உதயநிதிக்கு பாக்ய குரு, பாக்ய சனி... பதவியை பெற்றுத்தருமா?
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் ராஜகிரகங்களின் ஆதரவு இருந்தால் அரசாளும் யோகம் வரும் என்பார்கள். தாத்தா வழியில் அப்பாவின் ஆசியுடன் தேர்தல் பிரச்சார பயணம் கிளம்பியுள்ள உதயநிதியின் ஜாதகத்தில் கிரகங்கள் யோகம் பெற்று கிரகமாலிகா யோகத்துடன் உள்ளதால்தான் அவருக்கு சென்ற இடத்தில் எல்லாம் தொண்டர்கள் கூட்டம் கூடுகிறது. அப்பா முதல்வர் ஆக வேண்டும் என்று உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது. அவரது யோகத்திற்கு அவரே உதயநிதி என்னும் நான் என்று பதவியேற்றாலும் ஆச்சரியமில்லை.
ஒருவரிடம் மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம் சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும்.
ராஜ கிரகங்களில் சூரியன் ஆளுமைத்திறனுக்கும், செவ்வாய் மனிதநேயத்திற்கும், குருவும் சந்திரனும் மக்கள் செல்வாக்கிற்கும் புதன் ராஜ தந்திரத்திற்கும் சனி தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுத்தரும்.
கொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி

உதயநிதியின் ராசி
ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு மேஷம் லக்னம், சந்திரன் உச்சம் பெற்றுள்ளார். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு ராசிகளில் கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன.

கிரகமாலிகா யோகம்
ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன இதுவே கிரகமாலிகா யோகம். இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

குருவும் சனியும் கூட்டணி
குரு பெயர்ச்சியாகி மகரம் ராசியில் அமர்ந்துள்ளார். ரிஷபம் ராசிக்கு 9ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தில் குரு அமர்ந்து உள்ளது.
சனிபகவானும் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். குரு பார்வை ரிஷபம் ராசிக்கு கிடைக்கிறது. குரு பெயர்ச்சி முடிந்த பின்னரே தனது பிரச்சார பயணத்தை தொடங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

முதல்வராகும் வாய்ப்பு
உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். இன்று இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தில் திமுக கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். உதயநிதியின் ஜாதகத்தை பல வருடங்களுக்கு முன்பு பார்த்த பிரபல ஜோதிடர் ஒருவர் இவருக்கு வளமான பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும். இவர் அதிர்ஷ்டகரமானவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அப்பாவை விட புகழ்பெறுவார். தாத்தாவைப் போல சிறந்த வெற்றி பெறுவார் என்றும் கூறியிருக்கிறார்.

தாத்தா அப்பா வழியில் பேரன்
வாரிசுகள் சினிமாவிலோ அரசியலிலோ நுழைவது எளிது. அதே நேரத்தில் அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதேபோலத்தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஓராளவு ஜெயித்த பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு யோகங்கள் கை கொடுக்குமா? தொண்டர்களின் கேள்விகளுக்கு சட்டசபை தேர்தல் பதில் சொல்லிவிடும்.