For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி தேர்வு பயமா? பதற்றம் நீங்க மந்திரம் படிங்க - மன அழுத்தம் ஒடிப்போகும்

தேர்வு என்றாலே மன அழுத்தமும் பதற்றமும் அதிகரித்து விடுகிறது. கொரோனா வைரஸ் நோய் தாக்கிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம், படித்தது மறந்து விட்டதே என்ற பயம் மறுபக்கம் மாணவர்களை வாட்டி வதைக்கிறது. இந்த மன அழு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று பயம் ஒரு பக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருக்கும் ஆல் பாஸ் போட்டாச்சு நமக்கு மட்டும் பரிட்சை வைக்கணுமா என்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் கேட்க, எப்பாடு பட்டாவது தேர்வுகளை எழுதியே ஆகவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை மாற்றி மாற்றி அட்டவணைகளை வெளியிட்டு ஒருவித பதற்றநிலையை உருவாக்கி வருகிறது. மாணவர்களின் பதற்றம் நீங்கவும் மன அழுத்தம் போகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிக்கலாம்.

இன்றைக்கு வீட்டில் முடங்கியிருக்கும் பெரியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பலரும் இன்றைக்கு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மன அழுத்தம் நம் மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் சேர்த்து பாதிக்க கூடியது. இப்போது தேர்வு பயம் மாணவர்களையும் பாதிப்பதோடு பெற்றோர்களையும் பதற்றப்படுத்துகிறது. மன அழுத்தம் நீங்கி நேர்மறை சக்திகளை அதிகரிக்க சில மந்திரங்களை உச்சரிக்கலாம். மந்திரங்களை கேட்கலாம். மந்திரங்களை உச்சரிப்பதன் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நினைவாற்றலை அதிகமாக்கும். தடைகளை தகர்த்து வெற்றிகளை நம் கைவசமாக்கும்.

ராகு பெயர்ச்சி 2020: திருவாதிரையில் இருந்து இடம் மாறும் ராகு - கொரோனா அடங்குமாராகு பெயர்ச்சி 2020: திருவாதிரையில் இருந்து இடம் மாறும் ராகு - கொரோனா அடங்குமா

சரஸ்வதி வாக்கின் அதிபதி. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு சொல்வதால் மனம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். காயத்ரி மந்திரத்தை காலை 4:30 மணி முதல் சொல்ல துவங்க வேண்டும். 108 முறை ஜபிப்பது மரபு. மாலையில் விளக்கேற்றியதும் இதே போல ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்

ஓம் பூர் : புவ : ஸ்வ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந : ப்ரசோதயாத்

சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தக் கூடியது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம்தான் காயத்ரி. பதற்றத்தை தணிக்கும் தடைகளை நீக்கும். மூளையை பிரகாசிக்கச் செய்யும்.

பதற்றம் தணிக்கும் மந்திரம்

பதற்றம் தணிக்கும் மந்திரம்

நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாகி விடுவார்கள். எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா

அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்வதன் மூலம் பதற்றம் தணியும். மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வை பயமின்றி எதிர்கொள்ளலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும் படித்து உள்வாங்கிய விஷயங்களை தெளிவாக
தேர்வுகளில் விடை எழுதலாம்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

நினைவாற்றல் அதிகரிக்கும்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற சரஸ்வதி தேவியை வணங்குங்கள். சரஸ்வதி மந்திரத்தை தினமும் 9 முறை உச்சரிக்க நினைவாற்றல் அதிகமாகும்.

‘ஓம் வாக்தேவ்யை ச
வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீ
ப்ரசோதயாத்'

வெற்றி தரும் மந்திரம்

வெற்றி தரும் மந்திரம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் திட்டமிட்டு படித்த பாடம், பொதுத் தேர்வு அன்று முழு வெற்றியைத் தர விநாயகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே'

மிதுனம் ராசிக்காரர்கள் புத்திசாலிகள் உடன்படிக்கும் நண்பர்களுக்கு பாடத்தை புரிய வைக்கும் வல்லமை பெற்ற நீங்கள், பொதுத் தேர்வில் முழு மதிப்பெண் பெற மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது நன்மை தரும். இந்த மந்திரத்தை தினமும் 5 முறை பாராயணம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள்.

‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி தந்தோ
விஷ்ணு: ப்ரசோதயாத்'

சாதனை மந்திரங்கள்

சாதனை மந்திரங்கள்

கடக ராசிக்காரர்கள் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள். அதிர்ஷ்ட நிறம் வெண்மை. அபிராமி அன்னையை வழிபட வேண்டும்.
தேர்வில் வெற்றிகள் தேடி வரும்.

‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

சூரிய மந்திரம்

சூரிய மந்திரம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே நீங்கள் தினமும் உங்கள் ராசிநாதனான சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.

‘ஓம் நமோ ஆதித்யாய..
ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா!' என்ற மந்திரத்தை தினமும் காலை நேரத்தில் சூரிய நமஸ்காரணம் செய்யும் போது பாராயணம் செய்து வர பதற்றம் நீங்கும்.

லட்சுமி ஹயக்ரீவர் மந்திரம்

லட்சுமி ஹயக்ரீவர் மந்திரம்

புத பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் லட்சுமி ஹயக்ரீவரை வணங்குங்கள். இந்த மந்திரத்தை தினமும் 5 முறை படித்து ஹயக்ரீவரை வழிபாடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.

‘ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே'

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற புவனேஸ்வரி அம்மனை வழிபாடு செய்யுங்கள்.

‘ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
புவனேஸ்வர்யை நமஹ'என்ற மந்திரத்தை சொல்ல சாதனைகள் தேடி வரும்.

வெற்றி தரும் மந்திரங்கள்

வெற்றி தரும் மந்திரங்கள்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே உங்கள் லட்சியம் நிறைவேற, கீழ்கண்ட மந்திரத்தை உச்சரியுங்கள் தேர்வில் வெற்றிகள் தேடி வரும்.

‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு'

குரு கவச பாடல்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே குரு கவச பாடலை மூன்று முறை பாட வேண்டும்.
‘குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்'

ஆஞ்சநேயர் வழிபாடு

ஆஞ்சநேயர் வழிபாடு

சனி பகவானை ராசி அதிபதியாக மகரம் ராசிக்காரர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற ராம பக்தர் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்ற மந்திரத்தை 8 முறை பாராயணம் செய்து அனுமனை வழிபாடு செய்து வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.

‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்'என்று மந்திரம் சொல்ல நினைவாற்றல் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்கார மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற

‘குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'

என்ற மந்திரம் சொல்வதோடு ஒருமுறை சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வரலாம்.

English summary
SSLC exams will begin on June 15th 2020. Students dont fear exam Chant this power ful mantras to Improve Education, Knowledge and Memory Power durning Exams periods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X