For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகருக்கு மாலை சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் : கொரோனா லாக் டவுன் கடவுளுக்கு இல்லை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிப்பதற்கான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொரோனா லாக் டவுன் காலத்தில் பல கோவில்களில் முக்கிய திருவிழாக்கள்

Google Oneindia Tamil News

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிப்பதற்கான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கினால் விழா ரத்தான நிலையிலும் ஆகாம விதிப்படி கள்ளழகருக்கு பூஜை வழிபாடு நடப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு மாலை கொண்டு செல்லப்பட்டது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறதாம்.

Recommended Video

    மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது

    கொரோனா லாக் டவுன் காலத்தில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, சித்திரை திருவிழா உள்ளிட்ட பல கோவில்களில் முக்கிய திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டாலும் கடவுளுக்கு லாக்டவுன் பொருந்தாது என்பதை உணர்த்தும் வகையில் ஆண்டாள் சூடிய மாலை அழகருக்கு அணிவிக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    சித்ரா பௌர்ணமி வந்தது.. அழகர் மதுரைக்கு வரவில்லை.. ஆற்றிலும் இறங்கவில்லை.. சோகத்தில் பக்தர்கள்!சித்ரா பௌர்ணமி வந்தது.. அழகர் மதுரைக்கு வரவில்லை.. ஆற்றிலும் இறங்கவில்லை.. சோகத்தில் பக்தர்கள்!

    திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் போது, ஆண்டாள் மாலை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணத்துக்கான பட்டுப் புடவை வருகிறது. ஆண்டாளுக்கு பெருமாளுக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கிறது.

    கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை

    கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை

    மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கும் கள்ளழகர் நள்ளிரவில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் அணிந்து கொண்டுதான் தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகையில் இறங்குவார். இது பலநூறு ஆண்டுகாலமாக நடந்து வரும் சம்பவம். இந்த ஆண்டு கள்ளழகர் மதுரைக்கு வராவிட்டாலும் கோவிலிலேயே கருட வாகனத்தில் வந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். அவருக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை சென்றுள்ளது.

    அழகரை ஆளும் ஆண்டாள்

    அழகரை ஆளும் ஆண்டாள்

    மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலமும் ஒன்று! ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். மேலும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு பேர் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. ஆண்டாள் பூமாதேவியின் அம்சம். துளசி வனத்தில் அவதரித்தவர்.

    மாலை சூடி மகிழ்ந்த கோதை

    மாலை சூடி மகிழ்ந்த கோதை

    கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள். நந்தவனத்தில் பறித்த பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு அணிவிப்பார். ஒருநாள் இறைவனுக்கு கட்டிய மாலையில் ஒரு நீளமான தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை மாலையாக கட்டி பெருமாளுக்கு சூட்டினார்.

    பெருமாளுக்கு ஆண்டாள் மாலை

    பெருமாளுக்கு ஆண்டாள் மாலை

    உடனே இறைவன், கோதை சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்று கேட்டு வாங்கி அணித்தார். இறைவனையே விரும்பி மணந்து அவரோடு ஐக்கியமானார் ஆண்டாள் நாச்சியார். இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் வடபத்ரசயனர் கோயில் அமைந்துள்ளது. வடபத்ர சயனருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடிக் கொடுத்தாள். இன்றைக்கும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

    அழகருக்கு வேண்டுதல் வைத்த ஆண்டாள்

    அழகருக்கு வேண்டுதல் வைத்த ஆண்டாள்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்.
    ஆண்டாளுக்கு ஒரு திருமாலிருஞ்சோலை திருமாலிடம் ஒரு பிரார்த்தனை, வேண்டுதல் இருந்தது. அதை தன் நாச்சியார் திருமொழியிலேயே சொல்லியிருக்கிறார். திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு நூறு அண்டாக்கள் நிறைய சர்க்கரைப் பொங்கல் படைத்து கண்டருளப் பண்ணவேண்டும் என்பதே ஆண்டாளின் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றியர் ஸ்ரீராமானுஜர்.

    நெய் வழிய அக்கார அடிசல்

    நெய் வழிய அக்கார அடிசல்

    ஆண்டாளுக்கு சில நூறு ஆண்டுகள் பின்னால் அவதரித்தவர் ராமானுஜர். அவர் திருமாலிருஞ்சோலை பெருமாளை பார்த்த போது ஆண்டாளின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. 100 அண்டாக்களில் நெய் வழிய வழிய அக்கார அடிசில் செய்து பெருமாளுக்கு படைத்தார் ராமானுஜர். தங்கையின் வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை ஆண்டாளின் சகோதரனாக கொண்டாடுகின்றனர் வைஷ்ணவர்கள். திருவரங்கம், திருமாலிருஞ்சோலை இரு தலங்களிலும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் தரிசனம் அருள்கிறாள். இன்றைக்கும் ஆண்டாள் சார்பாக மார்கழி மாதம் கூடாரவல்லி தினத்தில் அக்கார அடிசல் படைத்து வழிபடுகின்றனர்.

    English summary
    The garland that adorned Sri Andal will come from Srivilliputtur every year during Chitirai festival. Only by wearing that garland, Sri Azhagar enter into the Vaigai river in Kuthirai Vahanm.Sri Andal prayed to offer Akkara adisil to Sri Azhagar in this temple, if her desire to marry Shri Mahavishnu would be fulfilled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X