For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய கிரகணம் 2020: கர்ப்பிணிகள் கவனமாக இருங்க - கொரோனா பாதிப்பு குறையுமா

சூரிய கிரகணம் நிகழும் போது வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மூலம் குழந்தையின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் தோஷம் ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஜோதிடர்கள் எச்சரிக்கி

Google Oneindia Tamil News

சென்னை: சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் நிகழும் போது வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மூலம் குழந்தையின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் தோஷம் ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். ஞாயிறுக் கிழமையான இன்று இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள் ஞாயிறு என்பதால் இந்த சூரிய கிரகணம் கொரோனா நோய் தொற்று பாதிப்பை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    சூரிய கிரகணத்துக்கும் கொரோனாவுக்கும் இருக்கும் சம்பந்தம்... சென்னை விஞ்ஞானி சொன்ன தகவல்

    இந்த கிரகணம் மிதுனம் ராசியில் மிருகஷீரிடம் திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழ்கிறது. இந்த கிரகணம் நிகழும் போது ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, அவிட்டம், சதயம், ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும். இந்த நட்சத்திரகாரர்கள் ஜூன் 23ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்த சூரிய கிரகணம் சக்தி வாய்ந்தது. ரிங் ஆஃப் பயர் அதாவது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக நிகழ்கிறது. சூரிய கிரகணம் நிகழும் போது வெறும் கண்ணால் யாரும் பார்க்கக் கூடாது. சமையல் செய்யக்கூடாது. சாப்பிடக்கூடாது, நகம் கிள்ளக்கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது கர்ப்பிணிப் பெண்கள் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது.

    இன்று சனி அமாவாசை - பித்ரு தர்ப்பணம் செய்தால் பல தலைமுறை சாபங்கள் நீங்கும்இன்று சனி அமாவாசை - பித்ரு தர்ப்பணம் செய்தால் பல தலைமுறை சாபங்கள் நீங்கும்

    கொரோனா பாதிப்பு எப்போது குறையும்

    கொரோனா பாதிப்பு எப்போது குறையும்

    கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பினால் உலகமே முடங்கியுள்ளது. இந்த பாதிப்பு நீங்கி உலகம் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிசம்பர் மாதம் தனுசு ராசியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது இப்போது மிதுனம் ராசியில் சூரிய கிரகணம் நிகழ்வதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.

    கிரகணத்தினால் பாதிப்பு

    கிரகணத்தினால் பாதிப்பு

    கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    தாம்பத்ய உறவு கூடாது

    தாம்பத்ய உறவு கூடாது

    கிரகண காலத்தில் எண்ணெய் தேய்க்காதீங்க. தாம்பத்ய உறவு கூடவே கூடாது. ஏனெனில் கிரகண நேரத்தில் உறவு கொள்ளும் போது கரு உருவானால் அது குறைபாடுள்ள குழந்தையே பிறக்க வாய்ப்பு உள்ளது.

    கதிர் வீச்சுக்களால் பாதிப்பு

    கதிர் வீச்சுக்களால் பாதிப்பு

    கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிகள் ஒருவேளை வெளியே வர நேரிட்டால் கதிர்வீச்சு வெளி வெளிச்சம் பட்டு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கலாம். இது குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் எந்த காரணத்திற்காகவும் கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க.

    பத்திரமாக இருங்க

    பத்திரமாக இருங்க

    கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது, கூர்மையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது, கத்தரி கொண்டு துணிகளை வெட்டக்கூடாது என்றும் அதையும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் பிளவு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது.

    சூரிய கிரகண பரிகாரம்

    சூரிய கிரகண பரிகாரம்

    ஞாயிறுக் கிழமை இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த சூரிய கிரகணம் கொரோனா நோய் தொற்று பாதிப்பை குறைக்குமா அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கிரகணத்தினால் வியாபாரிகள், பணியாளர்களுக்கு நன்மை நடைபெறும். மழை குறைந்து விவசாய உற்பத்தி பாதிக்கும் அண்டை நாடுகளுடனான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    சூரியனின் காயத்ரி மந்திரம்

    சூரியனின் காயத்ரி மந்திரம்

    சூரிய கிரகணம் நிகழம் போது சூரியனுக்கு உகந்த மந்திரத்தை சொல்வது நல்லது. இதனால் கிரகண தோஷம் குறையும்

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.

    காலையில் சூரியன் உதிக்கும் போது

    ஓம் பாஸ்கராய வித்மஹே

    திவாகராய தீமஹி

    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் கிரகண தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

    English summary
    India will witness the Annular Solar Eclipse on Today. This particular eclipse is said to be the 'deepest' annular solar eclipse in nearly a hundred years. The Solar Eclipse kill coronavirus this question has become a popular query on Google search results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X