்களின் மகிமை

    புனித தீர்த்தங்களின் மகிமை

    தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான்.
    இதைக் கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.

    புனிதமான தர்ப்பை

    புனிதமான தர்ப்பை

    தர்ப்பத்தினாலான பாய் மிகவும் விசேஷம். தர்பாசனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு. கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் சங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது. கிரகண காலங்களில் நம் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப்பொருட்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

    குரு சனி கேது சேர்க்கை

    குரு சனி கேது சேர்க்கை

    ஜோதிடத்தில் தர்ப்பைபுல்லுக்கு காரகராக மூன்று கிரகங்களை கூறலாம். தர்ப்பையின் புனிதத்தன்மையின் காரணமாக குருவையும் பித்ருகாரியங்களுக்கும் பயன்படுவதாலும் மருத்துதன்மையின் காரணமாகவும் சனியை காரகராகவும் புல்வகை தாவரங்களுக்கு கேது காரகர் எனவும் கூறலாம். ஆன்மீக உச்சத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் குரு சனி மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கும்.

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்

    அதிகப்படியான பயன்பாடு பித்ருகாரியங்களில் வருவதால் தர்ப்பையின் முதன்மை காரகராக சனியை கூறலாம். மேலும் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் பரிகார ஸ்தலமான திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பை காட்டில் அமைந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்றும், சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.

    English summary
    At the time of eclipse, people place that grass in food items that could ferment and once the eclipse ends the grass is removed. Since Vedic age, Darbha grass is treated as sacred plant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X