For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி பிரம்மோற்சவம் 2020 - பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் ஏழுமலையான் கோவில்

பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவில் சிறப்பு அலங்காரத்தில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது.

Google Oneindia Tamil News

திருப்பதி: பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவில் சிறப்பு அலங்காரத்தில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில ஆயிரம் பேர் மட்டுமே திருமலைக்கு வந்துள்ளனர்.

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு
வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ஆம்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியின்போது ஏழுமலையானின் சேனாதிபதி யான விஸ்வகேசவர் நான்கு மாட வீதிகளில் பவனி வந்துபிரம்மோற்சவ ஏற்பாடுகளைமேற்பார்வையிடுவார் என்பது ஐதீகம். கொரோனா காலமாக இருப்பதால் அதிக அளவில் கூட்டமின்றி அங்குரார்ப்பணம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்ஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்

கொடியேற்றம்

கொடியேற்றம்

இன்றைய தினம் பெருமாளின் வாகனமான கருடனின் உருவம் வரையப்பட்ட கொடியை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக்கொடிமரத்தில் ஏற்றுகின்றனர். இதைதொடர்ந்து முதல் உற்சவமாக பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி ஏகாந்தமாக உலா வருகிறார்.

மலையப்பசுவாமி வாகன உலா

மலையப்பசுவாமி வாகன உலா

செப்டம்பர் 20ஆம் தேதி சின்ன சேஷ வாகனம், அன்னப்பறவை வாகனம், 21ல் சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், 22ஆம் தேதி கல்ப விருட்சம் சர்வ பூபால வாகனம், செப்டம்பர் 23 மோகினி அவதாரம், கருட சேவை, செப்டம்பர் 24 அனுமந்த வாகனம், யானை வாகனம், செப்டம்பர் 25 சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனங்கள். செப்டம்பர் 26 குதிரை வாகனம். செப்டம்பர் 27 தீர்த்தவாரி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

தங்க ரதம் ரத்து

தங்க ரதம் ரத்து

திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக இந்தாண்டு பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தங்க ரதம் மற்றும் திருத்தோ் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்நாள்களில் உற்சவமூா்த்திகள் மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் எழுந்தருள்வா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜொலிக்கும் திருமலை

ஜொலிக்கும் திருமலை

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த ஆண்டு திருமலையில் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் பக்தா்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இந்த ஆண்டு பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு தரிசனம், விஐபி பிரேக் தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

English summary
The Thirumalai Ezhumalayan Temple shines like a Bhoolaga Vaikuntha in special attire ahead of the Brahmorsavam. Tens of thousands of devotees visit Thirumalai every year on the days of Brahmacharya. Only a few thousand people have come to Tirumala this year due to the corona spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X